Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   149) நிறைவாழ்வை நோக்கித் திருப்பயணம்  
நிறைவாழ்வை நோக்கித் திருப்பயணம்
பாருலகில் செல்லுவோம் - அருள்
வாழ்வு தரும் வார்த்தைகளால்
நன்மைகளை நாம் செய்வோம்

செல்வோம் விரைந்து செல்வோம் - நிறை
வாழ்வை நோக்கியே செல்வோம்
செல்வோம் விரைந்து செல்வோம் - இனி
புதியதோர் உலகினை செய்வோம்

சுமை சுமக்கும் தோள்களுக்கு வலிமையினை ஊட்டுவோம்
சுகம் மறந்த மாந்தருக்கு வளமையினைக் காட்டுவோம்
இருகரங்கள் விரித்திங்கு வாடுவோரைத் தேற்றுவோம் (2)
இறையரசின் கனவுகளை நாடுதோறும் சாற்றுவோம்

பரிவிரக்கம் சாந்தம் அன்பு பொறுமை கொள்வோம்
மகிழ்ச்சியிலும் அமைதியாக அடக்கமுடன் வாழுவோம்
விசுவாசம் நன்னயமும் கேடயமாய்த் தாங்கியே (2)
புது இனமாய் புது யுகமாய் வாழ்வு நோக்கி செல்லுவோம்

வாழ்வை நோக்கிப் போகுமிந்த பாதைகள் பயணங்கள்
வாட்கள்வரும் போர்கள்வரும் நொறுக்கப்படும் நிலைவரும்
தடைவரினும் இடர்வரினும் உறுதியுடன் நாம் செல்வோம்
சிலுவைகளை நாம் சுமந்து குருதியோடு வெல்லுவோம்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்