வருகைப்பாடல்கள் | ஆண்டவர் இல்லம் ஆனந்த வெள்ளம் |
ஆண்டவர் இல்லம் ஆனந்த வெள்ளம் வாராய் திருக்குலமே நம் வேண்டுதல் எல்லாம் கேட்டிட அழைத்தார் இனியெல்லாம் நலமே இறையாசி பெற்றோரே வாருங்கள் அவர் அருள்மொழி கேளுங்கள் உங்கள் உள்ளங்களில் அமைதி மலர்க உங்கள் இல்லங்களில் சமாதானம் பெறுக நீங்கள் யாவரும் நல்வாழ்வு பெருக உறவுகள் வளம் பெருக- உங்கள் உறவுகள் வளம் பெறுக நமது ஆண்டவரின் ஆலயம் செல்வோம் வாசல் நமக்காக திறந்துள்ளதே அவரின் வார்த்தைகள் நல்வாழ்வு கனிகள் வாழ்வோர் பேறுபெற்றோர் - அதில் வாழ்வோர் பேறுபெற்றோர் இறையாசி பெற்றோரே........ |