Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  58) இயேசுவே என்றும்  


இயேசுவே என்றும் என்னுடன் இருந்து
என்னை நடத்துமையா
என்னை முழுதும் உந்தன் பாதத்தில்
அர்ப்பணம் தந்தேனய்யா (2)

கலங்காதே மகனே என்றழைத்து தம்
கைகளில் என்னைத் தாங்குகின்றார் (2)
கடவுள் நான் உன்னருகில்
காலமும் இருப்பேன் என்கின்றார் (2)

வலிமையும் திடமும் நானாவேன் நம்
வலக்கரம் உன்னைக் காக்கும் என்றார் (2)
எதிரிகள் உன்னைச் சூழ்ந்தாலும்
என் பெயர் உன்னை மீட்கும் என்றார் (2)



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்