• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

தேவ மாதாவின் மன்றாட்டு மாலை

   

தேவ மாதாவின் மன்றாட்டு மாலை


ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
 
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்

பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய சருவேசுரா!
எங்கள்மேல் இரக்கமாயிரும்

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா!
எங்கள்மேல் இரக்கமாயிரும்

பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா! எங்கள்மேல் இரக்கமாயிரும்

தூய திரித்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா! எங்கள்மேல் இரக்கமாயிரும்


புனித மரியாயே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் புனித மாதாவே!
கன்னியருள் உத்தம கன்னிகையே!

கிறிஸ்துவினுடைய மாதாவே!
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே!
மகா பரிசுத்த மாதாவே!

கற்பு நிறைந்த மாதாவே!
பழுதற்ற கன்னியாயிருக்கிற மாதாவே!
கன்னித்தூய்மை கெடாத மாதாவே!

மகாஅன்புக்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே!
ஆச்சரியத்திற்குரிய மாதாவே!
நல்ல ஆலோசனை மாதாவே!

சிருஸ்டிகருடைய மாதாவே!
இரட்சகருடைய மாதாவே!
மகா புத்தியுள்ள கன்னிகையே!

மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே!
மகா புகழ்ச்சிக்குரிய கன்னிகையே!
சக்தியுடையவளாயிருக்கிற கன்னிகையே!

தயையுள்ள கன்னிகையே!
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே!
நீதியின் கண்ணாடியே!

ஞானத்தின் இருப்பிடமே!
எங்கள் மகிழ்ச்சியின் காரணமே!
ஞான பாத்திரமே!

மகிமைக்குரிய பாத்திரமே!
அதிசிறந்த பக்தியுள்ள பாத்திரமே!
மறைபொருளை கொண்டரோஐh மலரே!

தாவீது ராசாவுடைய கோபுரமே!
தந்த மயமாயிருக்கிற கோபுரமே!
பொன் மயமான ஆலயமே!

உடன்படிக்கையின் பேழையே!
பரலோகத்தின் வாசலே!
விடியற்காலத்தின் நட்சத்திரமே!

நோயாளிகளுக்கு ஆரோக்கியமே!
பாவிகளுக்கு அடைக்கலமே!
கஸ்திப்படுவோர்க்கு தேற்றரவே!

கிறிஸ்தவர்களுடைய சகாயமே!
சம்மனசுகளின் இராக்கினியே!
பிதாப்பிதாக்களின் இராக்கினியே!

தீர்க்கதரிசிகளின் இராக்கினியே!
அப்போஸ்தலர்களின் இராக்கினியே!
வேத சாட்சிகளின் இராக்கினியே!

ஸ்துதியர்களுடைய இராக்கினியே!
கன்னியருடைய இராக்கினியே!
எல்லாப் புனிதர்களுடைய இராக்கினியே!

சென்ம பாவமில்லாமல் உற்பவித்த இராக்கினியே!
பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இராக்கினியே!
திருச்செபமாலை இராக்கினியே!

சமாதானத்தின் இராக்கினியே!

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும் சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

இயேசுகிறிஸ்துவினுடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள் ளவர்களாகும்படிக்கு
இறைவனின் தூய அன்னையே, எங்களுக்காக உமது திருக்குமாரனைமன்றாடும்.

செபிப்போமாக!
இறைவா! முழுமனதோடு தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து, எப்பொழுதும் பரிசுத்த தூய கன்னிகையான மரியாளுடைய வேண்டுதலினால் சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமேன்.





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்