Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

செபமாலையின் இரகசியம்

                                                            

   
புனித லூயிஸ் டே மோண்ட்போர்ட் எழுதிய செபமாலையின் இரகசியம் புத்தகத்திலிருந்து.........

முப்பத்திநான்காவது ரோஜா
சைமன் டே மோண்ட்போர்ட், ஆலன் டே லான்வல்லாய் மற்றும் ஒதேரே.

"செபமாலை அன்னையின் உதவியால், சைமன் டே மோண்ட்போர்ட் அவர்கள் ஆல்பிஜென்சிய பதிதர்களுக்கு எதிரான போரில் பெற்ற அதிசயிக்கத்தக்க வெற்றிகளின் தாக்கங்களை முடிவு செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல. இவ்வுலகில் இதனை போன்று புகழ் பெற்ற வெற்றிகள் வேறு எங்கும் நடந்தது இல்லை.

ஒருநாள், அவர் பத்தாயிரம் பதிதர்களை வெறும் ஐநூறு பேரைக் கொண்டு தோற்கடித்தார்!! மற்றோரு சமயம், மூவாயிரம் பேரை வெறும் முப்பது பேரைக் கொண்டு வெற்றி பெற்றார்!!!! கடைசியாக, எண்ணூறு குதிரை வீரர்கள், ஆயிரம் காலாட்படை வீரர்களைக் கொண்டு, அரகோன் அரசரின் முழு படையையும்(ஒரு லட்சம் பேர்) வெறும் ஒரு குதிரைவீரன் மற்றும் எட்டு போர்வீரர்களை இழந்து சிதறடித்தார்!!!!!!

நமதன்னை ஆலன் டே லான்வல்லாய் என்ற பிரெட்டன் போர்வீரரை அதிபயங்கர ஆபத்துகளில் இருந்து பாதுகாத்தார். அவரும் ஆல்பிஜென்சிய பதிதர்களுக்கு எதிரான போரில் கத்தோலிக்க விசுவாசத்தை நிலைநாட்ட போரிட்டார்.

ஒருநாள், அவர் நாலாபக்கமும் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது, நமதன்னை அவரது எதிரிகளின் மேல் நூற்றியைம்பது பாறைகளை விழச் செய்து, அவரை அவரது எதிரிகளின் கையிலிருந்து தப்புவித்தார்.

மற்றொரு நாள், அவரது கப்பல் அலைகளில் தள்ளாடி மூழ்கும் சமயத்தில், பரிசுத்த அன்னை அதிசயிக்கத்தக்க விதத்தில் நூற்றியைம்பது சிறு குன்றுகளை தோன்றச் செய்தார். அதன்மூலம் அவர்கள் பாதுகாப்பாக பிரிட்டனி போய் சேர்ந்தார்கள்.

அவர், நமதன்னை அவரது அனுதின செபமாலை பக்திக்காக அவருக்கு புரிந்த அற்புதங்களுக்கு நன்றியாக புனித டொமினிக்கன் சபை துறவியருக்காக டினான் நகரில் ஒரு துறவியர் மடத்தை நிறுவினார். தானும் ஒரு துறவியாகி, ஆர்லியன்ஸ் நகரில் பரிசுத்தமாக மரித்தார்.

ஒதேரேயும் ஒரு பிரெட்டன் போர்வீரர், வகோலேயர்ஸ் நகரைச் சேர்ந்தவர். அவர், பதிதர்களின் படையணியுடன் அல்லது கொள்ளையர்களுடன் யாருடைய துணை இன்றி, செபமாலையை தனது கரங்களில் அல்லது வாளின் கைப்பிடியில் அணிந்து கொண்டு போரிடுவார்.

ஒருமுறை அவர்களை தோற்கடித்தபோது, அவரது எதிரிகள் அவரது வாள் ஒளிவிட்டு பிரகாசித்ததாக ஒப்புக்கொண்டனர். மற்றொரு முறை அவரது கரத்தில் இருந்த கேடயத்தில், நமதாண்டவர், நமதன்னை மற்றும் புனிதர்களின் படங்கள் இருப்பதைக் கண்டனர். அந்த கேடயம் அவரை பிறர் கண்ணுக்கு மறைவாகவும், நல்ல முறையில் போரிடக்கூடிய ஆற்றலையும் கொடுத்தது.

இன்னொரு முறை , அவர் இருபதினாயிரம் பதிதர்களை, வெறும் பத்து சிறு படையணி (தோராயமாக 2500 பேர்) வீரர்களைக் கொண்டு, ஒரு வீரரையும் இழக்காமல் தோற்கடித்தார். இதனைக் கண்ட பதிதர்களின் படைத்தலைவன் அவரைக் காண வந்து, அனைவரின் முன்னிலையில் தனது தப்பறையைக் கைவிட்டு மனம் மாறினான். மேலும், போரின் பொது ஒதேரேயைச் சுற்றி எரியும் வாள்களைக் கண்டதாக அறிவித்தான்.

**சிந்தனை**
நாமும் அனுதினமும் பரிசுத்த அன்னையிடம் செபமாலை செபித்து, அன்னையின் உதவியுடன், அன்னையின் வழியாக நமதாண்டவரிடம் பாதம் அடைவோமாக.

இயேசுவுக்கே புகழ்!!!!!மாமரித்தாயே வாழ்க!!!!!

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!