• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திருக்குழந்தை மாதா மன்றாட்டு மாலை

   

ஆண்டவரே இரக்கமாயிரும்(2

கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)

ஆண்டவரே இரக்கமாயிரும்(2)

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும்.

பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும்.

திவ்விய திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாவின் குமாரத்தியான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுதனின் தாயான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த ஆவியின் பத்தினியான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அன்னம்மாள் சுவக்கீனின் செபத்தின் கனியான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தமத்திருத்துவத்தின் ஆலயமான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தந்தையின் செல்வமான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாயாரின் இன்பமான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாவின் பெருமையான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாயாரின் பெருமையான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயற்கையின் அதிசயமான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிருபையின் உறைவிடமான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அமல உற்பவியான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறப்பு முதலே பரிசுத்தம் நிறைந்த திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பக்தி நிறை காணிக்கையான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனின் தலை சிறந்த படைப்பான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீதி சூரியனின் விடிவெள்ளியான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் சந்தோசத்தின் ஊற்றான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் தீமைகளை நிர்மூலமாக்கும் திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோகத்தின் ஆனந்தமான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கருணையின் மாதிரியான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாழ்ச்சியின் மாதிரியான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சக்தியுடைத்தான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாந்தம் நிறைந்த திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தூய்மை நிறைந்த திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கீழ்படிதலின் மாதிரியான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாழ்ச்சி நிறை திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாந்தம் நிறைந்த திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா ஆச்சர்யத்துக்குரிய திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா அன்புக்குரிய திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நிகரற்ற திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கஸ்திப்படுவோருக்குத் தேற்றரவான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறிஸ்தவர்களின் சகாயமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சம்மனசுக்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாப்பிதாக்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவாக்கினர்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலர்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மறைசாட்சிகளின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குருக்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குருத்துவத்தின் மகிமையான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துதியர்களின் ஆனந்தமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியரில் உயர் கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனிதர்களின் இராக்கினியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் அன்னையான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் இராக்கினியான திருக்குழந்தை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்களைப் பொறுத்தருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே

மு- ஆண்டவரே, நாங்கள் கூப்பிடுகிற சத்தம்
து- தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.

செபிப்போமாக
சருவேசுரா! தேவரீருடைய தாசராகிய எங்களுக்கு உமது அருளைத் தந்தருளும். ஏனென்றால் பரிசுத்த கன்னியான தேவமாதா தம்முடைய நேசகுமாரனைப் பெற்றதனாலே தேவரீர் எங்களை இரட்சிக்கத் துவங்கினீரே, அந்த அன்னை சென்ம பாவமில்லாமல் உற்பவித்துப் பிறந்த மகிமையைக் கொண்டாடுகிற எங்களுக்குச் சமாதானம் வர்த்திக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவாராகிய அதே யேசுக்கிறிஸ்துவின் பெயரால் ஆமென்.





திருக்குழந்தை மாதா நவநாள்


தாவீதின் பெட்டகமே, திருக்குழந்தை மாதாவே, சம்மனசுக்களின் இராக்கினியே, இரக்கம் நிறை கிருபையின் அன்னையே, உம்மை என் முழுமனதோடே வணங்குகிறேன். என் வாழ்நாளெல்லாம் இறைவனை விசுவாசத்துடன் நேசிக்கும் கிருபையைப் பெற்றுத் தாரும். இறைவனின் அளவில்லாத அன்பின் அடையாளமான அன்னையே, உம்மையும் பக்தியுடன் வணங்கும் வரத்தைப் பெற்றுத் தாரும்

அருள் நிறைந்த மரியே .. .



ஓ தெய்வீகத் திருக்குழந்தை மாதாவே, கபடற்ற புறாவைப் போல அமல உற்பவியாய் உதித்த அழகு நிறை அன்னையே, இறை ஞானத்தின் அதிசயமே, உம்மிலே என் ஆன்மா களிகூர்கிறது. பரிசுத்தத்தின் தெய்வீக நற்குணத்தை நான் எப்பாடுபட்டாயினும் பாதுகாக்கும் வரத்தைப் பெற்றுத் தாரும்

அருள் நிறைந்த மரியே .. .

பரிசுத்தத்தின் அழகு நிறைந்த தெய்வீகத் திருக்குழந்தை மாதாவே, ஆன்மீக மகிழ்ச்சியின் நந்தவனமே, அமலோற்பவ நாளில் தோன்றிய வாழ்வின் விருட்சமே, உலகப் பிரகாரமான சிற்றின்பங்களையும், வீணான அதன் கனிகளையும் நான் புறம்பே தள்ள எனக்கு உதவி செய்யும். உமது திரு மகனின் வார்த்தைகளையும், புனிதத்துவத்தையும் , திருச்சித்தத்தையும் என் இருதயத்தில் பதிக்க உதவி செய்யும்

அருள் நிறைந்த மரியே .. .

போற்றுதற்குரிய தெய்வீகத் திருக்குழந்தை மாதாவே, மறைபொருளைக் கொண்ட ரோஜா மலரே, முத்திரையிடப்பட்ட நந்தவனமே, பரலோகத்தின் நேசமிகு பத்தினியே, பரிசுத்தத்தனத்தின் லீலி மலரே, தாழ்ச்சியை நேசிக்கவும் சுயத்தை வெறுக்கவும் எனக்குக் கற்றுத் தாரும். உமது துணையாளரின் கிருபையின் அழைப்புக்களுக்கு நான் செவிகொடுக்கும்படி என் ஆத்துமத்தை தயார்ப்படுத்தும்

அருள் நிறைந்த மரியே .. .

பரிசுத்த திருக்குழந்தை மாதாவே, மறைபொருளின் விடியலே, பரலோக வாசலே, நீரே எனது நம்பிக்கை. ஆற்றல் மிகு பரிந்துரையாளரே, உமது கரங்களை நீட்டி என் வாழ்க்கைப் பாதையில் எனக்குத் துணை செய்யும். தீவிரத்தோடு மரணம் வரை ஆண்டவருக்குப் பணி புரிய எனக்கு உதவி செய்யும். பரலோகில் உம்முடன் நான் ஆண்டவரைக் காண துணை செய்யும்

அருள் நிறைந்த மரியே .. .


சுருக்கமான வரலாறு


மரியன்னையின் பிறந்த நாளை பல நூற்றாண்டுகளாக செப்டம்பர் எட்டாம் நாள் திருச்சபை கொண்டாடுகிறது . ஆனால் குழந்தை மரியாளின் பக்தி 17 ஆம் நூற்றாண்டில் தான் வளர ஆரம்பித்தது . மரியன்னை தனது திருமணத்திற்கு முன்பு தான் பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார். எனவே அவரது குழந்தைப் பருவம் மற்ற குழந்தைகளைப் போல் சாதாரணமானதே என்று நாம் நினைத்தோமானால் அது மேலோட்டமான சிந்தனை என்று தான் கொள்ள முடியும் . அன்னை மரியாள் ஆதி மனிதன் தவறு செய்த போதே வாக்களிக்கப்பட்டவர். ஆதி முதலே இறைவனின் திட்டத்தில் இருந்தவர் நம் அன்னை. அவரது பிறப்பு அமல உற்பவம் என்று கொண்டாடப்படுகிறது. சென்ம பாவம் இல்லாமல் உலகில் பிறந்த ஒரே ஒருவர் அன்னை மரியாள் மட்டுமே. எனவே அவரது பிறப்பும் குழந்தைப் பருவமும் அத்துணை முக்கியமானது.

இத்தாலிய மொழியில் MARIA BAMBINA என்றால் 'குழந்தை மரியாள் ' என்று பொருள் . திருக்குழந்தை மரியாவின் பக்தி பிரான்சிஸ்கன் சபையின் அருட்சகோதரி இசபெல்லாவினால் ( Sister Isabella Chiara Fornari (1697-1744),) 1730 இல் துவங்கப்பட்டது. அன்னையின் குழந்தைப் பருவ உருவப்படத்தை வரைந்து இப் பக்தி முயற்சியைப் பரப்பினார் . பின்னாளில் இத்தாலியில் உள்ள பிறரன்பின் அருட்சகோதரிகள் சபையில் இணைந்த இவர், இவரது சபை, மிலானில் இருந்த சிசேரி மருத்துவமனையை பொறுப்பில் ஏற்றுக் கொண்டபின் இப்படத்தை மிலான் நகருக்குக் கொண்டு சென்று அங்கிருந்த மடத்தில் வணக்கத்திற்கு ஸ்தாபித்தார்.

இந்த திருப்படமானது மாதாவின் திருநாளான செப் 8 ல் வணக்கத்திற்கு வைக்கப்படும். பின் எட்டு நாட்களுக்கு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். மற்ற நாட்களில் அருட்சகோதரிகளின் அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் . ஒரு நாள் (செப் 9, 1884 ) அருட்சகோதரி ஜோசப்பின் (Sister Josephine Woinovich ) முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையாய் இருந்தார் .தனது படுக்கை அருகில் மாதாவின் படத்தை ஓர் இரவு முழுதும் வைக்க தலைமை சகோதரியிடம் வேண்டினார் . எனவே மாதாவின் திருவுருவப் படத்தை அங்கு கொண்டு வந்த தலைமை அருட்சகோதரி , அங்கு நோயுற்று இருந்த அனைத்து அருட்சகோதரிகளின் அருகே மாதாவின் படத்தை வைத்து, செபிக்கும்படி பணித்தார் .அப்போது அங்கு நோயுற்றிருந்த மற்றொரு அருட்சகோதரி கிலியா(Sis Giulia Macario ) அன்னையின் படத்தைத் தொட்டு வேண்டவே அற்புதமாய்க் குணம் பெற்றார் . அருட்சகோதரி ஜோசப்பினும் குணம் பெற்றார் . அதன் பின் ஏராளமான அற்புதங்கள் நடக்கவே, அன்னையின் பக்தி மடத்திற்கு வெளியே பரவியது . இச்சபைக் கன்னியர் , திருக்குழந்தை மாதாவின் அருட்சகோதரிகள் என்றே அழைக்கப்படலாயினர் .

ஜனவரி 16, 1885 க்குப் பின் அன்னையின் திருப்படம் தானாகவே பொலிவடைந்தது. வர்ணங்கள் மங்கி பொலிவிழந்த நிலையில் இருந்த படம் புதிதாய் வரைந்தது போல ஆனது. இன்று வரை அத்திருப்படம் மடத்தில் உள்ள சிறிய கோவிலில் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் குறிப்பிட்ட நேரம் சென்று செபிக்க அனுமதி உள்ளது.


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்