தொடக்க செபம்: 
					 
					புனித சூசையப்பரே, தகுதியற்ற உமது பிள்ளையாகிய நான் உம்மை வணங்குகிறேன். 
					உம்மை அன்பு செய்து வணங்கும் அனைவருக்கும் நீர் நம்பிக்கைக்குரிய 
					பாதுகாவலரும் பரிந்துரையாளருமாய் இருக்கிறீர். இயேசு மற்றும் 
					மரியாளுக்கு அடுத்ததாக நான் உம்மீது மிகுந்த நம்பிக்கை 
					வைத்துள்ளேன் என்று உமக்குத் தெரியும். ஏனென்றால், கடவுள் 
					திருமுன் நீர் மிகவும் வல்லமையுள்ளவராயும், உம்முடைய நம்பிக்கைக்குரிய 
					பக்தர்களை என்றுக் கைவிடாதவராயும் இருக்கின்றீர்.  
					 
					எனவே, என்னையும், எனக்குரியவர்களையும், எனக்கு உரிமையான அனைத்தையும் 
					உம்முடைய பரிந்துரையின் கீழ் தாழ்மையோடு ஒப்புக்கொடுக்கிறேன். 
					இயேசுவின் மீது மரியாளின் மீது உமக்குள்ள அன்பினால் என் வாழ் 
					நாளில் என்னைக் கைவிடாதிருக்கவும், என் மரண நேரத்தில் எனக்கு 
					உதவியருள வேண்டுமென்றும் உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். மகிமை 
					மிகுந்த புனித சூசையப்பரே, மாசற்ற கன்னியின் கணவரே, கடவுளின் 
					திருவுளத்திற்கு முற்றிலும் அடங்கியிருக்கவும், அறச்சிந்தனையையும், 
					தாழ்ச்சியையும் தூய்மையையும் எனக்கு அடைந்து தந்தருளும். என் 
					தந்தையே, எனக்கு வழிகாட்டியாயிரும். இயேசு மற்றும் மரியாளின் 
					கரங்களில் நீர் மரித்தது போல, நானும் நான் இறக்கும் 
					போது அந்த 
					பேற்றைப் பெற என் வாழ்நாளில் எனக்கு முன்னுதாரணமாயிரும்.  
					 
					அன்புள்ள புனித சூசையப்பரே, இயேசுவின் நம்பிக்கைக்குரிய சீடரே, 
					என்னுடைய ஆன்ம மற்றும் உடல் நலத்திற்கு தேவையான அருளையும் 
					குறிப்பாக நல்ல மரணத்தையும், சிறப்பாக இப்பொழுது நான் வேண்டும் 
					வரத்தையும் இயேசுவின் பரிசுத்த திரு இருதயத்திடமிருந்து அடைந்து 
					தந்தருள உம்முடைய வல்லமையுள்ள பரிந்துரையை வேண்டி என் இதயத்தை 
					உம்மிடம் உயர்த்துகிறேன்.  
					(வேண்டும் வரத்தைக் குறிப்பிடவும்.) 
					 
					மனுவுருவான வார்த்தையின் பாதுகாவலரே, என் சார்பாக நீர் ஏறெடுக்கும் 
					மன்றாட்டு கடவுளின் அரியணையின் முன்பாக கேட்கப்படும் என்று 
					நான் நம்புகிறேன். ஆமென்.  
					 
					முதல் நாள்: 
					புனித சூசையப்பரே, தன்னுடைய தெய்வீக மகனுக்கு உம்மை வளர்ப்புத் 
					தந்தையாக கடவுளால் தெரிந்துகொள்ள நீர் பெற்ற பெரும் 
					பெற்றிற்காய் நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய 
					இந்த சிறந்த பேற்றிற்கு கடவுளுக்கு நன்றியறிதலாக, என் ஆண்டவரும் 
					மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மீது பற்றுறுதியுடன் அன்பு 
					செலுத்தும் அருளை எனக்குப் பெற்றுத் தாரும். இவ்வுலகத்தில் 
					நீர் அவரோடு வாஸ்ந்த 
					போது அவர் மீது நீர் கொண்டிருந்த பக்தியைப் 
					போல நானும் தியாகம் நிறைந்த அன்பினால் அவருக்குப் பணிபுரிய உதவியருளும். 
					உமது வளர்ப்பு மகனாகிய இயேசுவிடம் உமது பரிந்துரையினால் எனக்காக 
					கடவுள் எதிர்பார்க்கும் தூய்மையில் வளர்ந்து என் ஆன்மாவை 
					மீட்டுக்கொள்வேனாக. ஆமென். 
					 
					இறுதி செபம்: 
					என்றும் கன்னியான மரியாளின் பரிசுத்த கணவரே, என்னுடைய அன்பான 
					பாதுகாவலரே, புனித சூசையப்பரே, உம்மை நம்பி உம்முடைய பாதுகாவலை 
					வேண்டி மன்றாடிய எவரும் உமது உதவியைப் பெறாமல் போனதில்லை என்று 
					நினைத்தருளும். எனவே, உம்முடைய நன்மைத்தனத்தில் நம்பிக்கை 
					கொண்டு, தாழ்மையுடன் உம்முன் வந்து வேண்டுகிறேன். மீட்பரின் 
					வளர்ப்புத் தந்தையே, என்னுடைய மன்றாட்டைப் புறக்கணியாமல், தயவாய் 
					அடைந்து தந்தருளும். ஆமென். 
					 
					இரண்டாம் நாள்: 
					 
					தொடக்க செபம்: 
					புனித சூசையப்பரே, தகுதியற்ற உமது பிள்ளையாகிய நான் உம்மை வணங்குகிறேன். 
					உம்மை அன்பு செய்து வணங்கும் அனைவருக்கும் நீர் நம்பிக்கைக்குரிய 
					பாதுகாவலரும் பரிந்துரையாளருமாய் இருக்கிறீர். இயேசு மற்றும் 
					மரியாளுக்கு அடுத்ததாக நான் உம்மீது மிகுந்த நம்பிக்கை 
					வைத்துள்ளேன் என்று உமக்குத் தெரியும். ஏனென்றால், கடவுள் 
					திருமுன் நீர் மிகவும் வல்லமையுள்ளவராயும், உம்முடைய நம்பிக்கைக்குரிய 
					பக்தர்களை என்றுக் கைவிடாதவராயும் இருக்கின்றீர்.  
					 
					எனவே, என்னையும், எனக்குரியவர்களையும், எனக்கு உரிமையான அனைத்தையும் 
					உம்முடைய பரிந்துரையின் கீழ் தாழ்மையோடு ஒப்புக்கொடுக்கிறேன். 
					இயேசுவின் மீது மரியாளின் மீது உமக்குள்ள அன்பினால் என் வாழ் 
					நாளில் என்னைக் கைவிடாதிருக்கவும், என் மரண நேரத்தில் எனக்கு 
					உதவியருள வேண்டுமென்றும் உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். மகிமை 
					மிகுந்த புனித சூசையப்பரே, மாசற்ற கன்னியின் கணவரே, கடவுளின் 
					திருவுளத்திற்கு முற்றிலும் அடங்கியிருக்கவும், அறச்சிந்தனையையும், 
					தாழ்ச்சியையும் தூய்மையையும் எனக்கு அடைந்து தந்தருளும். என் 
					தந்தையே, எனக்கு வழிகாட்டியாயிரும். இயேசு மற்றும் மரியாளின் 
					கரங்களில் நீர் மரித்தது போல, நானும் நான் இறக்கும் 
					போது அந்த 
					பேற்றைப் பெற என் வாழ்நாளில் எனக்கு முன்னுதாரணமாயிரும்.  
					 
					அன்புள்ள புனித சூசையப்பரே, இயேசுவின் நம்பிக்கைக்குரிய சீடரே, 
					என்னுடைய ஆன்ம மற்றும் உடல் நலத்திற்கு தேவையான அருளையும் 
					குறிப்பாக நல்ல மரணத்தையும், சிறப்பாக இப்பொழுது நான் வேண்டும் 
					வரத்தையும் இயேசுவின் பரிசுத்த திரு இருதயத்திடமிருந்து அடைந்து 
					தந்தருள உம்முடைய வல்லமையுள்ள பரிந்துரையை வேண்டி என் இதயத்தை 
					உம்மிடம் உயர்த்துகிறேன்.  
					 
					(வேண்டும் வரத்தைக் குறிப்பிடவும்.) 
					 
					மனுவுருவான வார்த்தையின் பாதுகாவலரே, என் சார்பாக நீர் ஏறெடுக்கும் 
					மன்றாட்டு கடவுளின் அரியணையின் முன்பாக கேட்கப்படும் என்று 
					நான் நம்புகிறேன். ஆமென்.  
					 
					புனித யோசேப்பே, கன்னி மரியாளின் கற்புள்ள கணவாராயிருக்க நீர் 
					பெற்ற பெரும் பாக்கியத்திற்காய் நான் கடவுளுக்கு நன்றி 
					கூறுகிறேன். கடவுளுக்கு உம்முடைய நன்றியறிதலாக, உம்மைப் போல 
					முழு மனதோடு நானும் இயேசுவை அன்பு செய்யவும், நீர் அன்பு செய்ததில் 
					சிறிதளவேணும் கனிவோடும், பற்றுறுதியோடும் அன்னை மரியை அன்பு 
					செய்யவும் தேவையான அருளைப் பெற்றுத் தாரும். ஆமென்.  
					 
					இறுதி செபம்: 
					என்றும் கன்னியான மரியாளின் பரிசுத்த கணவரே, என்னுடைய அன்பான 
					பாதுகாவலரே, புனித சூசையப்பரே, உம்மை நம்பி உம்முடைய பாதுகாவலை 
					வேண்டி மன்றாடிய எவரும் உமது உதவியைப் பெறாமல் போனதில்லை என்று 
					நினைத்தருளும். எனவே, உம்முடைய நன்மைத்தனத்தில் நம்பிக்கை 
					கொண்டு, தாழ்மையுடன் உம்முன் வந்து வேண்டுகிறேன். மீட்பரின் 
					வளர்ப்புத் தந்தையே, என்னுடைய மன்றாட்டைப் புறக்கணியாமல். தயவாய் 
					அடைந்து தந்தருளும். ஆமென். 
					 
					புனித சூசையப்பரை நோக்கி ஒன்பது நாள் நவநாள் செபம் 
					 
					மூன்றாம் நாள்: 
					 
					தொடக்க செபம்: 
					புனித சூசையப்பரே, தகுதியற்ற உமது பிள்ளையாகிய நான் உம்மை வணங்குகிறேன். 
					உம்மை அன்பு செய்து வணங்கும் அனைவருக்கும் நீர் நம்பிக்கைக்குரிய 
					பாதுகாவலரும் பரிந்துரையாளருமாய் இருக்கிறீர். இயேசு மற்றும் 
					மரியாளுக்கு அடுத்ததாக நான் உம்மீது மிகுந்த நம்பிக்கை 
					வைத்துள்ளேன் என்று உமக்குத் தெரியும். ஏனென்றால், கடவுள் 
					திருமுன் நீர் மிகவும் வல்லமையுள்ளவராயும், உம்முடைய நம்பிக்கைக்குரிய 
					பக்தர்களை என்றுக் கைவிடாதவராயும் இருக்கின்றீர்.  
					 
					எனவே, என்னையும், எனக்குரியவர்களையும், எனக்கு உரிமையான அனைத்தையும் 
					உம்முடைய பரிந்துரையின் கீழ் தாழ்மையோடு ஒப்புக்கொடுக்கிறேன். 
					இயேசுவின் மீது மரியாளின் மீது உமக்குள்ள அன்பினால் என் வாழ் 
					நாளில் என்னைக் கைவிடாதிருக்கவும், என் மரண நேரத்தில் எனக்கு 
					உதவியருள வேண்டுமென்றும் உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். மகிமை 
					மிகுந்த புனித சூசையப்பரே, மாசற்ற கன்னியின் கணவரே, கடவுளின் 
					திருவுளத்திற்கு முற்றிலும் அடங்கியிருக்கவும், அறச்சிந்தனையையும், 
					தாழ்ச்சியையும் தூய்மையையும் எனக்கு அடைந்து தந்தருளும். என் 
					தந்தையே, எனக்கு வழிகாட்டியாயிரும். இயேசு மற்றும் மரியாளின் 
					கரங்களில் நீர் மரித்தது போல, நானும் நான் இறக்கும் 
					போது அந்த 
					பேற்றைப் பெற என் வாழ்நாளில் எனக்கு முன்னுதாரணமாயிரும்.  
					 
					அன்புள்ள புனித சூசையப்பரே, இயேசுவின் நம்பிக்கைக்குரிய சீடரே, 
					என்னுடைய ஆன்ம மற்றும் உடல் நலத்திற்கு தேவையான அருளையும் 
					குறிப்பாக நல்ல மரணத்தையும், சிறப்பாக இப்பொழுது நான் வேண்டும் 
					வரத்தையும் இயேசுவின் பரிசுத்த திரு இருதயத்திடமிருந்து அடைந்து 
					தந்தருள உம்முடைய வல்லமையுள்ள பரிந்துரையை வேண்டி என் இதயத்தை 
					உம்மிடம் உயர்த்துகிறேன்.  
					 
					(வேண்டும் வரத்தைக் குறிப்பிடவும்.) 
					 
					மனுவுருவான வார்த்தையின் பாதுகாவலரே, என் சார்பாக நீர் ஏறெடுக்கும் 
					மன்றாட்டு கடவுளின் அரியணையின் முன்பாக கேட்கப்படும் என்று 
					நான் நம்புகிறேன். ஆமென்.  
					 
					புனித யோசேப்பே, கடவுளால் சிறப்பாக தெரிந்துகொள்ளப்பட்ட நபரான 
					உமக்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். அதற்கு கடவுளுக்கு 
					உமது நன்றியறிதலாக, உம்முடைய புண்ணியங்களைப் பின்பற்றி கடவுளுடைய 
					இதயத்திற்கு உகந்தவனாக இருக்க தேவையான அருளைப் பெற்றுத் தந்தருளும். 
					அவருடைய பணியில் முழுமையாக என்னையே ஒப்புக்கொடுக்கவும், அவருடைய 
					திருவுளத்தை நிறைவேற்றவும் எனக்கு உதவியருளும். இதனால், உம்மைப் 
					போலவே ஒருநாள் நானும் விண்ணகம் சேர்ந்து எந்நாளும் கடவுளோடு ஒன்றித்திருப்பேன். 
					ஆமென். 
					 
					இறுதி செபம்: 
					என்றும் கன்னியான மரியாளின் பரிசுத்த கணவரே, என்னுடைய அன்பான 
					பாதுகாவலரே, புனித சூசையப்பரே, உம்மை நம்பி உம்முடைய பாதுகாவலை 
					வேண்டி மன்றாடிய எவரும் உமது உதவியைப் பெறாமல் போனதில்லை என்று 
					நினைத்தருளும். எனவே, உம்முடைய நன்மைத்தனத்தில் நம்பிக்கை 
					கொண்டு, தாழ்மையுடன் உம்முன் வந்து வேண்டுகிறேன். மீட்பரின் 
					வளர்ப்புத் தந்தையே, என்னுடைய மன்றாட்டைப் புறக்கணியாமல். தயவாய் 
					அடைந்து தந்தருளும். ஆமென். 
					 
					4 நான்காம் நாள்: 
					 
					தொடக்க செபம்: 
					புனித சூசையப்பரே, தகுதியற்ற உமது பிள்ளையாகிய நான் உம்மை வணங்குகிறேன். 
					உம்மை அன்பு செய்து வணங்கும் அனைவருக்கும் நீர் நம்பிக்கைக்குரிய 
					பாதுகாவலரும் பரிந்துரையாளருமாய் இருக்கிறீர். இயேசு மற்றும் 
					மரியாளுக்கு அடுத்ததாக நான் உம்மீது மிகுந்த நம்பிக்கை 
					வைத்துள்ளேன் என்று உமக்குத் தெரியும். ஏனென்றால், கடவுள் 
					திருமுன் நீர் மிகவும் வல்லமையுள்ளவராயும், உம்முடைய நம்பிக்கைக்குரிய 
					பக்தர்களை என்றுக் கைவிடாதவராயும் இருக்கின்றீர்.  
					 
					எனவே, என்னையும், எனக்குரியவர்களையும், எனக்கு உரிமையான அனைத்தையும் 
					உம்முடைய பரிந்துரையின் கீழ் தாழ்மையோடு ஒப்புக்கொடுக்கிறேன். 
					இயேசுவின் மீது மரியாளின் மீது உமக்குள்ள அன்பினால் என் வாழ் 
					நாளில் என்னைக் கைவிடாதிருக்கவும், என் மரண நேரத்தில் எனக்கு 
					உதவியருள வேண்டுமென்றும் உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். மகிமை 
					மிகுந்த புனித சூசையப்பரே, மாசற்ற கன்னியின் கணவரே, கடவுளின் 
					திருவுளத்திற்கு முற்றிலும் அடங்கியிருக்கவும், அறச்சிந்தனையையும், 
					தாழ்ச்சியையும் தூய்மையையும் எனக்கு அடைந்து தந்தருளும். என் 
					தந்தையே, எனக்கு வழிகாட்டியாயிரும். இயேசு மற்றும் மரியாளின் 
					கரங்களில் நீர் மரித்தது போல, நானும் நான் இறக்கும் 
					போது அந்த 
					பேற்றைப் பெற என் வாழ்நாளில் எனக்கு முன்னுதாரணமாயிரும்.  
					 
					அன்புள்ள புனித சூசையப்பரே, இயேசுவின் நம்பிக்கைக்குரிய சீடரே, 
					என்னுடைய ஆன்ம மற்றும் உடல் நலத்திற்கு தேவையான அருளையும் 
					குறிப்பாக நல்ல மரணத்தையும், சிறப்பாக இப்பொழுது நான் வேண்டும் 
					வரத்தையும் இயேசுவின் பரிசுத்த திரு இருதயத்திடமிருந்து அடைந்து 
					தந்தருள உம்முடைய வல்லமையுள்ள பரிந்துரையை வேண்டி என் இதயத்தை 
					உம்மிடம் உயர்த்துகிறேன்.  
					 
					(வேண்டும் வரத்தைக் குறிப்பிடவும்.) 
					 
					மனுவுருவான வார்த்தையின் பாதுகாவலரே, என் சார்பாக நீர் ஏறெடுக்கும் 
					மன்றாட்டு கடவுளின் அரியணையின் முன்பாக கேட்கப்படும் என்று 
					நான் நம்புகிறேன். ஆமென்.  
					 
					புனித யோசேப்பே, கடவுளின் நம்பிக்கைக்குரிய ஊழியராய் இருப்பதற்கு 
					நீர் பெற்ற பேற்றிக்காய் நான் கடவுளுக்கு நன்றி 
					செலுத்துகிறேன். கடவுளுக்கு உமது நன்றியறிதலாக, உம்மைப் போல 
					கடவுளுக்கு நம்பிக்கைக்குரிய ஊழியனாய் இருக்கத் தேவையான அருளை 
					எனக்குப் பெற்றுத் தாரும். தன்னுடைய விருப்பத்தையன்றி தந்தையின் 
					விருப்பத்தை மட்டுமே நிறைவேற்ற வந்த இயேசுவின் முழுமையான 
					கீழ்ப்படிதலை உம்மைக் போல நானும் பகிர்ந்துகொள்ள உதவியருளும். 
					கடவுளுடைய பராமரிப்பில் நம்பிக்கை கொள்ளவும், அவருடைய திருவுளத்தை 
					நிறைவேற்றி வாழும் பொழுது அவர் என்னுடைய ஆன்மா மற்றும் உடலின் 
					எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுவார் என்பது அறிந்து வாழவும், 
					என்னுடைய சோதனைகளில் அவருக்கு விருப்பமான நேரத்தில் என்னை 
					விடுவிப்பார் என்று அமைதியுடன் இருக்கவும் அருள் புரியும். கடவுளின் 
					உண்மையுள்ள ஊழியனாய் இருப்பதை விட பெரும் பேறு மற்றும் மகிழ்ச்சியை 
					விட வேறு ஒரு பெரிய 
					கொடை இல்லை என்ற உம்முடைய பெருந்தன்மையைக் 
					கண்டுபாவிக்க உதவி செய்தருளும். ஆமென்.  
					 
					இறுதி செபம்: 
					என்றும் கன்னியான மரியாளின் பரிசுத்த கணவரே, என்னுடைய அன்பான 
					பாதுகாவலரே, புனித சூசையப்பரே, உம்மை நம்பி உம்முடைய பாதுகாவலை 
					வேண்டி மன்றாடிய எவரும் உமது உதவியைப் பெறாமல் போனதில்லை என்று 
					நினைத்தருளும். எனவே, உம்முடைய நன்மைத்தனத்தில் நம்பிக்கை 
					கொண்டு, தாழ்மையுடன் உம்முன் வந்து வேண்டுகிறேன். மீட்பரின் 
					வளர்ப்புத் தந்தையே, என்னுடைய மன்றாட்டைப் புறக்கணியாமல். தயவாய் 
					அடைந்து தந்தருளும். ஆமென். 
					 
					புனித சூசையப்பரை நோக்கி ஒன்பது நாள் நவநாள் செபம் 
					 
					ஐந்தாம் நாள்: 
					 
					தொடக்க செபம்: 
					புனித சூசையப்பரே, தகுதியற்ற உமது பிள்ளையாகிய நான் உம்மை வணங்குகிறேன். 
					உம்மை அன்பு செய்து வணங்கும் அனைவருக்கும் நீர் நம்பிக்கைக்குரிய 
					பாதுகாவலரும் பரிந்துரையாளருமாய் இருக்கிறீர். இயேசு மற்றும் 
					மரியாளுக்கு அடுத்ததாக நான் உம்மீது மிகுந்த நம்பிக்கை 
					வைத்துள்ளேன் என்று உமக்குத் தெரியும். ஏனென்றால், கடவுள் 
					திருமுன் நீர் மிகவும் வல்லமையுள்ளவராயும், உம்முடைய நம்பிக்கைக்குரிய 
					பக்தர்களை என்றுக் கைவிடாதவராயும் இருக்கின்றீர்.  
					 
					எனவே, என்னையும், எனக்குரியவர்களையும், எனக்கு உரிமையான அனைத்தையும் 
					உம்முடைய பரிந்துரையின் கீழ் தாழ்மையோடு ஒப்புக்கொடுக்கிறேன். 
					இயேசுவின் மீது மரியாளின் மீது உமக்குள்ள அன்பினால் என் வாழ் 
					நாளில் என்னைக் கைவிடாதிருக்கவும், என் மரண நேரத்தில் எனக்கு 
					உதவியருள வேண்டுமென்றும் உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். மகிமை 
					மிகுந்த புனித சூசையப்பரே, மாசற்ற கன்னியின் கணவரே, கடவுளின் 
					திருவுளத்திற்கு முற்றிலும் அடங்கியிருக்கவும், அறச்சிந்தனையையும், 
					தாழ்ச்சியையும் தூய்மையையும் எனக்கு அடைந்து தந்தருளும். என் 
					தந்தையே, எனக்கு வழிகாட்டியாயிரும். இயேசு மற்றும் மரியாளின் 
					கரங்களில் நீர் மரித்தது போல, நானும் நான் இறக்கும் 
					போது அந்த 
					பேற்றைப் பெற என் வாழ்நாளில் எனக்கு முன்னுதாரணமாயிரும்.  
					 
					அன்புள்ள புனித சூசையப்பரே, இயேசுவின் நம்பிக்கைக்குரிய சீடரே, 
					என்னுடைய ஆன்ம மற்றும் உடல் நலத்திற்கு தேவையான அருளையும் 
					குறிப்பாக நல்ல மரணத்தையும், சிறப்பாக இப்பொழுது நான் வேண்டும் 
					வரத்தையும் இயேசுவின் பரிசுத்த திரு இருதயத்திடமிருந்து அடைந்து 
					தந்தருள உம்முடைய வல்லமையுள்ள பரிந்துரையை வேண்டி என் இதயத்தை 
					உம்மிடம் உயர்த்துகிறேன்.  
					 
					(வேண்டும் வரத்தைக் குறிப்பிடவும்.) 
					 
					மனுவுருவான வார்த்தையின் பாதுகாவலரே, என் சார்பாக நீர் ஏறெடுக்கும் 
					மன்றாட்டு கடவுளின் அரியணையின் முன்பாக கேட்கப்படும் என்று 
					நான் நம்புகிறேன். ஆமென்.  
					 
					புனித யோசேப்பே, திருச்சபையின் பாதுகாவலராக இருக்கும் உம்முடைய 
					பெரும் பேற்றிற்காய் நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். 
					கடவுளுக்கு உம்முடைய நன்றியறிதலாக இந்தத் திருச்சபையின் தகுதியுள்ள 
					உறுப்பினராக நான் வாழத் தேவையான அருளைப் பெற்றுத் தாரும். இதனால் 
					நான் என் ஆன்மாவை காத்துக்கொள்வேனாக. இறையன்பிலும் அவருடைய பணியில் 
					நம்பிக்கைக்கு உரியவர்களாயும் இருக்கும்படி கத்தோலிக்க திருச்சபையிலிருக்கும் 
					எல்லா குருக்களையும், துறவியரையும் மேலும் பொது நிலையினரையும் 
					ஆசீர்வதித்தருளும். எங்கள் நாட்களின் தீமைகளிலிருந்தும், எதிர்களிடமிருந்தும் 
					திருச்சபையைக் காத்தருளும். கடவுளின் மாட்சிமை மற்றும் ஆன்மாக்களின் 
					மீட்பு என்னும் அதனுடைய மறைபறப்புப் பணியை உம்முடைய வல்லமையுள்ள 
					பரிந்துரையினால் வெற்றிகரமாக நிறைவேற்றுவதாக. ஆமென்.  
					 
					இறுதி செபம்: 
					என்றும் கன்னியான மரியாளின் பரிசுத்த கணவரே, என்னுடைய அன்பான 
					பாதுகாவலரே, புனித சூசையப்பரே, உம்மை நம்பி உம்முடைய பாதுகாவலை 
					வேண்டி மன்றாடிய எவரும் உமது உதவியைப் பெறாமல் போனதில்லை என்று 
					நினைத்தருளும். எனவே, உம்முடைய நன்மைத்தனத்தில் நம்பிக்கை 
					கொண்டு, தாழ்மையுடன் உம்முன் வந்து வேண்டுகிறேன். மீட்பரின் 
					வளர்ப்புத் தந்தையே, என்னுடைய மன்றாட்டைப் புறக்கணியாமல். தயவாய் 
					அடைந்து தந்தருளும். ஆமென். 
					 
					6 ஆறாம் நாள்: 
					 
					தொடக்க செபம்: 
					புனித சூசையப்பரே, தகுதியற்ற உமது பிள்ளையாகிய நான் உம்மை வணங்குகிறேன். 
					உம்மை அன்பு செய்து வணங்கும் அனைவருக்கும் நீர் நம்பிக்கைக்குரிய 
					பாதுகாவலரும் பரிந்துரையாளருமாய் இருக்கிறீர். இயேசு மற்றும் 
					மரியாளுக்கு அடுத்ததாக நான் உம்மீது மிகுந்த நம்பிக்கை 
					வைத்துள்ளேன் என்று உமக்குத் தெரியும். ஏனென்றால், கடவுள் 
					திருமுன் நீர் மிகவும் வல்லமையுள்ளவராயும், உம்முடைய நம்பிக்கைக்குரிய 
					பக்தர்களை என்றுக் கைவிடாதவராயும் இருக்கின்றீர்.  
					 
					எனவே, என்னையும், எனக்குரியவர்களையும், எனக்கு உரிமையான அனைத்தையும் 
					உம்முடைய பரிந்துரையின் கீழ் தாழ்மையோடு ஒப்புக்கொடுக்கிறேன். 
					இயேசுவின் மீது மரியாளின் மீது உமக்குள்ள அன்பினால் என் வாழ் 
					நாளில் என்னைக் கைவிடாதிருக்கவும், என் மரண நேரத்தில் எனக்கு 
					உதவியருள வேண்டுமென்றும் உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். மகிமை 
					மிகுந்த புனித சூசையப்பரே, மாசற்ற கன்னியின் கணவரே, கடவுளின் 
					திருவுளத்திற்கு முற்றிலும் அடங்கியிருக்கவும், அறச்சிந்தனையையும், 
					தாழ்ச்சியையும் தூய்மையையும் எனக்கு அடைந்து தந்தருளும். என் 
					தந்தையே, எனக்கு வழிகாட்டியாயிரும். இயேசு மற்றும் மரியாளின் 
					கரங்களில் நீர் மரித்தது போல, நானும் நான் இறக்கும் 
					போது அந்த 
					பேற்றைப் பெற என் வாழ்நாளில் எனக்கு முன்னுதாரணமாயிரும்.  
					 
					அன்புள்ள புனித சூசையப்பரே, இயேசுவின் நம்பிக்கைக்குரிய சீடரே, 
					என்னுடைய ஆன்ம மற்றும் உடல் நலத்திற்கு தேவையான அருளையும் 
					குறிப்பாக நல்ல மரணத்தையும், சிறப்பாக இப்பொழுது நான் வேண்டும் 
					வரத்தையும் இயேசுவின் பரிசுத்த திரு இருதயத்திடமிருந்து அடைந்து 
					தந்தருள உம்முடைய வல்லமையுள்ள பரிந்துரையை வேண்டி என் இதயத்தை 
					உம்மிடம் உயர்த்துகிறேன்.  
					 
					(வேண்டும் வரத்தைக் குறிப்பிடவும்.) 
					 
					மனுவுருவான வார்த்தையின் பாதுகாவலரே, என் சார்பாக நீர் ஏறெடுக்கும் 
					மன்றாட்டு கடவுளின் அரியணையின் முன்பாக கேட்கப்படும் என்று 
					நான் நம்புகிறேன். ஆமென்.  
					 
					புனித யோசேப்பே, திருக்குடும்பத்தின் தலைவராக நீர் வாழ பெற்ற 
					பெரும் பேற்றுக்காய் நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். 
					கடவுளுக்கு உமது நன்றியறிதலாக, என்னுடைய குடும்பத்தின் மீது 
					கடவுளுடைய ஆசீர்வாதங்களை அடைந்து தந்தருளும். எங்களுடைய குடும்பங்களை 
					அன்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்த இயேசு மற்றும் மரியாளின் 
					அரசாட்சியாக மாற்றியருளும். ஆமென். 
					 
					இறுதி செபம்: 
					என்றும் கன்னியான மரியாளின் பரிசுத்த கணவரே, என்னுடைய அன்பான 
					பாதுகாவலரே, புனித சூசையப்பரே, உம்மை நம்பி உம்முடைய பாதுகாவலை 
					வேண்டி மன்றாடிய எவரும் உமது உதவியைப் பெறாமல் போனதில்லை என்று 
					நினைத்தருளும். எனவே, உம்முடைய நன்மைத்தனத்தில் நம்பிக்கை 
					கொண்டு, தாழ்மையுடன் உம்முன் வந்து வேண்டுகிறேன். மீட்பரின் 
					வளர்ப்புத் தந்தையே, என்னுடைய மன்றாட்டைப் புறக்கணியாமல். தயவாய் 
					அடைந்து தந்தருளும். ஆமென். 
					 
					புனித யோசேப்பை நோக்கி ஒன்பது நாள் நவநாள் செபம் 
					 
					ஏழாம் நாள் 
					 
					தொடக்க செபம்: 
					புனித சூசையப்பரே, தகுதியற்ற உமது பிள்ளையாகிய நான் உம்மை வணங்குகிறேன். 
					உம்மை அன்பு செய்து வணங்கும் அனைவருக்கும் நீர் நம்பிக்கைக்குரிய 
					பாதுகாவலரும் பரிந்துரையாளருமாய் இருக்கிறீர். இயேசு மற்றும் 
					மரியாளுக்கு அடுத்ததாக நான் உம்மீது மிகுந்த நம்பிக்கை 
					வைத்துள்ளேன் என்று உமக்குத் தெரியும். ஏனென்றால், கடவுள் 
					திருமுன் நீர் மிகவும் வல்லமையுள்ளவராயும், உம்முடைய நம்பிக்கைக்குரிய 
					பக்தர்களை என்றுக் கைவிடாதவராயும் இருக்கின்றீர்.  
					 
					எனவே, என்னையும், எனக்குரியவர்களையும், எனக்கு உரிமையான அனைத்தையும் 
					உம்முடைய பரிந்துரையின் கீழ் தாழ்மையோடு ஒப்புக்கொடுக்கிறேன். 
					இயேசுவின் மீது மரியாளின் மீது உமக்குள்ள அன்பினால் என் வாழ் 
					நாளில் என்னைக் கைவிடாதிருக்கவும், என் மரண நேரத்தில் எனக்கு 
					உதவியருள வேண்டுமென்றும் உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். மகிமை 
					மிகுந்த புனித சூசையப்பரே, மாசற்ற கன்னியின் கணவரே, கடவுளின் 
					திருவுளத்திற்கு முற்றிலும் அடங்கியிருக்கவும், அறச்சிந்தனையையும், 
					தாழ்ச்சியையும் தூய்மையையும் எனக்கு அடைந்து தந்தருளும். என் 
					தந்தையே, எனக்கு வழிகாட்டியாயிரும். இயேசு மற்றும் மரியாளின் 
					கரங்களில் நீர் மரித்தது போல, நானும் நான் இறக்கும் 
					போது அந்த 
					பெற்றைப் பெற என் வாழ்நாளில் எனக்கு முன்னுதாரணமாயிரும்.  
					 
					அன்புள்ள புனித சூசையப்பரே, இயேசுவின் நம்பிக்கைக்குரிய சீடரே, 
					என்னுடைய ஆன்ம மற்றும் உடல் நலத்திற்கு தேவையான அருளையும் 
					குறிப்பாக நல்ல மரணத்தையும், சிறப்பாக இப்பொழுது நான் வேண்டும் 
					வரத்தையும் இயேசுவின் பரிசுத்த திரு இருதயத்திடமிருந்து அடைந்து 
					தந்தருள உம்முடைய வல்லமையுள்ள பரிந்துரையை வேண்டி என் இதயத்தை 
					உம்மிடம் உயர்த்துகிறேன்.  
					 
					(வேண்டும் வரத்தைக் குறிப்பிடவும்.) 
					 
					மனுவுருவான வார்த்தையின் பாதுகாவலரே, என் சார்பாக நீர் 
					ஏறெடுக்கும் மன்றாட்டு கடவுளின் அரியணையின் முன்பாக 
					கேட்கப்படும் என்று நான் நம்புகிறேன். ஆமென்.  
					 
					புனித யோசேப்பே, நாசரேத்தூர் தச்சுப் பட்டறையில் இயேசுவோடு 
					இணைந்து பணிபுரிய நீர் பெற்ற பெரும் பேற்றுக்காய் கடவுளுக்கு 
					நான் நன்றி செலுத்துகிறேன். கடவுளுக்கு உமது நன்றியறிதலாக, 
					எத்தகைய கீழ் நிலையிலிருந்தாலும், தெய்வீகப் பராமரிப்புக்கு 
					விருப்பமானால் என்னை எந்த இடத்தில் வைத்தாலும் அதை விருப்புடன் 
					ஏற்றுக்கொள்ளவும், என் வாழ்வின் நிலையில் நிறைவுற்றிருக்கவும், 
					உழைப்பின் மாண்பினை என்றும் மதிக்கவும் தேவையான அருளைப் 
					பெற்றுத் தாரும். உம்மைப் போல் தாழ்ச்சியோடு கடவுளோடு 
					கடவுளுக்காக உழைக்க எனக்குக் கற்றுத் தாரும். இதனால், என்னுடைய 
					உழைப்பை திருப்பலியில் இயேசுக் கிறிஸ்துவின் தியாக பலியோடு 
					இணைத்து என்னுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்து 
					விண்ணகப் பெரும் பேற்றை நான் பெற்றுக்கொள்வேனாக. ஆமென். 
					 
					இறுதி செபம்: 
					என்றும் கன்னியான மரியாளின் பரிசுத்த கணவரே, என்னுடைய அன்பான 
					பாதுகாவலரே, புனித சூசையப்பரே, உம்மை நம்பி உம்முடைய பாதுகாவலை 
					வேண்டி மன்றாடிய எவரும் உமது உதவியைப் பெறாமல் போனதில்லை என்று 
					நினைத்தருளும். எனவே, உம்முடைய நன்மைத்தனத்தில் நம்பிக்கை 
					கொண்டு, தாழ்மையுடன் உம்முன் வந்து வேண்டுகிறேன். மீட்பரின் 
					வளர்ப்புத் தந்தையே, என்னுடைய மன்றாட்டைப் புறக்கணியாமல். 
					தயவாய் அடைந்து தந்தருளும். ஆமென். 
					 
					புனித யோசேப்பை நோக்கி ஒன்பது நாள் நவநாள் செபம் 
					 
					எட்டாம் நாள் 
					 
					தொடக்க செபம்: 
					புனித சூசையப்பரே, தகுதியற்ற உமது பிள்ளையாகிய நான் உம்மை 
					வணங்குகிறேன். உம்மை அன்பு செய்து வணங்கும் அனைவருக்கும் நீர் 
					நம்பிக்கைக்குரிய பாதுகாவலரும் பரிந்துரையாளருமாய் 
					இருக்கிறீர். இயேசு மற்றும் மரியாளுக்கு அடுத்ததாக நான் 
					உம்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என்று உமக்குத் 
					தெரியும். ஏனென்றால், கடவுள் திருமுன் நீர் மிகவும் 
					வல்லமையுள்ளவராயும், உம்முடைய நம்பிக்கைக்குரிய பக்தர்களை 
					என்றுக் கைவிடாதவராயும் இருக்கின்றீர்.  
					 
					எனவே, என்னையும், எனக்குரியவர்களையும், எனக்கு உரிமையான 
					அனைத்தையும் உம்முடைய பரிந்துரையின் கீழ் தாழ்மையோடு 
					ஒப்புக்கொடுக்கிறேன். இயேசுவின் மீது மரியாளின் மீது உமக்குள்ள 
					அன்பினால் என் வாழ் நாளில் என்னைக் கைவிடாதிருக்கவும், என் மரண 
					நேரத்தில் எனக்கு உதவியருள வேண்டுமென்றும் உம்மை கெஞ்சி 
					மன்றாடுகின்றேன். மகிமை மிகுந்த புனித சூசையப்பரே, மாசற்ற 
					கன்னியின் கணவரே, கடவுளின் திருவுளத்திற்கு முற்றிலும் 
					அடங்கியிருக்கவும், அறச்சிந்தனையையும், தாழ்ச்சியையும் 
					தூய்மையையும் எனக்கு அடைந்து தந்தருளும். என் தந்தையே, எனக்கு 
					வழிகாட்டியாயிரும். இயேசு மற்றும் மரியாளின் கரங்களில் நீர் 
					மரித்தது போல, நானும் நான் இறக்கும் 
					போது அந்த பேற்றைப் பெற என் வாழ்நாளில் எனக்கு முன்னுதாரணமாயிரும்.  
					 
					அன்புள்ள புனித சூசையப்பரே, இயேசுவின் நம்பிக்கைக்குரிய சீடரே, 
					என்னுடைய ஆன்ம மற்றும் உடல் நலத்திற்கு தேவையான அருளையும் 
					குறிப்பாக நல்ல மரணத்தையும், சிறப்பாக இப்பொழுது நான் வேண்டும் 
					வரத்தையும் இயேசுவின் பரிசுத்த திரு இருதயத்திடமிருந்து 
					அடைந்து தந்தருள உம்முடைய வல்லமையுள்ள பரிந்துரையை வேண்டி என் 
					இதயத்தை உம்மிடம் உயர்த்துகிறேன்.  
					 
					(வேண்டும் வரத்தைக் குறிப்பிடவும்.) 
					 
					மனுவுருவான வார்த்தையின் பாதுகாவலரே, என் சார்பாக நீர் 
					ஏறெடுக்கும் மன்றாட்டு கடவுளின் அரியணையின் முன்பாக 
					கேட்கப்படும் என்று நான் நம்புகிறேன். ஆமென்.  
					 
					புனித யோசேப்பே, இயேசுவுக்காகவும் மரியாளுக்காகவும் 
					துன்புறுவதற்கு நீர் அடைந்த பெரும் பேற்றிற்காய் நான் 
					கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். கடவுளுக்கு உமது 
					நன்றியறிதலாக, என்னுடைய துன்பங்கள் அனைத்தையும் இயேசு மற்றும் 
					மரியன்னை மீதுள்ள அன்பினால் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும் 
					அருளைப் பெற்றுத்தாரும். என்னுடைய துன்பங்களையும், 
					உழைப்பையும், ஏமாற்றங்களையும் திருப்பலியில் இயேசுவுடைய 
					தியாகத்தோடு ஒன்றிக்கவும், மரியாளின் தியாக மனநிலையோடு உம்மைப் 
					போல பகிர அருள்தாரும். ஆமென்.  
					 
					இறுதி செபம்: 
					என்றும் கன்னியான மரியாளின் பரிசுத்த கணவரே, என்னுடைய அன்பான 
					பாதுகாவலரே, புனித சூசையப்பரே, உம்மை நம்பி உம்முடைய பாதுகாவலை 
					வேண்டி மன்றாடிய எவரும் உமது உதவியைப் பெறாமல் போனதில்லை என்று 
					நினைத்தருளும். எனவே, உம்முடைய நன்மைத்தனத்தில் நம்பிக்கை 
					கொண்டு, தாழ்மையுடன் உம்முன் வந்து வேண்டுகிறேன். மீட்பரின் 
					வளர்ப்புத் தந்தையே, என்னுடைய மன்றாட்டைப் புறக்கணியாமல். 
					தயவாய் அடைந்து தந்தருளும். ஆமென். 
					 
					புனித யோசேப்பை நோக்கி ஒன்பது நாள் நவநாள் செபம் 
					 
					ஒன்பதாம் நாள் 
					 
					தொடக்க செபம்: 
					புனித சூசையப்பரே, தகுதியற்ற உமது பிள்ளையாகிய நான் உம்மை வணங்குகிறேன். 
					உம்மை அன்பு செய்து வணங்கும் அனைவருக்கும் நீர் நம்பிக்கைக்குரிய 
					பாதுகாவலரும் பரிந்துரையாளருமாய் இருக்கிறீர். இயேசு மற்றும் 
					மரியாளுக்கு அடுத்ததாக நான் உம்மீது மிகுந்த நம்பிக்கை 
					வைத்துள்ளேன் என்று உமக்குத் தெரியும். ஏனென்றால், கடவுள் 
					திருமுன் நீர் மிகவும் வல்லமையுள்ளவராயும், உம்முடைய நம்பிக்கைக்குரிய 
					பக்தர்களை என்றுக் கைவிடாதவராயும் இருக்கின்றீர்.  
					 
					எனவே, என்னையும், எனக்குரியவர்களையும், எனக்கு உரிமையான அனைத்தையும் 
					உம்முடைய பரிந்துரையின் கீழ் தாழ்மையோடு ஒப்புக்கொடுக்கிறேன். 
					இயேசுவின் மீது மரியாளின் மீது உமக்குள்ள அன்பினால் என் வாழ் 
					நாளில் என்னைக் கைவிடாதிருக்கவும், என் மரண நேரத்தில் எனக்கு 
					உதவியருள வேண்டுமென்றும் உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். மகிமை 
					மிகுந்த புனித சூசையப்பரே, மாசற்ற கன்னியின் கணவரே, கடவுளின் 
					திருவுளத்திற்கு முற்றிலும் அடங்கியிருக்கவும், அறச்சிந்தனையையும், 
					தாழ்ச்சியையும் தூய்மையையும் எனக்கு அடைந்து தந்தருளும். என் 
					தந்தையே, எனக்கு வழிகாட்டியாயிரும். இயேசு மற்றும் மரியாளின் 
					கரங்களில் நீர் மரித்தது போல, நானும் நான் இறக்கும் 
					போது அந்த 
					பேற்றைப் பெற என் வாழ்நாளில் எனக்கு முன்னுதாரணமாயிரும்.  
					 
					அன்புள்ள புனித சூசையப்பரே, இயேசுவின் நம்பிக்கைக்குரிய சீடரே, 
					என்னுடைய ஆன்ம மற்றும் உடல் நலத்திற்கு தேவையான அருளையும் 
					குறிப்பாக நல்ல மரணத்தையும், சிறப்பாக இப்பொழுது நான் வேண்டும் 
					வரத்தையும் இயேசுவின் பரிசுத்த திரு இருதயத்திடமிருந்து அடைந்து 
					தந்தருள உம்முடைய வல்லமையுள்ள பரிந்துரையை வேண்டி என் இதயத்தை 
					உம்மிடம் உயர்த்துகிறேன்.  
					 
					(வேண்டும் வரத்தைக் குறிப்பிடவும்.) 
					 
					மனுவுருவான வார்த்தையின் பாதுகாவலரே, என் சார்பாக நீர் ஏறெடுக்கும் 
					மன்றாட்டு கடவுளின் அரியணையின் முன்பாக கேட்கப்படும் என்று 
					நான் நம்புகிறேன். ஆமென்.  
					 
					ஒன்பதாம் நாள் செபம்: 
					புனித யோசேப்பே, இயேசு மற்றும் மரியன்னையின் கரங்களில் மரிப்பதற்கு 
					நீர் பெற்ற பெரும் பேற்றிற்காய் நான் கடவுளுக்கு நன்றி 
					செலுத்துகிறேன். கடவுளுக்கு உம்முடைய நன்றியறிதலாக, எனக்கு மகிழ்ச்சியான 
					நல்ல மரணத்தை அடைந்து தந்தருளும். ஒவ்வொரு நாளும் என்னுடைய 
					மரணத்திற்கு தயாரிக்கும் விதத்தில் வாழ உதவியருளும். கடவுளுடைய 
					திருவுளத்தை ஏற்று நோயில் பூசுதல் பெற்று இயேசுவுடைய கரங்களிலும், 
					செபமாலையை எனது கரங்களிலும், அவளுடைய பரிசுத்த பெயரை என்னுடைய 
					உதடுகளிலும் தாங்கி மரியன்னையினுடைய கரங்களிலும், உம்மைப் போல் 
					நானும் மரணத்தை ஏற்றுக்கொள்வேனாக! ஆமென். 
					 
					இறுதி செபம்: 
					என்றும் கன்னியான மரியாளின் பரிசுத்த கணவரே, என்னுடைய அன்பான 
					பாதுகாவலரே, புனித சூசையப்பரே, உம்மை நம்பி உம்முடைய பாதுகாவலை 
					வேண்டி மன்றாடிய எவரும் உமது உதவியைப் பெறாமல் போனதில்லை என்று 
					நினைத்தருளும். எனவே, உம்முடைய நன்மைத்தனத்தில் நம்பிக்கை 
					கொண்டு, தாழ்மையுடன் உம்முன் வந்து வேண்டுகிறேன். மீட்பரின் 
					வளர்ப்புத் தந்தையே, என்னுடைய மன்றாட்டைப் புறக்கணியாமல். தயவாய் 
					அடைந்து தந்தருளும். ஆமென். | 
				 
 |