அன்னையின் திருப்பெயர்கள் | அன்னையின் விழாக்கள் |
கன்னிமரியாள் இறைவனின் தாய் | ஜனவரி 1 - பெருவிழா
'வானதூதர் மரியாவைப் பார்த்து "மரியா அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப்
பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர்
பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்" என்றார்.'
(லூக்கா 1:30-32) "ஞானிகள் வீட்டிற்குள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்." (மத்தேயு 2:11) "வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால் மரியா கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார். மரியா தன் கீழ்ப்படிதலால் மனுக்குலம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக் காரணமானார்." - புனித இரனேயுஸ் |
லூர்து மாதா |
1858 பெப்ரவரி 11
"நானே அமல உற்பவம். பாவிகளின்
மனமாற்றத்திற்காக செபமும் தவமும் மேற்கொள்ளப்படவேண்டும்."
2 பிரான்சு நாட்டின் லூர்து நகரில் மசபியேல் என்ற குகையில் கி.பி. 1858 பிப்ரவரி 11ந்தேதி முதல் ஜூலை 16ந்தேதி வரை அன்னை மரியா பதினெட்டு முறை காட்சி அளித்தார். பெர்னதெத் சூபிரூஸ் என்ற இளம்பெண் அன்னையின் காட்சியைக் காணும் பேறுபெற்றார். மரியன்னை பெர்னதெத்திடம், "நானே அமல உற்பவம். எனக்காக இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும். பாவிகளின் மனமாற்றத்திற்காக மக்கள் செபமும் தவமும் செய்ய வேண்டும்" என்று கூறினார். அன்னை, நாளுக்கு ஒரு மறையுண்மை என்ற வகையில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறையுண்மைகள் அனைத்தையும் 15 காட்சிகளில் பெர்னதெத்தை செபிக்கச் செய்தார். அன்னை மரியாவின் காட்சியில் பேர்ணடேத்தின் வியாதி நீங்குவதற்காக அடையாளமாக அற்புத நீரூற்று ஒன்றும் தோன்றச் செய்தார். |
ஆரோக்கிய மாதா அல்லது வேளாங்கண்ணி மாதா |
செப்ரெம்பர் 08: கி.பி. 16ஆம் நூற்றாண்டில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி என்ற சிற்றூரில் அன்னை மரியா காட்சி அளித்தார். பால் கொண்டு சென்ற இடைய சிறுவன் ஒருவனுக்கு தோன்றிய அன்னை, பால் பொங்கி வழியும் அற்புதத்தை நிகழ்த்தினார். மோர் விற்ற கால் ஊனமுற்ற சிறுவனுக்கு தோன்றிய மரியன்னை, அவனது கால்களுக்கு குணம் அளித்து ஆரோக்கிய அன்னையாகத் தன்னை வெளிப்படுத்தினார். அவ்வூரில் வாழ்ந்த கிறிஸ்தவ பெரியவர் ஒருவருக்கு தோன்றிய அன்னை மரியா, தனக்கு ஓர் ஆலயம் எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். அன்னைக்கு ஒரு சிறிய ஆலயம் முதலில் கட்டப்பட்டது. சிறிது காலத்துக்கு பின் மரியன்னையின் உதவியால் கடல் புயலில் இருந்து தப்பி வேளாங்கண்ணியை அடைந்த போர்ச்சுகீசியர்கள் அந்த ஆலயத்தை பெரிய அளவில் கட்டி எழுப்பினர். |
இடைவிடா சகாய மாதா | |
கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை | மார்ச் 25 |
நல்லாலோசனை மாதா | ஏப்ரல் 26 |
பாத்திமா மாதா | மே 13
அக்டோ13 வரை - 1917 "மக்கள் தங்கள் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். பாவிகளின் மனமாற்றத்திற்காக செபமும் தவமும் ஒப்புக்கொடுக்கப்படவேண்டும்." (பாத்திமா அன்னை) போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா நகரில் புதர் ஒன்றின்மீது கி.பி. 1917 மே 13ந்தேதி முதல் அக்டோபர் 13ந்தேதி வரை அன்னை மரியா ஆறு முறை காட்சி அளித்தார். லூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற ஆடு மேய்க்கும் மூன்று சிறாருக்கு அன்னையின் காட்சியை பார்க்கும் பேறு கிடைத்தது. செய்தி: "நான் செபமாலை அன்னை. மக்கள் தங்கள் வாழ்வை திருத்தியமைக்க வேண்டும்; தங்கள் பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லோரும் செபமாலை செபிக்க வேண்டும். பாவிகளின் மனமாற்றத்திற்காக செபமும் தவமும் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகம் எனது மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்" என்று கூறினார். நரகத்தின் காட்சியை சிறுவர்களுக்கு காண்பித்த மரியன்னை, நரக வேதனைக்கு உட்படாதவாறு செபிக்கவும் கற்றுக்கொடுத்தார். இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவின் மனந்திரும்பல், திருச்சபைக்கு வரும் துன்பம் ஆகியவற்றை அன்னை முன்னறிவித்தார். அக்டோபர் 13ந்தேதி அன்னை மரியாவின் கடைசி காட்சியின்போது சூரியன் அங்குமிங்கும் தள்ளாடிய அதிசயத்தை பாத்திமாவில் கூடியிருந்த சுமார் எழுபதாயிரம் பேர் பார்த்தனர். |
மினவின மாதா | மே 31 |
அமைதி அன்னை | ஜீன் 25 | ஜீன் மாதம் 27 |
கார்மேல் மாதா
அல்லது உத்தரிய மாதா |
ஜீலை 16 அன்னை மரியா உலக உருண்டையின் மீது நின்று கொண்டிருப்பது போன்றும் அவரை சுற்றி முட்டை வடிவத்தில் தங்கநிற எழுத்துக்களில்பாவமின்றி உற்பவித்த ஓ மரியாவே உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று எழுதப்பட்டிருக்கும். இதன் பின்புறம் மரியாவைக்குறிக்கும் ஆ மற்றும் யேசுவின் சிலுவை ஆகியவையின் கூட்டுக்குறியும், அதனடியின் மரியாவின் மாசற்ற இதயமும் இயேசுவின் இதயமும் சித்தரிக்கப்படும். இவையனைத்தையும் சுற்றி பன்னிரு விண்மீன்கள் இருக்கும்.( தூய கத்தரீன் லபோரேவுக்கு அன்னைமரியின் காட்சியின்போது கொடுத்த அற்புதப் பதக்கம் Miraculous Medal;) |
மரியாவின் மாசற்ற இதயம் | ஜீன் ஜீலை:"உலகில் எனது மாசற்ற இதயத்தின் பக்தி நிறுவப்படவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார். உலகம் எனது மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கபட வேண்டும்." (1917ல் மரியன்னையின் பாத்திமா காட்சி) |
பரலோக மாதா அல்லது விண்ணேற்பு அன்னை |
ஆகஸ்ட்15
மரியாவின்
விண்ணேற்பு
பெருவிழா
'மரியா பின்வருமாறு கூறினார்: "இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப்
பேறு பெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள்
செய்துள்ளார்."
(லூக்கா 1:46;48-49) "மனித அவதாரம் எடுத்த இறைவன் தன் தாய் இவ்வுலகை விட்டு பிரிந்தபோது அவரது உடலையும் அழியாமல் காத்துக்கொண்டார்; அவரை விண்ணகத்திற்கு எடுத்துச்சென்று பெருமைப்படுத்த இறைவன் திருவுளம் கொண்டார்." - புனித ஜான் டமாசீன் "என்றும் கன்னியும் இறைவனின் அமலோற்பவ அன்னையுமாகிய மரியா தன் உலக வாழ்வினை நிறைவு செய்தபின் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்." (விசுவாசக் கோட்பாடு 1950) |
கன்னிமரியா விண்ணக மண்ணக அரசி அல்லது விண்ணரசிமாதா | ஆகஸ்ட் 22: "வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்." (திருவெளிப்பாடு 12:1) |
மாதாவின் பிறந்த நாள் | செப்டம்பர்; 8 |
வியாகுல மாதா | செப்டம்பர்; 15 'சிமியோன் இயேசுவின் தாயாகிய மரியாவை நோக்கி "இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்." (லூக்கா 2:34-35) |
உபகார மாதா | செப்டம்பர்; 24 |
ஜெபமாலை மாதா | அக்டோபர் 7 "நான் செபமாலை அன்னை. மக்கள் தங்கள் வாழ்வை திருத்தி அமைக்க வேண்டும். எல்லோரும் செபமாலை செபிக்க வேண்டும்." (1917ல் மரியன்னையின் பாத்திமா காட்சி ) |
மருதமடு மாதா | |
காணிக்கை மாதா | நவம்பர் 21 'மரியாவின் பெற்றோர் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். மரியாவுக்கு மூன்று வயது ஆனபோது அவர்கள் மரியாவை எருசலேம் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தனர்.' (மரியாவின் வாழ்வு) |
அமலோற்பவ மாதா | டிசம்பா;
8 மரியாவின் அமல உற்பவம் பெருவிழா
"மரியா இயேசுவின் தாயாகுமாறு இறைவனின் அருளால் பாவக்கறைகளில் இருந்து
பாதுகாக்கப்பட்டார்." -புனிதஅகஸ்டின்
"பாவமின்றி உற்பவித்த ஓ மரியாவே உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்." (1830ல் மரியன்னையின் பாரிஸ் காட்சி) "மரியா தான் உற்பவித்த நொடியில் இருந்தே வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும் இயேசு கிறிஸ்துவின் பெருபலங்களினாலும் சென்மப்பாவத்தின் கரைகளி லிருந்து பாதுகாக்கப்பட்டார்." (விசுவாசக் கோட்பாடு 1854) |
தூய குவாதலூப்பே அன்னை |
டிசம்பர் 12: இடம் தேபியாக் குன்று, மெக்சிகோ நகரம் 12 டிசம்பர் 1531 மெக்சிக்கோ நாட்டின் குவாதலூப்பே நகரில் வாழ்ந்த புனித யுவான் தியெகோ, யுவான் பெர்னார்டினோ ஆகியோருக்கு கி.பி. 1531 டிசம்பர் 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது மரியன்னை,வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும் தாய்க்குரிய கனிவையும் தருவேன்." - எனக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும்" என்று மொழிந்தார். அன்னை தனது காட்சிக்கு ஆதாரமாக யுவான் டியகோவின் தில்மாவில் தன் அழகிய உருவத்தையும் பதியச் செய்தார். பின்பு அன்னை காட்சி அளித்த இடத்தில் தேபியாக் குன்று, மெக்சிகோ நகரம் ஓர் அழகிய ஆலயம் கட்டி எழுப்பப்பட்டு இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது |
பனிமய அன்னை |
ஆகஸ்ட் 5 பனி பெய்ய இயலாத ஆகஸ்ட் மாதத்தில் பனி பெய்திராத உரோமை நகரில் , உறைபனி பொழிந்து மலை முகடு முழுதும் மூடிய அதிசயம் ஆகஸ்ட் 5, கி பி 352 இல் நிகழ்ந்துள்ளது . உரோமையில் பத்திரிஸ் அருளப்பர் என்னும் செல்வச் சீமான் தன் மனைவியுடன் வசித்து வந்தார். அன்னை மரியாள் மீது மிகுந்த பக்தி கொண்ட இத்தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லாதால் தங்கள் ஆஸ்தி அனைத்தையும் அன்னை மரியாளுக்கென அர்ப்பணிக்க முடிவு செய்தனர் .பாப்பரசர் திபெரியும் அவர்களின் ஆலோசனையின் பேரில் இதற்கென மாதாவிடம் இடையறாது மன்றாடி வந்தனர். இவர்களுக்குப் பதிலளிக்க திருவுளம் கொண்ட அன்னை , ஆகஸ்ட் 5 ஆம் தேதி இவர்கள் இருவரின் கனவிலும் தோன்றி , எஸ்கலின் மலையில் தனக்கென்று ஒரு ஆலயம் நிர்மாணிக்கும்படிகூறினார் . பனி பெய்திருக்கும் மலை முகட்டை அவர்களுக்கு அடையாளமாகத் தருவதாக உறுதியளித்தார் . இருவரும் பாப்பரசரிடம் செல்ல , அவரும் அதே கனவைக் கண்டதாகக் கூறினார். உரோமையில் பனி பொழிவதில்லை.ஆனால் அந்த இரவு முழுவதும் உறை பனி பெய்து போர்வை போல் மலையை மூடியது . காலையில் செய்தி அறிந்து பனி பெய்த இடத்தைக் காண பெருங்கூட்டம் கூடியது . பனி பெய்த இடத்தின் வடிவத்திலேயே ஆலயம் எழுப்பப்பட்டது. இதுவே பனிமய மாதாவுக்கென்று அர்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் .அப்போஸ்தலரான புனித லூக்கா தீட்டியதாகக் கூறப்படும் மாதாவின் ஓவியம் ஒன்று இங்கு உள்ளது. பழைய ஏற்பாட்டில் கிதியோன் தன் போர்வை மட்டும் பனியில் நனைய வேண்டும் என்று வேண்டிய போதும் , தன் போர்வை மட்டும் பனியில் நனையக் கூடாது என்று வேண்டியபோதும் இறைவன் அந்த அடையாளத்தைக் கொடுத்தது போல் பனி பெய்யாத இடத்திலும், காலத்திலும் அன்னை செய்த இந்த அற்புதம் அவருக்கு பனிமய மாதா என்று பெயர் பெற்று தந்தது. |
தஸ்நேவிஸ் மாதா | |
சலேத் மாதா அல்லது கறுப்பு மாதா | செப்:
19 1846 ஒரு மாபெரும் ஒளி வெள்ளம் அந்த மலை, பள்ளத்தாக்கு,
சமவெளி எங்கும் பரவியது ஒளி வெள்ளத்தைக் கண்டு என்னுள்ளத்தை இனம்
புரியாத அற்புதமான ஏதோ ஒன்று கடந்து சென்றது. ஏதோ ஒரு அற்புத சக்தி என்னைக்
கவர்ந்து இழுப்பதாக உணர்ந்தேன் . அந்த ஒளி வெள்ளம் திறந்தது . . அந்த
ஒளியில் ஓர் அழகிய இளம்பெண் நாங்கள் கற்களால் செய்த பாரடைஸ் மீது அமர்ந்திருந்தார்
அவருடைய தலை அவரது உள்ளங்கைகளில் பொதிந்திருந்தது . அவர் மீளாத துயரில் இருப்பது போல, ஆற்ற இயலாத வருத்தம் அவரை ஆட்கொண்டு இருப்பது போல எனக்குத் தோன்றியது. முகத்தை உள்ளங்கைகளில் பொதிந்திருந்த அவர் அவருடைய இரண்டு முழங்கைகளையும் அவரது முட்டியில் வைத்திருந்தார் உடனே அந்தக் கற்களாலான இருக்கையிலிருந்து எழுந்து என்னையும் மேக்சிமின்னையும் கை நீட்டி அழைத்து, எங்களைப் பார்த்து "வாருங்கள் குழந்தைகளே ! பயப்படாதீர்கள்.. உங்களுக்கு மாபெரும் நற்செய்தியை அறிவிக்கவே நான் இங்கு வந்தேன் " என்றார் "என்னுடைய மக்கள் மனம் மாறி தங்களையே கடவுளிடம் ஒப்புவிக்காவிடில், நான் சிலுவையில் தொங்கும் என்னுடைய மகனின் கரங்களை இறக்கிக் கொள்ளச் செய்வேன். அது மிகப் பாரமாகவும், சுமையாகவும் எனக்கு இருக்கிறது. இனி ஒரு போதும் அதைத் தாங்கிக் கொள்ள இயலாது உங்களுக்காகவே நான் காலம் முழுதும் துன்பப்படுகிறேன் . என்னுடைய மகன் உங்களைக் கைவிட்டுவிட நான் விரும்பவில்லை எனில், அந்தச் சுமையை நான் சுமக்க வேண்டும். அதற்காக நீங்கள் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். உங்களில் ஒரு சிலரே இதைப் பற்றி சிந்திக்கிறீர்கள். நீங்கள் ஜெபிப்பது வீண். நீங்கள் செயல்படுவது வீண், உங்கள் அனைவருக்காகவும் நான் படும் துயரங்களை நீங்கள் ஒரு போதும் ஈடு செய்ய இயலாது .என் குழந்தைகளே ,உங்கள் ஜெபங்களை அனுதினமும் நன்றாகச் சொல்லுகிறீர்களா? என் குழந்தைகளே! காலையிலும் மாலையிலும் கண்டிப்பாக ஜெபங்களைச் சொல்ல வேண்டும் . உங்களால் செபம் செய்ய முடியாத சூழலில், ஒரு 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே 'ஜெபத்தையும் ஒரு 'அருள் நிறைந்த மரியே'ஜெபத்தையுமாவது சொல்ல வேண்டும். ஆனால் நேரம் கிடைக்கும் போது அதிகமாகச் ஜெபங்களைச் சொல்ல வேண்டும், என்றார் |
அன்பின் மாதா | |
அனுகுல மாதா | |
அலங்கார மாதா | |
அடைக்கல மாதா | |
அருள் ஒளி மாதா | |
அருளின் மாதா | |
அதிசய மணல்மாதா | |
அப்பரசமாதா | |
ஆறுதல் அளிக்கும் மாதா | |
இரக்கத்தின் மாதா | |
இருதய மாதா | |
இல்லற மாதா | |
இரட்சகரின் மாதா | |
ஈகையின் மாதா | |
உலகின் மாதா | |
உபகார மாதா | |
உண்மையில் மாதா | |
ஏழையின் மாதா | |
ஞானத்தின் மாதா | |
சந்தோசமாதா | |
சம்மனசுகளின் மாதா | |
சிந்தாத்திரை மாதா | |
செல்வ மாதா | |
செங்கோல் மாதா | |
கருணைமாதா | |
கன்னிகை மாதா | |
கண்ணியமாதா | |
கல்வாரி மாதா | |
கப்பல் மாதா | |
கிறிஸ்தவர்களின் சகாயமாதா | |
கோப்ரோ மாதா | |
தயைஉள்ள மாதா | |
திருகல்லியாண மாதா | |
திருச்சபையின் மாதா | |
திரு குடும்ப மாதா | |
திருக்குழந்தை மாதா | |
திக்கற்றவர்களின் மாதா | |
தீஉற்ப மாதா | |
தூண் மாதா [OUR LADY OF PILLARS] | எப்ரோ நதிக்கரையில்
அப்போது ஒரு பேரதிசயம் அங்கு நடந்தது... நம் சந்தியாகப்பரு க்கு முன்பே
இருந்த ஒரு பெரிய பாறையின் மீது தேவ தாயார் தோன்றினார்கள் அப்போது தேவ
தாயார் உயிரோடுதான் இருந்தார்கள்ஜெருசலேமில் சீயோன் பட்டணத்தில் தான்
தங்கி இருந்தார்கள் . ஒரே நேரத்தில் ஜெருசலேமிலும் இங்கே ஸ்பயின்
தேசத்தில் எப்ரோ நதிக்கரையில் அமர்ந்திருந்த சந்தியாகப்பருடனும்
தோன்றினார்கள். " மகனே சந்தியாகு.. அமைதியாக இரு.. இந்த சாரகோசா
என்னும் நகரில் எப்ரோ நதிக்கரையில் நாம் தோன்றியு ள்ள இந்த பாறையின்
மீது நமக்காக நம் பெயரில் ஒரு ஆலயம் அமைப்பாயாக.. இந்த நாட்டு மக்களை
நாம் இனி எம் மக்களாக ஏற்றுக்கொள்வோம்... இங்கு இனிமேல் பேரதிசயங்கள்
நடக்கும். அனைவரையு ம் நாம் எம்பால் ஈர்த்துக்கொள்வோம்.. நம் பெயரில்
ஆலயம் அமைத்த பிறகு மீண்டும் ஜெருசலேம் பட்டிணம் வருவாயாக.. அங்கு
உமக்காக வேத சாட்சி முடி காத்துக் கொண்டிருக்கிறது. .இதோ நம் வடிவம்.
இதை நீர் எம்பெயரில் கட்டப்போகும் அந்தக்கோவிலில் வைப்பாயாக" என்று
ஒன்றே கால் அடி உயரமே உள்ள ஒரு மரச்சிற்ப்பத்தை அவருக்கு கொடுத்தார்.
அந்த மரச்சிற்பம் தேவதாயாரும் அவர் திரு மகன் குழந்தையேசுவு ம். அவரது
வலது கையில் ஒரு புறா இருப்பதுபோல் அமைக்கப்பட்டிருந்தது இந்த சிலையை
தாங்கும் பீடம் ஆறு அடி உயரம் கொண்டது.. இந்த தேவ தாயார் தூண் மாதா
[OUR LADY OF PILLARS] என்று இன்றளவு ம் அழைக்கப்படுகின்றார். கி.பி. 44 ல் மாதா உயிரோடு இருந்த காலத்திலேயே அவருக்காக நம் சந்தியாகப்பர் தேவமாதாவின் பெயரில் ஒரு சிற்றாலயம் அமைத்தார். அது பிற்காலத்தில் மிகப்பெரும் ஆலயமாக சாரகோசா பட்டிணத்தில் விளங்குகின்றது. ஏராளமான பக்தர்களை தன்பால் ஈர்க்கிறது. இந்த தூண் மாதா சுரூபமானது சம்மனசுகளால் பரலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சந்தியாகப்பர் தேவமாதா தனக்கு கட்டளையிட்டபடியே ஒரு சிற்றாலயம் அமைத்து அந்த தூண் மாதா சிலையையும் நிறுவி தன் கடமை முடிந்தது என்று மீண்டும் தன் தாய்நாடான பாலஸ்தீனத்தில் ஜெருசலேம் வந்தார். |
தேவதூதர்களின் மாதா | |
மண்ணின் மாதா | |
மயிலை மாதா | |
மாதரசி மாதா | |
மாணாக்கரின் அன்னை | |
மின்னல் மாதா | |
பயண மாதா | |
பாடுகளின் மாதா | |
புதுமைமாதா | |
பெரிய நாயகி அன்னை | |
மகிமையின் மாதா | |
மழை மலை மாதா | |
மாசில்லாமாதா | |
வரப்பிரகாச மாதா | |
வடுமலைமாதா | |
வல்லார்பாட மாதா | |
வழித்துணைமாதா | |
வில்லியனூர் மாதா | |
விண்வெளி மாதா | |
விடிவெள்ளி மாதா | |
வியத்தகு வியாகுல மாதா | |
விஷபரி மாதா | |
வெற்றியின் மாதா | |
லூஜன் மாதா | |
லொரெத் மாதா | |
நம்பிக்கை மாதா | |
நற்கருணை அன்னை | |
தாய்மையின் அன்னை | |
துன்பமுடிச்சுகளை அவிழ்க்கும் மாதா |
வரலாறு: ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் 1182ல் Germany யில் உள்ள Augsburg நகரின் மத்தியில் 1182ல் கட்டப்பட்ட St. Peter am Perlach தேவாலயத்தில் தனிப்பட்ட மையச் சிறப்புத் தன்மையுடன் இவ்வன்னையின் படம் இருக்கிறது. இதில் சித்தரிக்கப்படும் காட்சியானது: நிலவு வளையத்தின் மேல் கன்னிமரியாள் நிற்பது போலவும், அவரது காலின் கீழ் பாம்பின் தலை மிதிக்கப்படுவதாகவும் அமைந்திருக்கின்றது. பாம்பு வடிவில் இருக்கும் நெருக்கமான பல முடிச்சுக்களை உடைய கயிறு ஒன்றை அன்னைமரியாள் தனது கையில் வைத்திருக்கின்றார். வானதூதர் ஒருவர் சிக்கலான பல முடிச்சுக்களை உடைய கயிற்றை அன்னை மரியாளிடம் ஒப்படைக்க, அதை மரியாள் தனது பொறுமை, முழுமையான அர்ப்பணிப்பின் மூலம் அவிழ்த்து சிக்கல்கள் இல்லாத மென்மையான கயிறாக மற்றொரு வானதூதரிடம் கையளிக்கின்றார். முடிச்சுக்களின் மாதா அல்லது முடிச்சுக்களை அவிழ்ப்பவர் என்று ஓவியத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். இப்படம் 1700ல் உருவாக்கப்பட்டது. வசதி படைத்த பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ieronymus Ambrosius Langenmantel இன் வேண்டுகோளுக்கிணங்க, St. Peter am Perlach தேவாலயத்தில் ஸ்தாபகம் செய்யப்பட்டுள்ள அன்னை மரியாளின் படமானது Joh ann Georg Sch midtner என்னும் பெயருடைய ஓவியரால் வரையப்பட்டது. பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த Langznmantel இன் தம்பதிகளுக்கிடையேயான சொந்தக் குடும்பப் பிரச்சனைகளை, மரியன்னை தீர்த்து வைத்தார். இந்த நம்பிக்கையின் காரணமாக, மரியன்னையின் படத்தை வரைய இம்மனிதர் பண உதவியைச் செய்தார். படத்தின் கீழே ஒரு வானதூதர், மனிதன் ஒருவரை மரியாளிடம் அழைத்துச் செல்வதைக் காண்கின்றோம் . நமது வாழ்க்கையில் உள்ள குழப்பங்கள், சிக்கல்கள் அனைத்தையும் நீக்கவும், நாங்கள் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கும், இறைவனிடம் பரிந்து பேசுவதற்கு அன்னை மரியாளின் உதவியை நாடும்படியும் அவ்வானதூதர் நம்மை அழைத்துச் செல்கின்றார். இப்படத்தில் ஒரு வலுவான ஈர்ப்பும், அருட்சியும் உள்ளது. இங்கு கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களும், பிறமதத்தைச் சேர்ந்த அனைத்து வயதுப் பிரிவினரும், மற்றும் அனைத்து சமூக அமைப்பினரும் தினமும் வந்து தங்கள் கவலைகளை முறையிடுகிறார்கள். 1985 இல் இத்தேவாலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் வருகை தந்ததின் பின் இதன் பக்தி வழிபாடு, தென் அமெரிக்காவில் வெகுவேகமாகப் பரவி உள்ளது. இத்தேவாலயத்திலுள்ள மக்களின் வேண்டுதல்களை பிராத்தனை செய்யும்படி, குறிப்பிடும் பிராத்தனைப் புத்தகத்தில் இருக்கும் குறிப்புகளின்படி, அனைத்துக் கண்டங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் பக்தர்கள், வழிபாட்டாளர்கள் துன்பக்கட்டுக்களை அவிழ்க்கும் அன்னை மரியாவை நோக்கி வருவதைக் காட்டுகின்றது. மீண்டும் மீண்டும் இவ்வன்னையின் வழிகாட்டுதலும், அவர் முன் பிராத்தனை செய்யும் ஆசையும் சமீபத்தில் ஏராளமாக வெளிப்பட்டுள்ளது. ஆகவே இதை நிறைவேற்றும் விதமாக துன்பக்கட்டுகளை அவிழ்க்கும் அன்னையின் நவநாள் செபம், இதே தேவாலயத்தின் பொறுப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து சமூகங்களும் இவ்வன்னையின் நவநாள் செபத்தை செபிப்பதன் மூலம், தங்கள் இறைநம்பிக்கையை அனைவரும் மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். அத்துடன் அன்னைமரியாளின் பரிந்துரையையும் நிறைவாகப் பெறமுடியும். |
ஜென்மராக்கினி மாதா | |