Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

தேவ இரகசியத்தின் ரோஜா பிரார்தனை

 

மூன்று ரோஜாக்களினதும் அர்த்தம்:

வெள்ளை ரோஜா:- தேவ அன்னையின் அதி பரிசுத்தம் நிறைந்தவளும், இறைவனின் மாசில்லா மகளும், ஞானத்தின் இருப்பிடமாகவு ம் உள்ளாள் என்பதைக் குறிக்கிறது.

சிவப்பு ரோஜா:- சுதனின் தாய் மரியென்றும் அவளே இரக்கத்தினதும், வியாகுலங்களினதும் தாய் என்பதைக் குறிக்கிறது.

பொன்னிற ரோஜா:-
மரியே தூய ஆவிக்கு அன்பானவர் என்றும் அவளே வானக வையக அரசியென்றும், திருச்சபையின் தாய் என்பதையும் குறிக்கிறது.


ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்
பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
-   புனித மரியாயே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
- தேவ இரகசியத்தின் ரோஜாவே
- இறைவனின் அன்புக் குழந்தையே
- இயேசுவின் கன்னி அன்னையே 
- தூய ஆவியானவரக்கு பிரியமானவளே
- தேவ வரப்பிரசாதங்களின் மாதாவே
- கிறிஸ்தவ வாழ்வின் மாதாவே
- காணாமல் போன புதல்வர்களின் மாதாவே
- அகதிகளின் மாதாவே (அடைக்கலமே)
- அன்பின் மாதாவே
- வியாகுல அன்னையே
- எமது ஆன்மாவின் மாதாவே
- எமது உள்ளத்தின் மாதாவே
- வயது போனோரின் மாதாவே
- இறப்போரின் மாதாவே
- அதி பரிசுத்த கன்னிகையே
- தாழ்ச்சியுள்ள கன்னிகையே
- தைரியமுள்ள கன்னிகையே
- விண்ணகத் தோட்டத்தின் மாதாவே
- காலை நறுமணமே
- சமாதான காணிக்கைகளின் பலிப்பீடமே
- இரத்தினக் கற்களின் ஒளியே
- ஆழ்கடல் முத்தே
- தைரியத்தின் கேடயமே
- அடைக்கலத்தின் வாசலே
- காலத்தின் கண்ணாடியே
- அன்பின் சுவாலையே

- இதமான தென்றலே
- தேவ வரங்களின் ஊற்றே
- அன்பின் பரிசுத்த கிண்ணமே
- கிறிஸ்துவின் பரிசுத்த தாயே
- உறுதியான பாறையே
- வாழ்க்கையின் குறிக்கோளே
- அர்ப்பணத்தின் ஆழமே
 - முடிவில்லா வாழ்வின் அறிகுறியே
- வானதூதாரின் இராக்கினியே
 - எல்லா மலர்களின் இராக்கினியே
 - எல்லாக் கலைகளின் இராக்கினியே
 - திருச்சபையின் இராக்கினியே
 - திவ்விய நற்கருணையின் இராக்கினியே
 - மாசில்லா இதயத்தின் இராக்கினியே
 - தேவ வார்த்தையின் இராக்கினியே
 
01. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
02. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகளை உம்மிடம் ஒப்படைக்கிறௌம்.
 
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
03. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் இறைவனின் மகிமையைத் தேட அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
 04. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் தமது விசுவாசத்தில் வளர அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
 05. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் நற்கருணை வாழ்வில் வளர அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.  
06. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் இறையரசிற்காய் அர்ப்பணித்து வாழ அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும். 
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
07. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் ஒப்புறவு  அருட்சாதனத்தில் பற்றுதல் கொண்டு வாழ அவர்களுக்காகவேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
08. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் இறைவனுக்கும்இ மக்களுக்கும் தம்மை அர்ப்பணித்து வாழ அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
09. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் திருச்சபையின் அதிகாரிகளுக்குப் பணிந்து வாழ அவர்
களுக்காக வேண்டிக்கொள்ளும்.
10. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் தமது பலவீனத்திலும், இறைவனின் பலத்தைக் கண்டு கொள்ள அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
11. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் கத்தோலிக்க திருச்சபையில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து வாழ அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
12. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் உமது மாசற்ற இருதயத்திற்கு உகந்தவர்
களாக இருக்க அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
13. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் உமது துன்ப துயரங்களில் பங்கேற்ற அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும். 
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
14. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் உமது பிள்ளைகளாக வாழ அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
15. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் உமது தாய்ப் பாசத்தில் நிறைவு  காண அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
16. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் உமது கீழ்ப்படிதலை முன் மாதிரியாகக் கொள்ள அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
 17. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் உமது துன்ப வேளைகளில் உம்மை விட்டுப் பிரியாதிருக்க அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
18. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் உம்மிடம் உள்ள இறைபற்றைக் கண்டு கொள்ள அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
19. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் உமது பரிந்துரையில் ஆறுதல் அடைய அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும். 
20. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் அனைவருக்கும் இறைவனின் வரங்களைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும். அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.
21. மரியாயின் மாசில்லாத திரு இருதயமே தேவ இரகசியத்தின் ரோஜாவே, எங்கள் குருக்கள் துறவிகள் உமது திரு இருதயத்தில் பற்றுதல் கொள்ள அவர்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அன்பான அன்னையே அவர்களை மீட்டருளும்.

- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே!
எங்களைப் பொறுத்தருளும் யேசுவே.
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே!
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே.
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே!
எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே.

மு- யேசுகிறிஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக
து- பரிசுத்த தேவ இரகசியத்தின் ரோஜாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக;
ஆ! எல்லாம் வல்ல இறைவனே, உம்முடைய அன்பின் வெற்றியாகவும், ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகவும், இயேசுவிடம் நீர் கொடுத்துள்ள ஆற்றலையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வரத்தை மரியன்னையின் மாசில்லாத திரு இருதயத்திற்கு வழங்கியுள்ளீரே. அவர்களுடைய பரிந்து பேசுதலினால் நாங்கள் பாவத்திலிருந்து விலகி, தூய்மையான உள்ளத்தோடு உமக்கு சேவை செய்யவும், உம் அன்பில் வாழ்ந்து மரிக்கவும், தேவையான வரத்தை தந்தருளுமாறு மன்றாடுகிறௌம்;. ஆமென்

 

வந்தோம் உம் மைந்தர் கூடி, ஒ மாசில்லாத் தாயே!
சந்தோசமாகப் பாடி,  உன் தாள் பணியவே