• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

பாத்திமா மாதாவின் மன்றாட்டு மாலை  

தூய பாத்திமா செபமாலை அன்னை

தூய பாத்திமா அன்னை நவநாள்

நாள்-1

1916 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் அல்லது கோடையில் வானதூதர் குழந்தைகளுக்குத் தோன்றினார்.

சகோதரி லூசியா கண்ட காட்சி:

பாத்திமாவில் மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் சிறிது நேரம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியது. அது அமைதியான நாள் என்பதால், அவர்கள் மேலே அண்ணாந்து பார்த்தார்கள். ஒரு பனித்துளியை விட வெண்மையாக கண்ணாடிபோல, ஒளி ஊடுருவக்கூடிய வைரத்தைவிட பளபளக்கக்கூடிய, சூரியக்கதிர் போல ஒரு இளைஞன் உருவமாகக் காட்சியளித்தார்.

அந்த இளைஞர் நெருங்கி வருகையில், அவரது அழகை இரசித்தோம். அவர் பார்ப்பதற்கு 14 அல்லது 15 வயதுடைய இளைஞன் போலத் தோன்றினார். நாங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து, ஏதும் பேசவில்லை.

அவர் எங்களது அருகில் வந்து அஞ்சாதீர்கள், நான் அமைதியின் தூதன் என்று கூறினார். அவர் செபிக்க எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். நாங்கள் அவர் சொல்லச் சொல்ல, அவரைத் தொடர்ந்து இந்த செபத்தைச் செபித்தோம்.

" என் ஆண்டவரே! உம்மை நம்புகிறேன், உம்மை அன்பு செய்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன். உம்மை அன்பு செய்யாதவர்களையும், உம்மை நம்பாதவர்களையும், உம்மை ஆராதிக்காதவர்களையும் மன்னித்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றேன்".

இச்செபத்தை இருமுறை செபித்ததும், அவர் எழுந்து நின்று இவ்வாறு தினமும் செபியுங்கள், இயேசு மற்றும் மரியாளின் திரு இருதயங்கள் உங்களது செபத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் என்று கூறினார். பின்னர், மறைந்து போனார்.

நவநாள் செபம்:

ஓ! தூய செபமாலை அன்னையே! பாத்திமாவின் இனிமைத் தாயே! போர்த்துகல் நாட்டில் தோன்றி இரக்கம் கொண்டு, ஒரு காலத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நாட்டிலும், வெளிநாட்டிலும் சமாதானத்தை அடைந்து தந்தவளே, எங்கள் நாட்டின் மீதும் இரக்கம் கொண்டருளும். பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் அதனை, உமது வல்லமையால் உயர்த்தி, ஞானத்திலும், உறுதியான ஒழுக்கத்திலும் அதை மீண்டும் நிலைநிறுத்தும்படி, உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மீண்டும் அமைதியைக் கொண்டு வாரும். மேலும், உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் அமைதியைக் கொடுத்தருளும். அதனால், எல்லா நாட்டினரும், முக்கியமாக எங்களுக்குச் சொந்தமானவர்கள் அனைவரும் உம்மைத் தங்களது அரசியாகவும், அமைதியின் அரசியாகவும் வாழ்த்தி மகிழ்வார்களாக. ஆமென்.

செபமாலையின்அரசியே எங்கள் நாட்டுக்காக வேண்டிக் கொள்ளும்.
அமைதியின் அரசியே மனிதக் குலத்துக்கு நிலையான அமைதியைத் தந்தருளும். ஆமென்.

தூய பாத்திமா அன்னை நவநாள்

நாள் -2

போர்ச்சுக்கல் நாட்டிலே 1916 ஆண்டு கோடைகாலத்தில் வானதூதர் லூசியாவின் பெற்றோர் வீட்டில் உள்ள கிணற்றின் அருகே தோன்றினார் மேலும் மூன்று குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது தோன்றினார்.

வானதூதருடன் லூசியாவின் உரையாடல்:

வானதூதர் லூசியாவிடம், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? செபியுங்கள்! மீண்டும் மீண்டும் செபியுங்கள்! இன்னும் அதிகமாக செபியுங்கள். இயேசு மற்றும் அன்னை மரியாளின் திரு இருதயங்கள், உங்கள் மீது பேரிரக்கம் கொண்டுள்ளன. உன்னதமானவருக்கு தொடர்ந்து செபங்களையும், பலிகளையும், தியாகங்களையும் ஏறெடுங்கள் என்று கூறினார்.

நாங்கள் எப்படி தியாகம் செய்ய வேண்டும்?

கடவுளைப் புண்படுத்திய பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகளின் மனமாற்றத்திற்கான பிரார்த்தனையாகவும், உங்களால் முடிந்த அனைத்தையும் பலியாகச் செலுத்துங்கள்.

இதனைச் செய்வதன் மூலம், உங்கள் நாட்டில் அமைதியைப் பெறுவீர்கள். நான் அமைதியின் வானதூதர். நான் அமைதிக்கு பாதுகாவலர் என்று வானதூதர் கூறினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவர் உங்களுக்கு அனுப்பும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு, பணிவுடன் தாங்கிக்கொள்ளுங்கள்என்று கூறிய பின், அவர் மறைந்து போனார்.

"கடவுள் யார், அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார், நேசிக்கப்பட விரும்புகிறார், தியாகத்தின் மதிப்பு மற்றும் தியாகம் எவ்வாறு கடவுளைப் பிரியப்படுத்துகிறது, அதன் காரணமாக, அவர் எவ்வாறு பாவிகளை மனம் மாற்றுகிறார் என்பதை விளக்கும் ஒரு ஒளி போல, வானதூதரின் வார்த்தைகள் எம் ஆன்மாவில் பதிந்தன.

நவநாள் செபம்

ஓ தூய செபமாலை அன்னையே! பாத்திமாவின் இனிமைத் தாயே! போர்த்துகல் நாட்டில் தோன்ற இரக்கம் கொண்டு, ஒரு காலத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நாட்டிலும், வெளிநாட்டிலும் சமாதானத்தை அடைந்து தந்தவளே, எங்கள் நாட்டின் மீதும் இரக்கம் கொண்டருளும். பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் அதனை உமது வல்லமையால் உயர்த்தி, ஞானத்திலும், உறுதியான ஒழுக்கத்திலும் அதை மீண்டும் நிலைநிறுத்தும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மீண்டும் அமைதியைக் கொண்டு வாரும். மேலும் உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் அமைதியைக் கொடுத்தருளும். அதனால், எல்லா நாட்டினரும், முக்கியமாக எங்களுக்குச் சொந்தமானவர்கள் அனைவரும் உம்மைத் தங்களது அரசியாகவும், அமைதியின் அரசியாகவும் வாழ்த்தி மகிழ்வார்களாக. ஆமென்.

செபமாலையின்அரசியே எங்கள் நாட்டுக்காக வேண்டிக் கொள்ளும்.
அமைதியின் அரசியே மனிதக் குலத்துக்கு நிலையான அமைதியைத் தந்தருளும். ஆமென்.

🌹தூய பாத்திமா அன்னை நவநாள்

நாள் - 3

வானதூதரின் மூன்றாவது காட்சி 1916 ஆம் ஆண்டு கோடைகால இறுதியில் நடைபெற்றது

லூசியா கண்ட காட்சி:

நாங்கள் அங்கே சென்றதும், எங்களுக்கு வானதூதர் ஏற்கனவே கற்றுக்கொடுத்த செபத்தை முழங்காலிருந்து, நெற்றி தரையில்பட வீழ்ந்து வணங்கி பலமுறை செபித்தோம். எத்தனைமுறை அச்செபத்தை செபித்தோம் எனத் தெரியவில்லை.

அப்போது எங்கள் தலைக்கு மேலே, ஒரு பிரகாசமான ஒளி தோன்றியது. அது என்ன என்று நாங்கள் எழுந்து பார்த்த போது, வானதூதர் தனது வலது கையில் திவ்ய நற்கருணையை ஏந்திக்கொண்டு, இடது கையில் இரசப் பாத்திரத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். திவ்ய நற்கருணையிலிருந்து இயேசுவின் திரு இரத்தம் வடிந்து, இரசப் பாத்திரத்தினை நிறைத்துக் கொண்டிருந்தது.

அப்போது வானதூதர், இரசப் பாத்திரத்தையும் திவ்ய நற்கருணையையும் அப்படியே காற்றில் நிலைநிறுத்தி வைத்துவிட்டு, எங்களது அருகில் வந்து நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி, இந்த செபத்தினை செபித்தார்.

ஓ மகா பரிசுத்த தமத்திரித்துவமான, தந்தை, மகன், தூய ஆவியாரே ! நான் உம்மை ஆராதிக்கிறேன். உலகெங்குமுள்ள நற்கருணைப் பேழைகளிலிருக்கும் இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத திரு உடலையும், திரு இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீகத்தையும், அவருக்குச் செய்யப்படும் நிந்தை அவமானங்களுக்கும், துரோகங்களுக்கும், அலட்சியங்களுக்கும், பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். இயேசுவின் திரு இருதயத்தின், அன்னை மரியாவின் மாசற்ற இருதயத்தின் அளவற்றப் பேறுபலன்களைப் பார்த்து, எல்லாப் பாவிகளையும் மனந்திருப்பும்படி உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.

இந்த செபத்தை செபித்து முடித்ததும், வானதூதர் எழுந்து திவ்ய நற்கருணையை லூசியாவாகிய எனக்கும், இயேசுவின் திரு இரத்தத்தை பிரான்சிஸ்கோ மற்றும் ஜெஸிந்தாவிற்கு அருந்தக் கொடுத்து பின்வருமாறு கூறினார்.

"நன்றியில்லாத பாவிகளால் மிகவும் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட இயேசுவின் திரு உடலை உண்ணுங்கள் மற்றும் அவரது திரு இரத்தத்தினைக் குடியுங்கள். அவர்களது நிந்தைப் பாவங்களுக்கு பரிகாரம் செய்யுங்கள். உங்களது ஆண்டவரைத் தேற்றுங்கள்."

பின்னர் வானதூதர், எங்களோடு மீண்டும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவர் கற்றுத்தந்த, திவ்ய நற்கருணை நிந்தைப் பரிகார செபத்தை மும்முறை செபித்தபின் அவர் மறைந்து போனார். நாங்கள் தொடர்ந்து நெடுநேரம் அங்கே இருந்து, அதே செபத்தை மீண்டும் மீண்டும் செபித்துக் கொண்டிருந்தோம்.

நவநாள் செபம்

ஓ தூய செபமாலை அன்னையே! பாத்திமாவின் இனிமைத் தாயே! போர்த்துகல் நாட்டில் தோன்ற இரக்கம் கொண்டு, ஒரு காலத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நாட்டிலும், வெளிநாட்டிலும் சமாதானத்தை அடைந்து தந்தவளே, எங்கள் நாட்டின் மீதும் இரக்கம் கொண்டருளும். பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் அதனை உமது வல்லமையால் உயர்த்தி, ஞானத்திலும், உறுதியான ஒழுக்கத்திலும் அதை மீண்டும் நிலைநிறுத்தும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மீண்டும் அமைதியைக் கொண்டு வாரும். மேலும் உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் அமைதியைக் கொடுத்தருளும். அதனால், எல்லா நாட்டினரும், முக்கியமாக எங்களுக்குச் சொந்தமானவர்கள் அனைவரும் உம்மைத் தங்களது அரசியாகவும், அமைதியின் அரசியாகவும் வாழ்த்தி மகிழ்வார்களாக. ஆமென்.

செபமாலையின்அரசியே எங்கள் நாட்டுக்காக வேண்டிக் கொள்ளும்.
அமைதியின் அரசியே மனிதக் குலத்துக்கு நிலையான அமைதியைத் தந்தருளும். ஆமென்

தூய பாத்திமா அன்னை நவநாள்

நாள் - 4

பாத்திமாவின் அருகில் கோவா தா ஈரியா என்னுமிடத்தில் மூன்று குழந்தைகளும் 1917 மே 13 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டு மின்னலினைக் கண்டனர் பின்னர் கடவுளின் தாயாம் மரியாள் ஹோல்ம் ஓக் என்னும் மரத்திற்கு மேலே முதன்முறையாக அக்குழந்தைகளுக்கு காட்சியளித்தார்.

லூசியா அன்னையைக் கண்ட காட்சியை இவ்வாறு விவரிக்கிறார்:

சூரியனை விட பிரகாசமான வெண்மையான ஆடையணிந்த ஒரு பெண், வருணிக்க இயலாத அளவுக்கு பேரழகு படைத்த முகம், அவர் மகிழ்வாகவுமில்லை; சோகமாகவுமில்லை. ஆனால் தீவிரமாக இருப்பதாகத் தோன்றியது.

கரங்களை, செபிப்பதைப் போல குவித்து மார்போடு இணைத்து வைத்திருந்தார். கண்கள் வான்நோக்கி இருந்தன. அவரது வலக்கரத்தில் ஒரு ஜெபமாலை தொங்கிக்கொண்டிருந்தது.

போர் முடிவுக்கு வரவும், உலகத்தில் அமைதி நிலவவும், ஜெபமாலையை தினமும் ஜெபியுங்கள் என்று அவர் கூறினார்.

காட்சியைக் கண்டவர்கள், அன்னைக்கு மிக அருகில் இருந்தனர். அவர்களிடம் அன்னை மரியாள் இவ்வாறு கேட்டார்," நீங்கள் உங்களைக் கடவுளுக்கு முழுமையாக அர்ப்பணிக்க தயாராக உள்ளீர்களா? அதனால் நீங்கள் அடையப்போகும் துன்பங்களை, மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளத் தயாரா? இவற்றையெல்லாம் பாவிகளால் கடவுளுக்கு ஏற்படும், நிந்தைகளுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கொடுக்கத் தயாரா?

அதற்கு லூசியா, ஆம் நாங்கள் தயார் என்று பதிலளித்தார். லூசியா தான் அம்மூவருள்ளும் மூத்தவர்.

அன்னை மரியாள் பதில் மொழியாக, "நீங்கள் பல்வேறு துன்பங்களை ஏற்க நேரிடும். ஆனால், கடவுளுடைய அருள் உங்களைத் தேற்றும்" என்று கூறினார்.

லூசியா அங்கே நடைபெற்றதை, பின்வருமாறு விளக்கினார்..

அன்னை மரியாள் பேசும்போது, "கடவுளுடைய அருள்" என்று கூறும்போது மட்டும், அவர் குவித்திருந்த கரத்தை விரித்தார். அப்போது ஒரு பேரொளி புறப்பட்டு, எங்களது இதயத்தை ஊடுருவிப் பாய்ந்து எங்களது ஆன்மாவை அடைந்தது. அப்போது, அந்த ஒளியாம் இறைவனை நாங்கள் உணர்ந்தோம். அவரில் எங்களை கண்ணாடியில் காண்பதுபோல், தெளிவாகக் கண்டோம்.

நாங்கள் அனைவரும் இறையருளால் தூண்டப்பட்டு, முழங்காலிருந்து வானதூதர் சொல்லிக்கொடுத்த, திவ்ய நற்கருணைக்கு நிந்தைப் பரிகார செபத்தினை செபித்தோம்.

அன்னை மரியாள் எம்மை நோக்கி, போர் முடிவுக்கு வரவும், உலகத்தில் அமைதி நிலவவும் ஜெபமாலையை தினமும் ஜெபியுங்கள் என்று அவர் கூறி, பின்னர் மறைந்து போனார்.

நவநாள் செபம்:

ஓ தூய செபமாலை அன்னையே! பாத்திமாவின் இனிமைத் தாயே! போர்த்துகல் நாட்டில் தோன்ற இரக்கம் கொண்டு, ஒரு காலத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நாட்டிலும், வெளிநாட்டிலும் சமாதானத்தை அடைந்து தந்தவளே, எங்கள் நாட்டின் மீதும் இரக்கம் கொண்டருளும். பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் அதனை உமது வல்லமையால் உயர்த்தி, ஞானத்திலும், உறுதியான ஒழுக்கத்திலும் அதை மீண்டும் நிலைநிறுத்தும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மீண்டும் அமைதியைக் கொண்டு வாரும். மேலும் உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் அமைதியைக் கொடுத்தருளும். அதனால், எல்லா நாட்டினரும், முக்கியமாக எங்களுக்குச் சொந்தமானவர்கள் அனைவரும் உம்மைத் தங்களது அரசியாகவும், அமைதியின் அரசியாகவும் வாழ்த்தி மகிழ்வார்களாக. ஆமென்.

செபமாலையின்அரசியே எங்கள் நாட்டுக்காக வேண்டிக் கொள்ளும்.
அமைதியின் அரசியே மனிதக் குலத்துக்கு நிலையான அமைதியைத் தந்தருளும். ஆமென்.

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்