Our lady of Lourdes's Feast 11 Fevrier |
||
புகழ்மாலை ஆண்டவரே இரக்கமாயிரும் -- ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் -- கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் -- ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் - கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும் - கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும் விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா - எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா - எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே தூய ஆவியாராகிய இறைவா - எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே தூய்மைநிறை மூவொரு இறைவா - எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே மனுக்குல மீட்பரை எங்களுக்குத் தந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் இறையிரக்கத்தின் புதுமைமிகு வல்லமையான அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் லூர்து மலைக் குகையில் எழுந்தருளிக் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உலக ஆசையை வெறுத்தல் அவசியமென்று காண்பிக்க ஏகாந்த தலத்தில் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் விண்ணக மாட்சியின் உயர்வைக் காண்பிக்க பூங்கதிர்களை அணிந்திருந்த திருமேனியுடன் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஞானக் கொடைகளை மிஞ்சிய வேறு எச்செல்வமுமில்லை எனக் காண்பிக்க அழகின் வடிவாய் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆன்ம தூய்iமையை மிஞ்சிய வேறு தூய்மையில்லை என்பதைக் காண்பிக்க தூய வெண்ணாடை அணிந்தவராய் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் கற்பென்பது வானோர்க்கடுத்த பேறென்பதைக் காண்பிக்க தெளிந்த வானம்போன்ற நீல இடைக்கச்சையை அணிந்தவராய்க் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் கற்பிற்குக் காவல் அடக்க ஒடுக்கமே என்பதைக் காண்பிக்க நெடுமுக்காடணிந்தவராய் காட்சி தந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நாங்கள் நாடவேண்டிய கதி வின்ணகமே என்பதைக் காண்பிக்க வானகம் நோக்கி ஏறிட்டவராய்க் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஐம்பத்துமூன்று மணிச் செபத்தை அடிக்கடி சொல்லுதல் உன்னதமான பக்திச் செயலென்பதைக் காண்பிக்க செபமாலையைத் திருக்கரத்திலேந்தியவராய்க் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இவ்வுலகத்திலே நீர் எங்களுக்கு நல்ல துணையென்பதைக் காண்பிக்க கற்பாறையிலே படர்ந்திருந்த காட்டு றோசாச் செடியை காலாலே மிதித்தவராய்க் காட்சிதந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாழ்ச்சியும் ஏழ்மையுள்ளமும் கொண்டவரிடத்தில் நீர் மிகுந்த அன்பு பாராட்டுகின்றீர் என்பதைக் காண்பிக்க ஓர் ஏழைச் சிறுமிக்கு காட்சிதந்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உம்மை நேசித்து நம்புவோருக்கு அசாத்தியமானது ஏதுமில்லை என்பதைக் காண்பிக்க அச்சிறுமி மூலமாய் ஒரு நீரூற்றைத் தோன்றச் செய்த அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் இறை வல்லமையும் இரக்கமும் அளப்பெரியது என்பதைக் காண்பிக்க அந்நீரூற்று தாராளமாய் வழிந்தோடவும், அதன் அடையாளமாய் அநேக நோயளருக்கு நற்சுகமளிக்கவும் செய்தருளிய அமலோற்பவ அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் பாவிகளை நன்நெறிக்குத் தீருப்புகின்ற லூர்து நாயகியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நீதிமான்களை உறுதிப்படுத்துகின்ற லூர்து நாயகியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் இறக்குந்தருவாயில் உள்ளவருக்குப் புதுவாழ்வு தருகின்ற லூர்து நாயகியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் பார்வையற்றோருக்குப் பார்வை தருகின்ற லூர்து நாயகியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் செவிப்புலனற்றோரைக் கேட்கச் செய்கின்ற லூர்து நாயகியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நடக்கமுடியாதோரை நடக்கச்செய்கின்ற லூர்து நாயகியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நோயாளரை நலமாக்குகின்ற லூர்து நாயகியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் வருந்துவோரைத் தேற்றுகின்ற லூர்து நாயகியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் சகல தேவைகளிலும் கரம்தந்து உதவுகின்ற லூர்து நாயகியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அதிகமதிகமாய் வேண்டப்படுகின்ற லூர்து நாயகியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள் தாயாகிய திரு அவைக்காக - உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலைத் தாயாரே எங்கள் திருத்தந்தைக்காக - உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலைத் தாயாரே எங்கள் நாட்டிற்காக - உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலைத் தாயாரே பல தண்டணைகளுக்குப் பாத்திரமான எங்களுக்காக - உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலைத் தாயாரே எங்கள் பெற்றோர், பிள்ளைகள், உறவினர் மற்றும் நண்பர்களுக்காக - உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலைத் தாயாரே எங்கள் எதிரிகளுக்காகவும் - உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலைத் தாயாரே அனைத்து வழிதவறியோர், நம்பிக்கையற்றோர் மற்றும் பிற மதத்தினருக்காகவும் - உம்மை மன்றாடுகின்றோம் லூர்து மலைத் தாயாரே உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே - எ - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் ஆண்டவரே உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே - எங்கள்மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே இயேசு கிறிஸ்துவினுடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கத்தக்கதாக - புனித லூர்து அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மன்றாடுவோமாக -- ஆண்டவராகிய இறைவா, முழுமனதுடனே தெண்டனாக விழுந்துகிடக்கின்ற எங்களைப் பார்த்து அமலோற்பவத் தாயாம் லூர்து நாயகியின் வேண்டுதலினால், நாங்கள் எங்கள் பாவ வழியைவிட்டு தூய நெறியைப் பற்றிக்கொள்ளவும் இறுதியில் நாங்கள் இறையருளோடு இறந்து விண்ணக பேரின்பத்தை பெற்றுக்கொள்ளவும் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென். |