புனித பூண்டி மாதா மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்(2 கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2) ஆண்டவரே இரக்கமாயிரும்(2) கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும் பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும் பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும் தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும் - புனித மரியாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - இறைவனுடைய தாயே பூண்டி மாதாவே, - கிறிஸ்துவினுடைய தூய தாயே பூண்டி மாதாவே, - பூலோகம் போற்றும் புதுமையால் ஒளிவீசும் பூண்டி மாதாவே, - அண்டி வந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் பூண்டி மாதாவே, - கேட்கும் வரத்தை தட்டாமல் கொடுக்கும் பூண்டி மாதாவே, - உம்மைத் தேடி வந்தவர்க்கெல்hம் வாரி வழங்கும் பூண்டி மாதாவே, - துன்பம் விலக ஆசிக்கும் பூண்டி மாதாவே, - துயரப்படுவோருக்கு ஆறுதலாயிருக்கும் பூண்டி மாதாவே, - எதிர் பார்க்கும் நன்மைகளைப் பெறச் செய்யும் பூண்டி மாதாவே, - குடும்பம் விளங்கச் செய்யும் பூண்டி மாதாவே, - குடும்பம் ஒற்றுமையாய் இருக்கச் செய்யும் பூண்டி மாதாவே, - குடும்பத்தில் சமாதானத்தை நிறுவும் பூண்டி மாதாவே, - நோயுற்றோருக்கு நல்ல குணம் அளிக்கும் பூண்டி மாதாவே, - ஊமையைப் பேசவைக்கும் பூண்டி மாதாவே, - புற்றுநோயைக் குணப்படுத்தும் பூண்டி மாதாவே, - இருதய நோயைக் குணப்படுத்தும் பூண்டி மாதாவே, - மன வியாதியைக் குணப்படுத்தும் பூண்டி மாதாவே, - தீராத நோய்களைத் தீர்த்துவைக்கும் பூண்டி மாதாவே, - பார்வை இழந்தவர்களுக்கு பார்வை அளிக்கும் பூண்டி மாதாவே, - பைத்தியத்தைக் குணப்படுத்தும் பூண்டி மாதாவே, - விளங்காத கை கால்களை விளங்கச் செய்யும் பூண்டி மாதாவே, - கிடைக்காப் பொருட்களை கிடைக்கச் செய்யும் பூண்டி மாதாவே, - காணத பொருட்களைக் கண்டடையச் செய்யும் பூண்டி மாதாவே, - பதவி உயர்வு கிடைக்கச் செய்யும் பூண்டி மாதாவே, - குழந்தை இல்தாதவர்களுக்கு குழந்தை வரமளிக்கும் பூண்டி மாதாவே, - நம்பியவர்களுக்கு நல்ல உதவியாயிருக்கும் பூண்டி மாதாவே, - சிறுவர்களுக்கு அறிவு விளக்காய் ஒளி வீசும் பூண்டி மாதாவே, - கற்புக்கு களங்கம் வராமல் காத்திடும் பூண்டி மாதாவே, - பாவத்திலிருந்து விலக்கிக் காக்கும் பூண்டி மாதாவே, - தீயவர்களை மனந்திருப்பும் பூண்டி மாதாவே, - நெறிகெட்வர்களை நல்வழிப்படுத்தும் பூண்டி மாதாவே, - பேய்களை நடுநடுங்கச் செய்யும் பூண்டி மாதாவே, - பாவிகளை மனந்திருப்பும், பூண்டி மாதாவே, - அமலோற்பவம் என்னும் பெயர்கொண்ட பூண்டி மாதாவே, - ஜென்ம இராக்கினியாய் விளங்கும் பூண்டி மாதாவே, உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்களைப் பொறுத்தருளும் யேசுவே உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே மு:- யேசுக்கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக. து:- புனித பூண்டி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். செபிப்போமாக : பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவே ! ஆதாம் ஏவாள் பாவத்தால் சாபத்தை அடைந்து உலகில் பிறக்கும் மனிதன் இறக்குமட்டும் கஷ்டப்பட்டே தீர வேண்டும் என்கிற உண்மை எல்லோரையும் விட உமக்கே பகல் வெளிச்சம் ஆதலின் சாதி மத பேதமின்றி துன்புறுவோரை எல்லாம் வாருங்கள் என்று அழைத்து அவர்களது துன்பத்தை அகற்றி இன்பத்தை ஊட்டி வரும் உமது அன்பே அன்பு, அனுதாபமே அனுதாபம் இந்தப் பாக்கியத்தை எல்லோரும் அடைய வேண்டி தேவ சந்நிதானத்தில் மன்றாடி மனுப்பேசி அதற்கான அருளையும் ஒளியையும் அடைந்து தாரும் தாயே ஆமென் |