• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாசில்லா மாதாவின் மன்றாட்டு மாலை

   

ஆண்டவரே இரக்கமாயிரும்(2

கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)

ஆண்டவரே இரக்கமாயிரும்(2)

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்

பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

- பிதாவாகிய சருவேசுரனுக்குப் பிரியமுள்ள மாசில்லா குமாரத்தியே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

- சுதானாகிய சருவேசுரனுக்குத் தாயாயிருக்கச் ஜென்மித்த மாசில்லாத கன்னிகையே,

- பரிசுத்த ஆவியின் மாசில்லா பத்தினியே,

- தேவதிருத்துவத்தின் மாசில்லாத ஆலயமே,

- பாவத்தின் நிழல் படாமல் உற்பவித்த கன்னிகையே,

- கொடிய விசமுள்ள அரவத்தை மிதிக்கச் சென்மித்த மாசில்லாத அரசியே,

- தேவஅருளின் அலங்காரமாய் பிறந்த மாசில்லாத மாதாவே,

- உலகத்தின் இரட்சிப்புக்காக யாக்கோபுவின் கோத்திரத்தில் நவ நட்சத்திரமாக சென்மித்த மாசில்லாத மாதாவே,

- நோவாவுடைய பெட்டகத்தின் சாயலாக சென்மித்த வாக்குத்தத்தத்தின் பேழையே,

- தாவீதரசனின் மாசில்லாத புத்திரியே,

- சருவேசுரனுக்கும், மனுசருக்கும் சமாதானமாக வந்த மாசில்லாத மாதாவே,

- புதிய உடன் படிக்கையின் மாசில்லாத பெட்டகமே,

- சகல வரங்களும் ஓயாமல் ஊறுகின்ற மாசில்லாத திரு ஊற்றே,

- உலகத்துக்கு ஆறுதலாக நவமாய்ச் சென்மித்தவளே மாசில்லாத அரசியே,

- நரக சிறைச்சாலையை அடைக்க மாசில்லாமல் சென்மித்துப் பிறந்த அரசியே,

- மோட்சத்தின் வாசலைத் திறக்க சென்மித்த மாசில்லாத அரசியே,

- சர்வலோகத்துக்கும் பரிபூரண சந்தோ~மான மாசில்லாத அரசியே,

- ஆதாம் செய்த பாவத்தை அகற்ற மாசில்லாமல் உற்பவித்த மாதாவே,

- ஆசீர்வாதத்தைக் கொடுக்க மாசில்லாமல் உற்பவித்த மாதாவே,

- நித்திய சீவியத்தைக் கொடுக்க மாசில்லாமல் உற்பவித்த மாதாவே,

- ஏழைகளுக்கு இரங்கும் சகாயமாகிய மாசில்லாத மாதாவே,

- வியாதிக்காரருக்கு ஆரோக்கியமாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- கஸ்திப்படுகிறவர்களுக்கு மகாபலனுள்ள தேற்றரவாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- விரத்துவத்தின் சிலாக்கியமாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- பிசாசுகளுக்கு நடுக்கம் வருவிக்கிற மாசில்லாத மாதாவே,

- பூலோகத்துக்குப் பிரகாசமாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- பரலோகத்துக்கு இராக்கினியாகச் சென்மித்த மாசில்லாத மாதாவே,

- பாவ இருளை நீக்கி வழிகாட்டும் பிரகாசமாகிய மாசில்லாத மாதாவே,

- முடவருக்கு ஊன்று கோலாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- பாவிகளுக்கு ஆதாரமாகச் சென்மித்த மாசில்லாத மாதாவே,

- சமுத்திரத்தின் நட்சத்திரமாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- மரிக்கிறவர்களுக்கு பலத்த நம்பிக்கையாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- அடைக்கலமாய் வருவோரைக் காக்கிற திருக்கரமாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- குருக்களுடைய ஆதரவாகிய மாசில்லாத மாதாவே,

- கன்னிசுத்தத்தின் உன்னத பீடமாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- மோட்சத்துக்கு அலங்காரமாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- சூரியனை ஆடையாக உடுத்திய சவுந்தரியாகிய மாசில்லாத மாதாவே,

- சந்திரனைப் பாதத்தினால் மிதித்தவளாகிய மாசில்லாத மாதாவே,

- விண்மீன்களை மகுடமாகத் தரித்த மாசில்லாத மாதாவே,

- சமாதானத்துக்கு வழியாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- சகல ஞானசம்பத்துக்களையும் கொண்டிருக்கிற பொக்கி~மாகிய மாசில்லாத மாதாவே,

- கிறிஸ்தவர்களின் சகாயமாகிய மாசில்லாத மாதாவே,

- சம்மனசுகளுக்கு இராக்கினியாகிய மாசில்லாத மாதாவே,

- பிதாப்பிதாக்களுக்கு மகிமையாகச் சென்மித்த மாசில்லாத மாதாவே,

- தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்கள் நிறைவேறச் சென்மித்த மாசில்லாத மாதாவே,

- அப்போஸ்தலருக்கு உறுதுணையாக இருந்த மாசில்லாத மாதாவே,

- வேத சாட்சிகளுக்கு உறுதியாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- துதியருடைய மாதிரியாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- தபோதனருடைய திடமாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

-கன்னியர்களுடைய காவலாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

- சகல புனிதர்களுடைய அகமகிழ்வாயிருக்கிற மாசில்லாத மாதாவே,

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்களைப் பொறுத்தருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே

மு- ஆண்டவரே, நாங்கள் கூப்பிடுகிற சத்தம்
து- தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.

செபிப்போமாக
சருவேசுரா! தேவரீருடைய தாசராகிய எங்களுக்கு உமது அருளைத் தந்தருளும். ஏனென்றால் பரிசுத்த கன்னியான தேவமாதா தம்முடைய நேசகுமாரனைப் பெற்றதனாலே தேவரீர் எங்களை இரட்சிக்கத் துவங்கினீரே, அந்த அன்னை சென்ம பாவமில்லாமல் உற்பவித்துப் பிறந்த மகிமையைக் கொண்டாடுகிற எங்களுக்குச் சமாதானம் வர்த்திக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவாராகிய அதே யேசுக்கிறிஸ்துவின் பெயரால் ஆமென்.






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்