இறைஇயேசுவின் தாத்தா பாட்டி திருநாளிலே.... நம் தாத்தா பாட்டியை நினைப்போம் அவர்தம் தியாகத்தாலே மகிழ்கிறோம் அவர்களின் படிப்பினைகளால் நாம் படைப்பாளிகளானோம் அவர்களின் கடின உழைப்பினாலே நாம் களிப்புறுகிறோம் அவர்களின் செபத்தினாலே நாம் இன்றும் இறை மக்களானோம் அவர்களின் தியாகத்தாலே நாம் இந்நிலை அடைந்தோம் அவர்களின் சிக்கனத்தாலே நாம் சிறப்பாக உள்ளோம் அவர்களின் தொலைநோக்காலே நாம் தொல்லை மறந்தோம் இன்று.. நம்மால் அவர்தம் கண்கள் கசியாது இருக்க முயல்வோம் தாத்தா பாட்டியைக் காண்கையில் மதிப்பளிப்போம் அவர்களை சந்திப்போம்.. அவர்களை வாழ்த்துவோம்.. அவர்களின் நினைவுகளை தலைமுறைக்கு பகிர்வோம் மறைந்த அந்த இனிய உறவுகளை நினைப்போம். இறையேசுவின் தாத்தா பாட்டி திருநாள் நல்வாழ்த்துகள் அன்புடன், கஸ்மீர் ரோச். |