• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

சதாசகாய மாதாவின் மன்றாட்டு மாலை

   

சதாசகாய மாதாவின் மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்(2
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்

பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

- புனித சதாசகாய மாதாவே,

- கிறீட்தீவில் ஆரம்பமாகிப் பல நாடுகளிலும் கீர்த்திபெற்று வருகின்ற சதாசகாய மாதாவே,

- உமது திருப்பதித் திசைநோக்கி மாலுமி மன்றாடியவுடனேயே எதிர்பாராதெழுந்த மழையையும் சண்டமாருதத்தையும் நிறுத்திச் சாந்தமடையச் செய்த சதாசகாய மாதாவே,

- காலாகாலமாய் பூசித்து வணங்கப்பட்ட திருப்பதியிலிருந்து உமது திருவுருவத்தைக் களவாடிய குற்றத்திற்காக வர்த்தகனுக்கு மாறாத கொடிய நோயைவிட்டுப் பயங்கரத்தை உண்டுபண்ணிய சதாசகாய மாதாவே,

- மரணப்படுக்கையின்போது வர்த்தகனுக்கு மனஸ்தாபத்தைக் கொடுத்து நல்ல மரணமடையச்செய்த சதாசகாய மாதாவே,

- ஒரு வர்த்தகனால் உமது திருவுருவம் களவாடப்பட்டு, றோமாபுரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வணங்கப்பட்டு வருகிற சதாசகாய மாதாவே,

- றோமனின் ஐந்து வயதுச் சிறுமியின் மூலம் திருப்பட வரலாற்றை உலகிற்கு வெளிப்படுத்திய சதாசகாய மாதாவே,

- எவராலும் தெரிவு செய்யப்படாமல் தாம்தாமே தமது மணிக்கொலுவை தெரிந்தெடுத்த சதாசகாய மாதாவே,

- தாம் விரும்பியபடியே புனித மத்தேயு தேவாலயத்தில் குடிபுகுந்து பக்தர்களுக்குக் கருணை மழை பொழிந்து நின்ற சதாசகாய மாதாவே,

- சத்துராதிகளால் புனித மத்தேயு தேவாலயம் தீயிடப்பட்டும் அற்புதமாய் உமது திருப்படத்திற்கு எவ்வித சேதமுமின்றிக் காப்பாற்றி வைத்த சதாசகாய மாதாவே,

- நானா சாதி சமயத்தவரையும் உமது இன்ப சந்நிதானம் தேடி வரச் செய்கின்ற சதாசகாய மாதாவே,

- விண்ணப்பம் செய்யும் ஒவ்வொருவருக்கும் வேண்டும் வரத்தைக் கொடுத்து வருகின்ற சதாசகாய மாதாவே,

- புதன்கிழமை தோறும் புதுமை மலர் பொழிகின்ற பூங்காவனமாகிய சதாசகாய மாதாவே,

- கதறி அழுவோரின் கண்ணீரைத் துடைத்து கவலை போக்கும் கருணா சமுத்திரமாகிய சதாசகாய மாதாவே,

- கடன்பட்டோர் நெஞ்சத்தின் கலக்கத்தைக் நீக்கிக் களிப்படையச் செய்யும் சதாசகாய மாதாவே,

- வற்றாமல் வரங்களெல்லாம் வாரியிறைக்கும் வள்ளலாகிய சதாசகாய மாதாவே,

- நொந்து நொருங்கியுள்ள உள்ளத்தின் நோக்காடு தீர்த்துச் சுகமளிக்கும் சதாசகாய மாதாவே,

- எவ்வித பாவியையும் ஏந்தியணைக்கும் இகபர இராணியாக விளங்கி வருகின்ற சதாசகாய மாதாவே,

- அஞ்ஞானிகளுக்கும், பிறசமயத்தவர்களுக்கும் அணைகடந்த அன்பு காட்டி அரவணைக்கும் அன்னையாகிய சதாசகாய மாதாவே,

- சஞ்சலத்தால் முகம் குறாவிக் கண் குழிவிழுந்து கையேந்தி நின்று பரிதவிக்கும் பாவிகளுக்குக் கை கொடுத்துக் காப்பாற்றும் சதாசகாய மாதாவே,

- அபயமென்று ஓடிவரும் அகதிகளுக்கு ஆதரிக்கும் அன்னையாகிய சதாசகாய மாதாவே,

- பிணியாளருக்கு சுகம் கொடுக்கும் சதாசகாய மாதாவே,

- குருடருக்கு பார்வை அளிக்கின்ற சதாசகாய மாதாவே,

- ஊமைகளை பேசச் செய்கின்ற சதாசகாய மாதாவே,

- முடவரை நடக்கச் செய்கின்ற சதாசகாய மாதாவே,

- குஸ்டரோகிகளை நடக்கச் செய்கின்ற சதாசகாய மாதாவே,

- வேலையற்றோருக்கு தொழில் கொடுக்கின்ற சதாசகாய மாதாவே,

- எங்களைப் பெற்ற தாயிலும் பார்க்க, பெரிய தாயாய் விளங்குகின்ற சதாசகாய மாதாவே,

- இதோ உமது படத்தின் முன் முழந்தாற்படியிட்டுக் கண்ணீர் சிந்திக் கையேந்திக் கேட்கும் விண்ணப்பங்களைத் எங்களுக்கு தட்டாமல் தந்தருள வேண்டுமென்று தாயே உம்மை மன்றாடுகிறோம்,
தாயே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

- எங்கள் ஒவ்வொருவரின் விண்ணப்பங்களுக்கும் நல்ல விடை அருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- எங்கள் அழுகைச் சத்தத்தை அமர்த்தி ஆறுதல் அளிக்க வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- எங்கள் கண்களிலே வழிந்தோடும் கவலைக் கண்ணீரைத் துடைக்க வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- துன்பத்தால் வாடித் துயரத்தால் கலங்கி உமது இன்ப சந்நிதானம் தேடிவரும் அடியார்களைக் கருணைக் கண்கொண்டு பார்க்க வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- படத்தினருகே நின்று நாங்கள் ஓலமிடும் சத்தம் உமது சந்நிதானத்துக்கு எட்டுவதால் எங்களுக்கு இரங்க வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- உள்ளம் வெதும்பி உடல் மெலிந்து உருக்குலைந்து நிற்கும் எங்களை உற்று நோக்க வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- பஞ்சம் பிடித்து, பசி மிகுந்து பஞ்சாய்ப் பறந்து உமது பாத பங்கயத்தில் வந்து நிற்கும் பாவிகளுக்கு உமது பார்வையை திருப்ப வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- கடனால் பயந்து உமது காலடியில் வந்து காத்துத் கிடக்கும் கடனாளிகளுக்கு ஒரு வெள்ளி வெளிச்சத்தைக் காட்ட வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- பெற்றோர் உற்றாரால் கைவிடப்பட்டு ஒரு துணையுமின்றி உமது துணையை நம்பி வந்தோர்க்கு உதவியருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- எங்கள் ஒவ்வொருவரின் மனக்கலக்கத்தைப் பார்த்து உமது சகாயத்தை செய்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- நாங்கள் நீட்டி நிற்கும் கரங்களின் பற்றுதல்களைப் பார்த்து உமது திருக்கரத்தால் வெகுமானத்தை அள்ளித்தர வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- எங்கள் பாப்பானவரையும், ஞான மேய்ப்பர்களையும் ஆசீர்வதித்தருளவேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்

- எங்கள் தொழில்களையும், வீடு வாசல்களையும்;, காணி பூமிகளையும் ஆசீர்வதித்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- மாரிபொழியவும் மானிலம் செழிக்கவும் வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

- நாங்கள் ஞானவழியில் நடந்து உமக்கும் உமது குமாரானுக்கும் உகந்தவர்களாய் சீவித்து பரலோகத்துக்கே அருள்பாலிக்க வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்,

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்களைப் பொறுத்தருளும் யேசுவே
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே


மு- யேசுக்கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக,

து- பரிசுத்த சதாசகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக

சருவேசுரா சுவாமி! பரிசுத்த சதாசகாய மாதாவை வணங்கி அவளுடைய சலுகையை இரந்து மன்றாடி நிற்கும் அடியார்கள் மேலே கிருபை வைத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவரான யேசுக்கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்கு தந்தருளும் ஆமென்.

சதாசகாய மாதாவுக்குச் செபம்

தாயே! தயாபரியே! அமல உற்பவியே! எங்கள் அன்பான சதாசகாயமாதாவே! இதோ உமது பாத சந்நிதானம் பணிந்து நிற்கும் பாவிகளைத் திருக் கண்ணோக்கிப் பாரும். பஞ்சத்தால் வாடி வந்தோம், பசிப் பிணியால் ஓடிவந்தோம், படுந்துயரம் தாங்காமல் பதறி வந்தோம். தாயே! எங்களுக்கு சகாயம் புரியும் கிருபாகரி நீயல்லவோ? உபகாரம் பண்ணும் உத்தமி நீயல்லவோ? உள்ளமுருகும் நல்லன்னை நீயல்லவோ? நீயல்லாது எங்களுக்கு துணை புரிவார் யாருண்டு? துணைசெய்வார் யாருண்டு? இரங்குவார் யாருண்டு? ஏந்தியணைப்பார் யாருண்டு.

அம்மா! தாயே! உம்மையல்லவோ உலகம் சகாயத்தின் தாயென்று அழைக்கிறது. இரக்கத்தின் இராக்கினி என்று கூப்பிடுகிறது. இதனாலல்லோ உமது சந்நிதானம் கோடானு கோடி பக்தர்களால் வழிகிறது. இலட்சாதி லட்சம் பிறசமயவாதிகளால் நிறைகிறது. நாளாந்தம் ஆயிரமாயிரம் புதுமைகளால் பொலிந்து விளங்குகிறது.
இதையறிந்தே பாவிகளாயிருக்கிற நாங்கள் உம்மேல் நம்பிக்கை வைத்து உமது சந்நிதானத்தில் சரணடைந்து நிற்கிறோம்.

 உமது பாதாரவிந்தத்தைக் கட்டிப்பிடித்துக் கண்ணீரால் கழுவுகிறோம். இரு கைநீட்டி இரந்து கேட்கிறோம். விண்ணப்பம்பண்ணி விடையை எதிர்பார்க்கிறோம். இந்த உலகத்தில் உம்மையல்லாது எம்மை தாபரிப்பார் யாருமில்லை, அரவணைப்பார் யாருமில்லை, ஆதரிப்பார் யாருமில்லை, தாகந்தீர்ப்பார் யாருமில்லை, இந்நேரம் எங்கள் பேரில் மனமிரங்கி ஒருமுறையாவது உமது கருணை விழியின் பார்வைiயை எங்கள் பக்கம் திருப்பியருளும். மதுரவாய் திறந்து பாசமொழி சொல்லியருளும். திருக்கரத்தால் வெகுமதியைத் தந்தருளும்.

இதோ உமது படத்தினருகே எங்களுடன் கூடியிருந்த உமது சகாயத்தைக் கேட்கும் பிறசமயவாதிகள் பேரிலும் இரக்கமாயிரும். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு வரத்தையும் இல்லையென்று சொல்லாமல் தந்தருளும். அவர்களும் உமது பிள்ளைகள் என்பதை மறவாதேயும். விN~மாய் அவர்கள் மனந்திரும்பப் பண்ணியருளும். கடைசியாக ஆண்டவரே! எங்கள் பாப்பானவரையும், எங்கள் ஞானமேய்ப்பர்களையும், எங்கள் நாட்டையும், எங்கள் தொழில் துறைகளையும், எங்களுக்குள்ள யாவற்றையும் உமக்குப் பாதகாணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறோம். அதை நீர் ஏற்று ஆசீர்வதித்தருளும். ஆமென்.








 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்