• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

காணிக்கை மாதாவின் மன்றாட்டு மாலை  

   

காணிக்கை மாதாவின் மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்(2

கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)

ஆண்டவரே இரக்கமாயிரும்(2)

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்

பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்


- மனுக்குலத்தின் உத்தம மகளாகிய காணிக்கை மாதாவே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

- பழைய ஏற்பாட்டின் சட்டங்களை நுணுக்கமாயனுசரித்து மனுக்குலத்துக்கு நன்மாதிரிகையாகச் சுத்திகரச் சடங்குகளை நிறைவேற்ற ஆசைப்பட்ட காணிக்கை மாதாவே

- சென்ம பாவமில்லாமல் உற்பவித்த படியால் மாசணுகாதிருக்க மாசுள்ளவர்கள் செய்யவேண்டிய கைங்கரியங்களைத் தாழ்ச்சியினாலே செய்யத் துணிந்த காணிக்கை மாதாவே

- வரிவேத விதிப்படி இக்கருமத்தை நிறைவேற்ற நாற்பது நாள் மட்டும் காத்துக்கொண்டிருந்த காணிக்கை மாதாவே

- அருளை ஆபரணமாகப் பூண்டு இருதயம் தூய ஆவியினாலே விம்ம, பரம தியானத்தில் மூழ்கி வழிநடந்த காணிக்கை மாதாவே

- நரனான தேவனைக் கையேந்திக்கொண்டு தேவ ஆலயமட்டும் போக ஆசித்த காணிக்கை மாதாவே

- மகா மிருதுவான உமது திருத்தேகம் மெலிந்து களைக்காமல் சூசையப்பர் திருப்பாலனை ஏந்திக்கொண்டு போனாலும் உம்முடைய ஆசையின் பொருளாகிய குழந்தை யேசுவின்மேல் உமது கண்களை வைத்துப் பேரின்ப சந்தோசத்தில் மூழ்கின காணிக்கை மாதாவே

- பூலோக நண்பர்களாலே சூழப்படாவிட்டாலும், பதினாயிரம் சம்மனசுகளாலே சூழப்பட்டு ஆனந்த அக்களிப்போடு நடந்த காணிக்கை மாதாவே

- நீர் ஜெருசலேம் பட்டணத்துக்கு போகுமுன்னே நீதிமானாகிய சிமியோன் என்பவருக்கும் தியானியாகிய அன்னாவிற்கும் உமது வருகையைப் பிதாவானவர் வெளிப்படுத்த வரம்பெற்ற காணிக்கை மாதாவே,

- மூன்று இராசாக்கள் கொடுத்த காணிக்கைகளை இரகசியமாகத் தேவாலயத்திற்கு அனுப்பின காணிக்கை மாதாவே,

- தேவாலயத்துக்குச் சென்றவுடனே மகா தாழ்ச்சி விநயத்துடனே தெண்டனாக விழுந்து பரம பிதாவை வணங்கி புனித சூசையப்பர் கையிலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்ட காணிக்கை மாதாவே,

- தூய ஆவியினாலே ஏவப்பட்டு தேவாலயத்துக்கு சிமியோன் என்பவர் வந்து மகாசங்கையோடே திவ்விய பாலகனைக் கேட்க அவர் கையிலே அந்த நரதேவனைச் சந்தோசத்தோடே கொடுத்த காணிக்கை மாதாவே,

- சிமியோன் என்னும் அந்த நீதிமான் தேவ பாலனைக் கையிலேந்தி நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுத்த பிற்பாடு மனுக்குலத்திற்காக அவர் படப்போகிற பாடுகளினாலே உமது இருதயம் வியாகுல வாளினால் ஊடுருவப்படுமென்று வசனித்தபோது மகா கீழ்ப்படிதலோடு தேவசித்தத்திற்கு அமைந்திருந்த காணிக்கை மாதாவே

- தேவ ஆசாரப் பிரகாரம் மகா எளிமைத்தனத்தோடும், தாழ்ச்சியோடும் காணிக்கை செய்வதற்கும், உம்முடைய சுத்திகரிப்பிற்கும் உரிய சடங்குகளையெல்லாம் நிறைவேற்றின பிற்பாடு, அந்த நாள் முழுவதும் ஆனந்த செபத்தியானத்தில் மூழ்கியிருந்த காணிக்கை மாதாவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்களைப் பொறுத்தருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே


மு- யேசுக்கிறிஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக,
து- புனித காணிக்கை மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக
ஆங்காரத்தில் அமிழ்ந்திப்போன பூலோக மக்களை ஈடேற்றத்தக்கதாக உம்முடைய திருக்குமாரன் அவர்களுடைய குலத்திலே உதித்து, அவர்கள் கொண்ட பாவவிசத்தைத் தீர்க்கச் சித்தமான பிதாவே! உம்முடைய திருக்குமாரனின் தாழ்மை பொருந்திய காணிக்கையும், அமலோற்பவியான அவருடைய திருத்தாயாரின் சுத்திகரிப்பும், நிறைவேறின இத்திரு நாளிலே, அவருடைய பேறு பலன்களினாலே நாங்கள் ஆங்காரத்தின் கட்டுக்களினின்று விடுபட்டு, தாழ்ச்சியின் சுகிர்த ஒழுங்குகளினாலே அலங்கரிக்கப்பட்டு, உமது பரிசுத்த கற்பனைகளைச் சுமுத்திரையாய் அனுசரித்துப் பரமானந்த பாக்கியமடைய அனுக்கிரகஞ் செய்தருளும். ஆமென்.







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்