• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

சதாசகாய மாதாவின் மன்றாட்டு மாலை

   

சதாசகாய மாதாவின் மன்றாட்டு மாலை 2

ஆண்டவரே இரக்கமாயிரும்(2
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்
பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்


🌷உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர் திருநாமம் உடைத்தான சதா சகாய மாதாவே...
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே...
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக் கும் ஆபத்தான வேளையில் அதனை ஜெயங் கொள்ளும்படி...
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷எங்களுடைய முழுமனதுடன் சேசுவை நேசிப்பதற்கு...
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக் கியத்துக்கு உள்ளாவேனாகில் அதிலிருந்து உடனே எழுந்திருக்கும்படி,
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷பசாசின் ஊழியத்தில் ஈடுபடும்படியான தகாத வளையில் நான் சிக்கிக் கொள்ளுவேனாகில் அத்தளையைத் தகர்த்தெறியும்படி...
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் விரைவில் ஞான உஷ்ணம் கொள்ளும்படி....
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங் களைப் பெறுவதிலும், கிறீஸ்தவ பக்திக்குரிய கடமைகளை பக்தியாய் செய்யும்படி...
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது...
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷என் சீவியத்தில் வரும் துன்ப சோதனை வேளைகளில்....
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷என்னுடைய சுபாவ துர்ச்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், புண்ணிய வாழ்க்கையில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும் படி நான் செய்யும் முயற்சிகளிலும்....
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய் கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என் பலம் குறைந்து போகும்போது....
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷என் மரண வேளையில் என் ஆத்துமம் என் சரீரத்தைவிட்டுப் பிரிய போராடும்போது.....
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

🌷உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, பூஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி ஓ! என் தேவ தாயாரே, என் கடைசிநாள் பரியந்தம், என் கடைசி மூச்சு பரியந்தம்...
எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.


🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே...
🌻 எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே,
🌻எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே,
🌻எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.


ஜெபிப்போமாக:

சர்வ வல்லவரும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்கு துணை புரிய ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாயை உமது ஏக குமாரனுக்குத் தாயாராக்கத் திருவுளமானீரே! பரிசுத்த கன்னிமரியாயின் வேண்டுதலால் அடியோர்களின் பாவநோய் தீர்ந்து, பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சிநேகித்து சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் வழியாக எங்களுக்குக் கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம்.  ஆமென்.



🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺

சதா சகாய மாதாவே, உம்மிடத்தில் சரணடைந்து நம்பிக்கையுடன் உமது பாதத்தண்டையிலிருக்கும் நீசப் பாவியான என்னை உற்று நோக்கியருளும். இரக்கத்தின் மாதாவே! என் பேரில் இரக்கமாயிரும். பாவிகளின் அடைக்கலமும் நம்பிக்கையுமென எல்லோராலும் அழைக் கப்படுகிற நீரே என் அடைக்கலமும் நம்பிக்கையுமாயிரும். சேசுவின் நேசத்துக்காக எனக்கு சகாயம் புரிந்தருளும். சதாகாலமும் உமது பிள்ளையாகப் பாராட்டி உமக்குக் கையளிக்கும் இந்த நீசப் பாவியாகிய என்னிடம் உமது கரங் களை நீட்டியருளும். உம்மிலே நம்பிக்கை வைப் பதுதான் நித்திய ஈடேற்றத்தின் பிணை என்று நான் எண்ணுகிறேன். நான் உம்மில் வைக்கும் இந்த நம்பிக்கையைச் சர்வேசுரன் தமது இரக்கத் தால் எனக்குத் தந்ததற்காக நான் அவரை வாழ்த் தித் துதிக்கிறேன். உம்மிடம் என்னை கையளிக் காததால் இவ்வளவு காலமும் நான் அநேக தடவை களில் நீசத்தனமாய்ப் பாவச் சோதனைகளில் விழுந்திருக்கிறேன். ஆனால் உமது உதவியால் நான் வெற்றியடைவேனென்று எனக்குத் தெரியும். என்னை உமக்கு நான் கையளித்தால், நீர் எனக்கு உதவி செய்வீர் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் பாவத்தில் விழப் போகும் தறுவாயில் உமது உதவியைக் கேளாமல் விட்டு விடுவேனோ என்றும், அதனால் என் ஆத்துமத்தை இழந்து போக நேரிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.

ஆகையால் இந்த வரப்பிரசாதத்தை நீர் எனக்குப் பெற்றுத்தரும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். பசாசு என்னுடன் போர் புரியும் போது நான் உம்மிடம் சரணடையவும், "ஓ மரியாயே, எனக்கு உதவி செய்யும். சதா சகாய மாதாவே, எனது ஆத்துமத்தை நான் இழந்து போக விடாதேயும" என்று உம்மை நோக்கி வேண்டிக்கொள்ள கிருபை புரிந்தருளும்.

ஆமென்.

(அருள் நிறை மந்திரம் 9 முறை)

பரிசுத்த மரியாயே, கஸ்திப்படுகிறவர்களுக்கு உமது சகாயம் தந்தருளும். மனத்திடம் இல்லாத வர்களுக்கு உதவியாயிரும். அழுகிறவர்களை மகிழச் செய்தருளும். மனுக்குலத்துக்காக மன்றாடி யருளும். குருக்கள், ஆயர்களுக்காகப் பரிந்து பேசி யருளும். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்த சந்நியாசிகள் கன்னியர்களுக்காகவும் மனுப் பேசியருளும். உமது சதா சகாயத்தை வேண்டு வோர் உமது உதவியை உணரச் செய்தருளும்.

ஓ மாதாவே! நீர் எங்களுக்கு அடைக்கல மாயிருக்கிறீர். குறைகளிலும், துன்பங்களிலும் உதவி யாகவும் இருக்கிறீர்.

🌺பிரார்த்திக்கக்கடவோம்🌺

ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவே! உமது மாதாவாகிய கன்னிமரியாயை எப்பொழுதும் உதவி செய்யத் தயாராயிருக்கும் தாயாக எங்க ளுக்குத் தந்தருளச் சித்தமானீரே. அவருடைய அற்புதமான சாயலை வணங்கி அன்னைக்குரிய உதவியை மிகவும் ஆவலுடன் வேண்டிநிற்கும் நாங்கள் உம்முடைய இரட்சண்யத்தின் பலனை சதாகாலமும் அனுபவிக்க தகுதியுள்ளவர்களா யிருக்கக் கிருபை செய்யும்படி தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். சதாகாலமும் சீவியரு மாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற சர்வேசுரா.  ஆமென்.

பரிசுத்த பாப்பரசருக்காக வேண்டிக் கொள்வோம். ஒரு பர. அருள். திரி.

🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻
இடைவிடா சகாய அன்னையை நோக்கி மன்றாட்டு
🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻🌹✨🙏🏻

நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே, உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல், புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல், விரோதிகளின்பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும்.

மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேசுரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! ஆமென்.



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்