ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்
பரலோகத்தில்
இருக்கிற பிதாவாகிய சருவேசுரா
எங்கள் மேல்
இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்டு
இரட்சித்த சுதனாகிய சருவேசுரா
எங்கள் மேல்
இரக்கமாயிரும்.
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா
எங்கள் மேல்
இரக்கமாயிரும்
தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா
எங்கள் மேல்
இரக்கமாயிரும்
-
புனித மரியாயே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
- இறைவனின் புனித மாதாவே,
- கன்னியர்களுள் உத்தமமான கன்னிகையே,
- பரிசுத்த செபமாலை மாதாவே,
-
சென்ம பாவமில்லாமல் உற்பவித்த
புனித மரியாயே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
- உலகம் படைக்கப்படு முன் சருவேசுரனால் தொpந்து கொள்ளப்பட்ட புனித ஆரோக்கிய
மாதாவே,
- இன்பவனத்தில் ஆதிப்பெற்றௌருக்கு அறிவிக்கப்பட்ட புனித ஆரோக்கிய
மாதாவே,
- பாவ இருளை அகற்றுகின்ற ஞான ஒளியான புனித ஆரோக்கிய
மாதாவே,
- விடிவெள்ளியென்று இறைவாக்கினரால் போற்றப்படும் புனித ஆரோக்கிய
மாதாவே,
- மனுக்குலத்துக்கு அருள்மழை பொழிவிக்கும் மேகமான புனித ஆரோக்கிய
மாதாவே,
- எல்லா நன்மைத்தனத்திற்கும் பாத்திரமான புனித ஆரோக்கிய
மாதாவே,
- பிதாப்பிதாக்களால்
பரிசுத்தவதியென்று அழைக்கப்பட்ட புனித ஆரோக்கிய
மாதாவே,
- அகங்காரப் பேயின் தலையை மிதித்த புனித ஆரோக்கிய
மாதாவே,
- இஸ்ராயேலரின் அரச குலங்களுள் சிறப்புற்ற குலத்தில் உதித்த புனித ஆரோக்கிய
மாதாவே,
- பேறுபெற்ற அன்னம்மாள், சுவக்கீனின் திருமகளாய் பிறந்த புனித ஆரோக்கிய
மாதாவே,
- அவர்களின் வேண்டுதலாலும், நற்செயல்களாலும் இறைவனின் அன்புக் குழந்தையாகப் பிறந்த
புனித ஆரோக்கிய மாதாவே,
- தூதர், புனிதர் அனைவருக்கும் மேலாக நிறைந்த அருள் ஒளியோடு பிறந்த புனித ஆரோக்கிய
மாதாவே,
- படைப்புப் பொருள்கள் அனைத்திற்கும் மேலாக இறைவனுக்கு மகிமையளிக்கப் பிறந்த புனித
ஆரோக்கிய மாதாவே,
- விண்ணுலகும், மண்ணுலகும் போற்றிடும் அழகுடன் பிறந்த புனித ஆரோக்கிய
மாதாவே,
- கடவுளின் கொடைகளை எல்லாம் பெறுவிக்கும் இறைகுலக் கொழுந்தான புனித ஆரோக்கிய
மாதாவே,
- நித்தியமும் இறைவனின் திருமுன் தேர்ந்தெடுக்கப் பெற்றவளாக விளங்கிடும் புனித
ஆரோக்கிய மாதாவே,
- தூய்மையின் வழியில் எல்லாப் புனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் புனித
ஆரோக்கிய மாதாவே,
- பிறப்பின்போது விண்ணக ஒளியால் சுடர்விட்ட புனித ஆரோக்கிய
மாதாவே,
- மனுக்குலத்தின் மகிழ்ச்சியாக விளங்கிடும் புனித ஆரோக்கிய
மாதாவே,
- பிறந்தவுடன் விண்ணகத் தந்தைக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட புனித
ஆரோக்கிய மாதாவே,
- உமது அழகுக்கேற்ப
மரியென்னும் புதிய பெயர்
சூட்டப்பெற்ற புனித ஆரோக்கிய
மாதாவே,
- என்றும் கன்னிகையாக விளங்கும் புனித ஆரோக்கிய
மாதாவே,
- ஆலயத்தில் அனைவருக்கும் ஆசிரிகையாக நடந்து காட்டிய புனித ஆரோக்கிய
மாதாவே,
- நோயுற்ரோரின் துன்பத்தை அகற்றி நலமருளும் புனித ஆரோக்கிய
மாதாவே,
- உம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடாத பேருபகாரியான புனித ஆரோக்கிய
மாதாவே,
- புனிதர்களின் விண்ணக முடியென விளங்கும் புனித ஆரோக்கிய
மாதாவே,
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்களைப் பொறுத்தருளும் யேசுவே
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே
ஒரு-
யேசுக்கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
எல்-
இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
செபிப்போமாக
விண்ணகத் தந்தையே! பரிசுத்த கன்னிகையாகிய
புனித மரியாளை எல்லா அருட்கொடைகளாலும்
அலங்கரித்து உமது திருக்குமாரனைப் பெற்று அமுதூட்டி வளர்க்கும் தாயாக நித்தியம்
தொட்டு
தெரிந்து
கொண்டீரே அந்த உத்தம தாய் எங்களுக்காக மன்றாடிக் கேட்கும்
விண்ணப்பங்களை நாங்கள் அடைந்து, வறுமை, பிணி போன்ற துன்பங்களினின்று
பாதுகாக்கப்படுவோமாக. அத்தாயின் வழியாக ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற்றவர்களாய்
தூய்மையின் வழிநடந்து விண்ணக முடியைப் பெற்றுக்கொள்ள அருள் கூர்ந்தருளும். எங்கள்
ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்
புனித ஆரோக்கிய அன்னைக்கு ஜெபம்
கன்னி மரியே! ஆரோக்கிய அன்னையே! வேளாங்கன்னியில் இரக்கத்தின் அரியணையில்
வீற்றிருக்கும் எங்கள் ஆண்டவளே! எங்களின் ஆன்ம, உடல் நோய்களை அகற்றி, எங்களுக்கு ஆறுதலாயும்
அடைக்கலமாயும் இருந்தருளும். உமது பேருதவியால் எண்ணற்ற பிணியாளர் நலமடைந்துள்ளனர்.
உமது வல்லமையையும், தயவையும் நம்பிக் கொண்டு உம்மை நாடி வந்துள்ளோம். உம திருமகனையும்
, உம்மையும் அன்பு செய்து இறைத் தொண்டர்களாக நாங்கள் விளங்குமாறு செய்தருளும். எங்களின்
ஆன்ம அருள் வாழ்வை வளப்படுத்தி அருளும்.
உலக துன்பங்களாலும், மன வேதனைகளாலும் அல்லலுறுகின்றவர்களுக்கு அருகிலிருந்து உமது
தாயன்புடன் ஆறுதலளியும். இறைவனின் திருவுளத்திற்கு ஏற்புடையதானால் அத்தகைய துன்ப வேதனைகளிநின்று
அவர்களைக் காத்தருளும் . பாவச் சேற்றில் சிக்குண்டவர்களை உமது அருள் நீரால் கழுவி
புனிதராக்கியருளும்
இதயத் தாழ்ச்சியும் , சாந்தமும் உள்ள இறைமகனை ஈன்றெடுத்த தாயே ! உமது உதவியை நாடியவர்
எவராகிலும் உம்மால் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லையே ! எங்களுடைய துயர வேளைகளில் எங்களின்
தஞ்சமாயிருப்பீர் என்று நாங்கள் உறுதியாயிருக்கிறோம். ஏனெனில் ஆறுதல் அளிக்க
விரைந்திடும் விண்ணகத்தாய் நீரே ! இம்மண்ணகத்தில் கசிந்த கண்களையும் அவற்றினின்று
வழிந்தோடும் துன்பக் கண்ணீரையும் கண்டு இரக்கமுடன் எங்களை அரவணைத்துக் கொள்வீராக
இறை மக்களுக்கெல்லாம் சகாயம் புரிந்து வரும் ஆரோக்கிய மாதாவே ! நீர் எல்லாம் வல்ல
இறைமகன் கிறிஸ்துவின் அன்னையாகையால் எவ்வுதவியையும் எங்களுக்கு அடைந்து கொடுக்கக்கூடியவள்
அன்றோ ! எல்லா ஆபத்துகளினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும். எங்களைப் பற்றியுள்ள
தீமைகளை அகற்றியருளும். இறை அன்பில் வளர்ந்திட , நலமும், வரமும், அருளும் பெற்று
நாங்கள் ஒவ்வொருவரும் உம்மோடு கூடி என்றென்றும் இறைபுகழ் பாடி அவரை வாழ்த்துவோமாக
ஆமென்