என் செபமாலை...
1. அன்னைக்கொரு மாலையாகுமே
2. எனக்கொரு ஆறுதலாகுமே
3. குடும்பத்திற்கே விளக்காகுமே
4.செப உதவிக்கான கலமாகுமே
5. பாதை காட்டும் கலங்கரையாகுமே
6. விண்ணுறவு நுழைவுச் சீட்டாகுமே
7. பாவநாட்டம் தடுக்கும் கேடயமாகுமே
8. தன்னந்தனிமையில் துணையாகுமே
9.கூடி செபிக்க அருள்மழையாகுமே
10.மனக்காயம் ஆற்ற மருந்தாகுமே
11. உயர் எண்ணம் கொள் ஏணியாகுமே
12. மனபாரம் குறை மந்திரமாகுமே
13.என்னை பிரதிபலிக்கும் அடையாளமாகுமே
14. நோயுற்றோர் அருகில் உறவாகுமே
15. இயேசுவோடிருக்க விண்கருவியாகுமே
16.தீமனதை தடுக்கும் வேலியாகுமே
16. நல்லோர் நடமாடும் சோலையாகுமே
17. குடும்பம் மகிழும் பூங்காவாகுமே
18. அன்னையோடு பேச ஒலிவாங்கியாகுமே
19. நான் என்ற கர்வம் குறைத்த தேனாகுமே
20.செப இல்ல மேல்வரி சட்டமாகுமே
21. ஆன்ம உணவுக்கான குடிநீராகுமே
22. நற்கருணையை சுட்டிக்காட்டும் வழிகாட்டியாகுமே
23. நற்செயலாற்ற தூண்டும் உந்து சக்தியாகுமே
24.புரியாத மக்களுக்கு ஒரு ஆச்சரியமாகுமே
25. உணர்ந்து சொல்வோருக்கு அதிசயமாகுமே
26. பயண அசதி குறைக்கும் வசந்தமாகுமே
27.செபிக்க செபிக்க வாழ்வின் உரமாகுமே
28. குழந்தைகள் மகிழ்ந்திடும் ஞானமாகுமே
29. நடந்தோ அமர்ந்தோ செபிக்க மனம் பூவாகிடுமே
30. சாத்தானை எதிர்கொள்ள தீப்பிழம்பாகுமே
31.எண்ணில்லா வரம் தரு பழச்சோலையாகுமே
32. அலைபாயாது நடத்தும் நற்சாலையாகுமே
33.ஆழ்மனதில் நீங்காது ஒலிக்கும் ரீங்காரமாகுமே
34. இயசுவோடு என்னை இருத்திடும் ஆணி வேராகுமே
35.பயம் போக்கிடும் உண்மை நண்பனாகுமே
36. தீங்காற்று தாக்கா அன்பு வீடாகுமே
37.வாலிபர் கழுத்தில் ஊஞ்சலாகுமே
38.உலகிற்கு பயன்தர உதவும் நல்உப்பாகுமே
39.தூய ஆவியின் கொடைகளை நினைவூட்டும் உறைவிடமாகுமே
40. நெஞ்சம் நிறை வான் இனிமையாகுமே
41. இயேசுவின் வாழ்வை சித்தரிக்கும் புத்தகமாகுமே
42.கைகளில் உறவாடும் வான் திரவியமாகுமே
43.வான் வீட்டில் எனக்கான இருக்கையாகுமே
44.வரும் தலைமுறை காக்க நான் ஈட்டிய சொத்தாகுமே
45.கட்டுகளை விரட்டி கொல்லும் ஆயுதமாகுமே
46. நற்குணங்களை சேமிக்கும் பாத்திரமாகு மே
47.அன்னையோடு இணைக்கும் பாசக் கயிறாகுமே
48.அன்னைக்காக உழைக்கும் அடிமையாக்குமே
49.இயேசுவைத் தொடும் சுவாசமாகுமே
50.நம்பிக்கையை பலப்படுத்தும் தீபமாகுமே
51. திருக்குடும்பத்தைப் போல மாறச் சொல்லுமே
52.கண்ணீரை துடைக்கின்ற கரமாகுமே
53.என்றும் எப்பொழுதும் எங்கும் என்னை தாங்கிடுமே...
செபமாலை அன்னை திருவிழா நல்வாழ்த்துக்கள்
அன்புடன்,
கஸ்மீர் ரோச்,
சின்னமலை,சென்னை.
|
|
|
|