Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மருதமடு மாதாவின் மன்றாட்டு மாலை

 

ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்
பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
-  
புனித மரியாயே
   
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்   
- மருத மடுவிலே திருப்பதி கொண்டு தேவ அருள் பொழிகின்ற செபமாலை
  மாதாவே,
- கரடி, புலி வாழும் கானகத்
தூடே அருளைத்தந்து கருணை மழை பொழிந்து
  வருகின்ற செபமாலை மாதாவே,

- நம்பி வந்தோருக்கு என்றும் தப்பாது அடைக்கலம் அருளிவருகின்ற
  செபமாலை மாதாவே,
-
இத்திருப்பதிக்கு யாத்திரை செய்து இளைத்து, களைத்து வருகிறவர்களுக்குக்
  களைப்பாற்றிக் குளிர்ந்த நிழலைத்தந்து வருகின்ற செபமாலை மாதாவே,

- மருதமடு திருப்பதியை நினைக்க இன்பத்தையும், இப்பதியில் வசிக்க
  மதுரத்தையும்  அருளுகின்ற செபமாலை மாதாவே,
-
வன்னிக்காட்டிலே பெற்ற மாதாவைப்போல் அன்போடு அடியார்க்கு இரங்கி
   வருகின்ற செபமாலை மாதாவே

- பிசாசுகளின் சோதனைகளால் துன்பமடைகிறவர்களுக்குத்
தைரியம் தந்து
  
புதுமை புரிகின்ற செபமாலை மாதாவே,
செவிடருக்குக் கேள்வியையும், ஊமைகளுக்கு நாவன்மையையும், குருடருக்கு
   கண் பார்வையையும் கொடுத்து புதுமை புரிகின்ற செபமாலை மாதாவே,

-  சகல வியாதி வருத்தங்களையும் நீக்கி சுகம்கொடுத்து வருகின்ற செபமாலை
   மாதாவே,
-
 அழுகிற பேர்களை அரவணைக்கிற அன்னையாகிய செபமாலை மாதாவே,
-  தஞ்சமென்று ஓடிவருகின்ற அடியார்கள் மேலே தயவாயிருந்து வருகின்ற
   செபமாலை மாதாவே,
சென்ம மாசணுகாக் கன்னிகையான செபமாலை மாதாவே,
-  பரலோக பூலோக அரசியான செபமாலை மாதாவே,
-
 எங்களுக்கு மனம் நிறைந்த பாக்கியமாகிய செபமாலை மாதாவே,
 - எங்களுக்குத் தேடக் கிடையாத செல்வமும், ஆறுதலும், தேறுதலும்,
   காவலுமான செபமாலை மாதாவே
 -
எங்களுடைய ஆத்தும இரட்சணியத்திற்கு அடைமானமாகிய செபமாலை
   மாதாவே,

 - நாங்கள் பரலோகமேறிச் செல்வதற்கேற்ற ஏணியாகிய செபமாலை மாதாவே,
எங்களை மோட்சத்துக்கு இழுத்தெடுப்பதற்குச் செபமாலை என்னும் திரு
    வடத்தைப் பரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு விட்டிருக்கும் செபமாலை
   மாதாவே,

-  உலகத்திலே அருட்செல்வம் பொழிகின்ற சிங்காரத் தோப்பாகிய செபமாலை 
   மாதாவே,
 -
எங்கள் சகல நம்பிக்கையும், எங்களுக்கு சகல துணையுமான செபமாலை
    மாதாவே,

 -  நீர் எங்கள்மேல் கிருபைக்கண் சாத்தியருள வேண்டுமென்று தாயே உம்மை
    மன்றாடுகிறோம்.
- தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
-
  எங்களுடைய மன்றாட்டுக்கு இரங்க வேண்டுமென்று தாயே! உம்மை  
    மன்றாடுகிறோம்.
  தாயே எங்கள்...............
-  எங்களுடைய அழுகைச் சத்தமானது உம்முடைய சந்நிதி மட்டும் எட்டுவதால்
   அதற்குச் செவி கொடுத்தருள வேண்டுமென்று தாயே! உம்மை
   மன்றாடுகிறோம்,
-
  நாங்கள் வறுமையால் வருந்துகின்றோம், பிணியிலே அழுந்துகின்றோம்
   எங்கள் மேலே இரங்க வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்.

 - நாங்கள் உம்முடைய திருச் சந்நிதிக்குச் செய்த விண்ணப்பங்களை எல்லாம் 
   தப்பாது அடையும்படி செய்ய வேண்டுமென்று தாயே!  உம்மை
   மன்றாடுகிறோம்.
- நாங்கள் பாவ வழிகளைவிட்டுப் பரிசுத்தராய் உம்முடைய திருக்குமாரானுக்கு
   உகந்தவர்களாய் சீவிக்கும்படி செய்ய வேண்டுமென்று தாயே! உம்மை
   மன்றாடுகிறோம்.

-  உம்முடைய திருப்பதிக்கு யாத்திரைசெய்து இளைத்துக் களைத்து வந்த
   யாத்திரிகர்கள் ஒவ்வொருவர் மேலும் மனமிரங்கி அவர்கள் கேட்கிற
   மன்றாட்டுக்களை எல்லாம் அனுக்கிரகிக்க வேண்டுமென்று தாயே! உம்மை
   மன்றாடுகிறோம்.
- உம்முடைய திருப்பதியிலே நோய் பிணி அணுகாது சகல யாத்திரிகர்களையும்
   சேமமாய்க் காத்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்.

- இத்திருப்பதி சிறக்கவும் இதிலே சகல சாதிசனங்களும் ஆத்தும ச
ரி
   சகாயங்களை அடைந்து சந்தோசிக்கவும் செய்ய வேண்டுமென்று தாயே!
   உம்மை மன்றாடுகிறோம்.
-  உம்முடைய இன்ப சந்நிதானத்தை தேடிவந்த நமது பிறசமய சகோதரர் தங்கள் 
   மன்றாட்டுக்களை அடைந்து தேவ அருளைப் பெறவேண்டுமென்று தாயே!
   உம்மை மன்றாடுகிறோம்.

-  பஞ்சம், படை, கொள்ளைநோய், பெருவாரிக் காச்சல் வராதபடி காத்தருள
   வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்.
-
 நல்லமழை பெய்யவும், நாடு செழிக்கவும் கிருபை செய்ய வேண்டுமென்று
   தாயே! உம்மை மன்றாடுகிறோம்
.
 - சத்தியவேதம் தளைத்தோங்கி வளரக்கிருபை செய்தருள வேண்டுமென்று
   தாயே! உம்மை மன்றாடுகிறோம்,
-
  எங்கள் பரிசுத்த பிதாவான பாப்பரசரை ஆசீர்வதித்து அவரைச் சத்திராதிகள்
   கையிலிருந்து காத்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்.

-  எங்கள் மேற்றாணியாரை ஆசீர்வதித்து அவரைக் காப்பாற்றி அவ
ின் சுகிர்த
   கருத்துக்கள் நிறைவேறத் தயைசெய்ய வேண்டுமென்று தாயே!  உம்மை
   மன்றாடுகிறோம்.
-
  உமது ஆதரவில் இருக்கும் எங்கள் குருமாரை ஆசீர்வதித்தருள
   வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்.

-  எங்கள் சந்நியாச கன்னியாஸ்திரிமாரின் சபைகள், தொண்டர் சபைகள் வேத
   வைராக்கியத்தினால் நிறைந்து விளங்கத் தயைசெய்ய வேண்டுமென்று தாயே!
   உம்மை மன்றாடுகிறோம்.
 -  எங்கள் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் உத்தம கத்தோலிக்க ஆசிரியர்கள்,
   ஆசிரியைகளாக விளங்கக் கிருபை செய்ய வேண்டுமென்று தாயே! உம்மை
    மன்றாடுகிறோம்.

 - எங்கள் பிள்ளைகளின் ஞான அறிவு வளரவும் அதை அவர்களுக்கு ஊட்டும்
   தொண்டர்கள் அதிக
ிக்கவும் வேண்டுமென்று தாயே! உம்மைமன்றாடுகிறோம்
 - திருச்சபையின் ஐக்கிய இயக்கத்தை ஆசீர்வதித்து சகல சாதி சனங்களிடையே
   உமது திருக்குமாரன் விரும்பிய ஒற்றுமையைத் தந்தருள வேண்டுமென்று
   தாயே! உம்மை மன்றாடுகிறோம்.

-  உம்மிடம் மன்றாடுகிற எங்கள் எல்லோரையும் ஆசீர்வதித்தருள வேண்டு
ம்
   என்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்.
எங்களையும், எங்கள் குடும்பங்களையும், எங்களுடைய பொருள்
   பண்டங்களையும், எங்களுடைய தொழில் துறைகளையும் ஆசீர்வதித்தருள
   வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்

-  இங்குள்ள யாத்திரிகர்கள் மேலே உம்முடைய அடைக்கலமும், அருளும்,
   ஆதரவும் என்றைக்கும் நீங்காது நிலைத்திருக்கும்படி செய்ய வேண்டுமென்று
    தாயே! உம்மை மன்றாடுகிறோம்.
-  நாங்கள் சத்திய வேதத்திலே உத்தமராய் சீவித்து நன்மரணமடைந்து மோட்ச
   இராட்சியத்தில் சேர்ந்து உம்முடைய திருக்குமாரனுடைய சந்நிதியிலே
  நித்தியமாய் களிகூர்ந்திருக்கும்படி கருணைசெய்ய வேண்டுமென்று தாயே! 
  உம்மை மன்றாடுகிறோம்
.

- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,

   எங்களைப் பொறுத்தருளும் யேசுவே

- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
 
  எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,

   எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே

மு- யேசுகிறிஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக
து- பரிசுத்த செபமாலை மாதாவே!  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக;

சருவேசுரா சுவாமி! பரிசுத்த செபமாலை மாதாவை வணங்கி அவருடைய சலுகையை இரந்து சாஸ்டாங்கமாக விழுந்து கிடக்கும் யாத்திரிகர்களாகிய அடியார்கள் மேலே கிருபை வைத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான யேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்கு தந்தருளும்; ஆமென்.

மருதமடு மாதாவிற்குச் செபம்

         மருதமடுத் திருப்பதியிலே பேருதவி புரிகின்ற பரிசுத்த செபமாலை மாதாவே, பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம் தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ, எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோசமும், எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்கு காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களைத் தாய் பாராட்டுவாளோ? உம்மைத்தேடி வந்த நிர்ப்பாக்கியர்கட்கு உதவியாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர்; இரங்காவிட்டால் எங்களுக்கு வேறார் இரங்குவார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறார் உதவுவார்? நீர் ஆத
ரியாவிட்டால் எங்களை வேறார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறார் நினைப்பார்? தஞ்சமென்று ஓடிவரும் அடியார் மேலே தயவாயிரும் தாயே! தயைக்கடலே! தவித்தவர்களுக்கு தடாகமே! தனித்தவர்களுக்கு தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடிவந்தோம்! காடுகளைக் கடந்து ஓடிவந்தோம்! துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளால் வாடிவந்தோம்! எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரை பலனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படியாகுமோ அம்மா? அடியோர்க்கு அன்பான அம்மா, செபமாலை அம்மா எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும்; ஆமென்.

 செபமாலைத் தாயாரின் திருச்சுரூபத்திற்கு முன்பாக சொல்லும் செபம்


       பரலோக பூலோக இராக்கினியே! ஆரணியத்தின் ஓதையே! யாத்திரிகர்களின் பாதையே! அன்பான தாயே! நான் இந்த கண்ணீர் கணவாயிலே சஞ்சலமடைந்து, துயர்கொண்டு, அயர்வடைந்து, ஆதரவின்றி பரிதவிக்கின்றேன். ஐயோ! தாயே உலக மாய்கையானது என்னைக் கஸ்ரப்படுத்துகின்றதே! நாலு பக்கமும் தீமையும் துயரமும் வளைந்து என்னைப் பங்கப்படுத்துகிறதே! அரவின் வாய் தேரைபோல் நடுங்குகிறேனே! ஆலைவாய்க் கரும்புபோல் நெருக்கப்படுகின்றேனே! அன்னையில்லாப் பிள்ளைபோல் அந்த
ரிக்கின்றேனே! புலியின் வாய்க் குட்டிபோல் பரிதவிக்கின்றேனே! அம்பு தைத்த மான்போல் அலறுகின்றேனே! அந்தர வழியில் அகப்பட்ட பாலன்போல் திகைக்கின்றேனே! அம்மா தாயே! தஞ்சமென்று அடைய இடமே இல்லையே, ஆதரவளிக்க மனிதரோ இல்லை, ஆறுதலுரைக்க அன்னையும் இல்லை, என் செய்வேன் தாயே! நீர் கரடி, புலி வசிக்கும் இக்கானகத்துர்டே எழுந்தருளியிருந்து ஆதரவற்றவர்களையும், துன்ப துரிதங்களால் பீடிக்கப்படுகிறவர்களையும், கிலேசமுற்றவர்களையும் உமது சந்நிதிக்கு அழைக்கிறீர். உமது இன்ப தொனியைக் கேட்டு உமதண்டை ஓடிவந்து நிற்கிற உமது அடியானை(ளை)க் கிருபைக் கண்கொண்டு பாரும், என்மேல் அன்பு கூரும், உமது திருச்சுதன் எனக்கோரும், என் இடரைத் தீரும், எனக்குத் தேவையானவைகளைத் தாரும். மாமரியே! தயாபரியே! நானுமது சலுகையால் அடைந்ததும், அடைகிறதும், அடையப் போவதுமாகிய சகல இகபர நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லி என்னையும், எனக்கு சேர்ந்தவர்களையும், எனக்குள்ள யாவற்றையும் உமக்கு பாத காணிக்கையாக வைக்கிறேன். கடைசியாய் என் அன்புள்ள தாயாரே! நான் உமது இன்ப சந்நிதானத்தை விட்டுப்பிரிய இருக்கிறதினால் உமது பாதாரவிந்தத்தை முத்தி செய்து உமது ஆசீர்வாதத்தை கேட்கிறேன். அவ் ஆசீர்வாதம் என்மேலும் எனக்குள்ள யாவற்றின் மேலும் இருக்கக்கடவது ஆமென்.


வந்தோம் உந்தன் சந்நிதிக்கு  சேர்த்தணைத்துக் காத்தருள்வாய்