பாகம்
-11 |
பின்பு, இறைவன் அன்னை மாமரியிடம், "என் அன்புக்குரியவளே! இப்போது
உனக்கு வேண்டியதைக் கேள்" என்றார்.
அதற்கு அன்னை மாமரியாள், "எல்லாம் வல்ல இறைவா! மனிதக் குலத்தை
மீட்பதற்காக உம் ஒரே பேறான மகனை விரைவில் அனுப்ப வேண்டும் என்றும்,
தன் பெற்றோர் இறையன்பில் நிலைத்திருந்து மேலும் பல அருள்வரங்களைப்
பெற வேண்டும் என்றும் ஏழைகளுக்கு இரங்க வேண்டும் என்றும், இறைத்
திருவுளத்திற்கேற்ப தான் வாழ வேண்டும் என்றும் கேட்டுக்
கொண்டார்கள்.
அதன்பின், வான தூதர்கள் அன்னை மாமரியாவை முன்பு அவர் இருந்த
தேவாலயத்தில் கொண்டு போய் விட்டனர். அங்கு சென்றபின், அவர் தன்
தாயார் தனக்கென்று கொடுத்த அனைத்தையும் மடத்துத் தலைவியிடம்
கொடுத்து, அவற்றை ஏழைகளுக்குக் கொடுக்கும்படி கேட்டுக்
கொண்டார்கள். தனக்கென்று ஒரு எளிய ஆடையும், ஒரு கையெழுத்துப்
பிரதியான செபப் புத்தகம் மட்டுமே வைத்திருந்தார். மடத்தில்
தான் செய்ய வேண்டுவன எவை என்பனக் குறித்து குருக்களிடமும், மடத்தின்
தலைவியிடமும் தாழ்ச்சியுடன் கேட்டார்கள்.
பெரிய குரு சிமியோன் அன்னை மாமரியாயிடம், " மகளே, நீ இறைவனிடம்
உன்னையே அர்ப்பணிக்க வேண்டும். இறைவனின் ஆலயத் தேவைகளுக்காகவும்,
மனுக்குலத்தின் தேவைகளுக்காகவும் இறை வேண்டுதல் செய். உலக மீட்பரின்
வருகைக்காகச் செபி. நீ மூன்று மணி வரை ஓய்வெடு. அதிகாலையில் எழுந்து
மூன்று மணி நேரம் செபம் செய். பின் கைத்தொழில் செய். அளவுடன்
உணவு உட்கொள். உன்னை வழிநடத்தும் தலைவியிடம் அறிவுரை கேள்.
நாளின் மீதி நேரங்களில் வேத நூல்களைப் படி. அனைத்துச் செயல்களிலும்
பணிவு, தாழ்ச்சி, கீழ்ப்படிதல் கொண்டிரு" என அறிவுரை கூறினார்.
தேவமாதா இவ்வறிவுரைகளை முழந்தாட்படியிட்டபடியே கேட்டார்கள்.
பின், குருவின் ஆசி பெற்று, அவர் கரங்களை பாசமுடன் முத்தமிட்டார்கள்.
அதன்பின் தேவமாதா பெரிய குருவின் அறிவுரைப்படி நடந்தார். வழிநடத்தும்
தலைவியிடம் அனுமதி பெற்று, பிற சகோதரிகளின் வேலைகளில் உதவினார்கள்.
தினமும் காலை, மாலை வழிநடத்தும் தலைவியின் கரங்களை அன்புடன்
முத்தம் செய்தார்கள். சில நேரங்களில் அத்தலைவியின் பாதங்களையும்
முத்தம் செய்தார்கள். அன்றாடம் வேத வாசித்தார்கள்
இயேசுவுக்கு புகழ் !!! மாமரித்தாயே வாழ்க
|
|
|