வயல்வெளி புதுமை மாதா மன்றாட்டு மாலை ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை தயவாகக் கேட்டருளும் விண்ணகத்தில் இருக்கிற பிதாவாகிய இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் பாவிகளை மீட்ட சுதனாகிய இறைவா எங்கள்..... தூய ஆவியாகிய இறைவா எங்க...... தூய மூவொரு இறைவா எங்க..... பூலோகம் போற்றும் வயல்வெளி புதுமைமாதாவே. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். விண்ணவர் போற்றிடும் வயல்வெளி புதுமை மாதாவே . தந்தையாம் இறைவனால் தேர்ந்து கொள்ளப்பெற்ற வயல்வெளி புதுமை மாதாவே. மனுக்குலத்தை மீட்க தன்னையே அர்ப்பணித்த வயல்வெளி புதுமை மாதாவே. அலகையின் தலையை மிதித்த வயல்வெளி புதுமை மாதாவே. பன்னிரு விண்மீன்களை முடியாகக் கொண்ட வயல்வெளி புதுமை மாதாவே. சந்திரனை ஆடையாக அணிந்து சூரியனின் ஒளியைப் போன்று பிரகாசமுள்ள வயல்வெளி புதுமை மாதாவே. அருள் நிறைந்தவளே வாழ்க என்று கபரியேல் தூதரால் வாழ்த்தப்பெற்ற வயல்வெளி புதுமை மாதாவே. இறைமகனை தன் கருவினில் தாங்க பேறுபெற்ற வயல்வெளி புதுமை மாதாவே பெண்களில் சிறந்தவள் எனப் போற்றப்பெறும் வயல்வெளி புதுமை மாதாவே. தூய உள்ளம் கொண்டு இறைச்சித்தத்தை ஏற்ற வயல்வெளி புதுமை மாதாவே. சிமியோன் உரைத்த இறைவாக்கை சிந்தித்த வயல்வெளி புதுமை மாதாவே. தேவாலயத்தில் இயேசுவை போற்றி மகிழ்ந்த வயல்வெளி புதுமை மாதாவே. பிறரின் துயரைப் போக்க இயேசுவிடம் பரிந்துரைத்த வயல்வெளி புதுமை மாதாவே. துன்பப்படுவோரின் துயரைப் போக்கிய வயல்வெளி புதுமை மாதாவே. சிலுவையடிpல்மனுக்குலத்திற்கே தாயான வயல்வெளி புதுமை மாதாவே. இயேசுவின் பாடுகளில் பங்குபெற்ற வயல்வெளி புதுமை மாதாவே. இயேசுவின் உயிர்ப்பில் மகிழ்ச்சி அடைந்த வயல்வெளி புதுமை மாதாவே. அப்போஸ்டதலர்களின் வாழ்வில் துணைநின்ற வயல்வெளி புதுமை மாதாவே. அண்டிவந்தோரைக் காக்கும் அன்னையாகிய வயல்வெளி புதுமை மாதாவே. கேட்டவாக்கு கேட்டவரம் தருகின்ற வயல்வெளி புதுமை மாதாவே. குடும்பங்களின் பாதுகாவலியான வயல்வெளி புதுமை மாதாவே. நோயாளிகளுக்கு நற்சுகம் தருகின்ற வயல்வெளி புதுமை மாதாவே. ஆதரவற்றோர்க்கு அடைக்கலமான வயல்வெளி புதுமை மாதாவே. வாழ்வுக்கு வழிகாட்டியான வயல்வெளி புதுமை மாதாவே . சகல நன்மைகளும் நிறைந்தவளான வயல்வெளி புதுமை மாதாவே. திருச்சபையின் பாதுகாவலியான வயல்வெளி புதுமை மாதாவே. இத்திருத்தலத்தின் ஜென்ம இராக்கினியான வயல்வெளி புதுமை மாதாவே. உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகிய இயேசுவே (3 முறை) 1. எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் 2. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 3. எங்கள் மேல் இரக்கமாயிரும். முதல்: இயேசுக்கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படி. துணை: இறைவனின் தூய அன்னையே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். மன்றாடுவோமாக பூலோகம் போற்றும் வயல்வெளி புதுமை மாதாவே! ஆதிப் பெற்றோரின் கீழ்ப்பாயாமையால் விளைந்த பாவத்தினால் துன்புறும் எம்மைக் கருணைக் கண்நோக்கியருளும். தாய் அன்பிற்குரிய பரிவோடு எம்மை வழிநடத்தியருளும். இக்கருத்துக்களுக்காக உமது திருமகனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசும் தாயே! என்றும் வாழும் தந்தையே இறைவா! மனித குல மீட்பரே! உமது அன்பு மகனையும் உமது நேச தாயையும் சகலத்தையும் பராமரிக்கும் தூய ஆவியே! உமக்கு ஏற்ற பத்தினியுமாகிய புனித கன்னி மரியாளையும் நித்தியத்திலிருந்து நியமிக்கப்பட்டபடி குறிப்பிட்ட காலத்தில் சிறப்பான முறையில் மகிமைப்படுத்த தீர்மானித்தீரே! உமக்கே புகழ். மூவொரு கடவுளே இறைவா உமது திட்டப்படி இப்பூவுலகில் ஒரு பகுதியாகிய பிரான்ஸ் நாட்டில் உமது சிறப்பான அருள்மழையால் அந்த அன்னை மூலமாய் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கி வருகிறீரே, உமக்கே வாழ்த்தும் புகழும். பிரான்ஸ் நாட்டில் எழுந்தருளியிருக்கும் வயல்வெளி புதுமை மாதாவே! இயற்கைச் சக்திக்கும் மனித வல்லமைக்கும் மேலாக உலக மக்களின் சொல்ல முடியாத துன்பங்களைப் போக்கி, அவர்கள் ஆசிக்கும் நன்மைகளைப் பெருமளவில் அளிக்கும் உமது அன்பும் அருளும் இப்பரந்த திருநாட்டில் மட்டுமேயன்றி உலகத்தின் எல்லாப் பாகங்களிலும் பரவி இருக்கின்றதை எண்ணி நன்றிப் பண்பாடுகிறோம். இந்நேரத்தில் என் ஆன்மாவிற்கும் உடலுக்கும் வாழ்க்கை நிலைக்கும் ஏற்பட்ட துயரை போக்கவும் ஆசிக்கும் நன்மைகளை அடையவும் எப்பக்கமும் ஓடியாடி களைத்து எவ்வித பயனின்றி கடைசியாக வயல்வெளி புதுமை மாதாவே! நீரே அடைக்கலம் என்று உம்மைத் தேடி அடைந்து உமது பாதத்தில் விழுந்து கிடக்கிறேன். உமது வல்லமையுள்ள மன்றாட்டால் உமது அன்மையும் அரவணைப்பையும் எமக்கு அளித்தருளும். என் ஆன்மாவிற்கும் உடலுக்கும் வாழ்க்கை நிலைக்கும் ஏற்பட்ட துயர் முற்றிலும் அகல எனக்குத் தேவையான நன்மைகளை நான் அடையவும் மூவொரு இறைவனின் விருப்பப்படி அடைந்து கொடுத்தருளும் தாயே! கடந்தகால குற்றங்களுக்கு வருந்தி கண்ணீரோடு தக்க பரிகாரம் செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். மீதியுள்ள என் வாழ்நாளை கடவுளின் மகிமைக்காகவும் பிறருடைய நன்மைக்காகவும் செலவழித்த பின் இறுதியில் சமாதானத்தில் கண்ணை மூடி, உம்முடன் இறையரசின் பேரின்ப வாழ்வில் பங்கு பெற வரம் அடைந்து தாரும் தாயே, ஆமென். 3 அருள், 1 திரி உமக்கு ஏற்பட்ட துயர் விலக நீ விரும்பும் நன்மை கிடைக்க, வயல்வெளி புதுமை மாதாவை தரிசிக்கவும். |