Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

செபமாலை வழியினிலே

அன்னையே வாழ்க வாழ்க!

இங்கே அழுத்துங்கள்

செபமாலை நமக்கு தரும் 53 கருத்துக்கள்:

தூய ஜெபமாலை அன்னை

அக்டோபர் மாதம் செபமாலை மாதம்
குடும்ப ஜெபமாலை நின்று போனதால் வந்த விளைவு!
 
 
செபமாலையை பக்தியுடன் செபிப்பதன் மூலமும் எனக்குப்  பிரமாணிக்கமாச்  சேவை செய்பவர்களும் எனது தனிப்பட்ட அருளைப் பெற்றுக் கொள்வார்கள்.

செபமாலையை தொடர்ந்து செபிக்கிறவர்களுக்கு எனது விசேட பாதுகாப்பையும் மேலான அருள்களையும் வாக்குப் பண்ணுகிறேன்.

செபமாலை நரகத்திற்கெதிரான ஆற்றல் மிகு கேடயமாகும். அது தீய பழக்கங்களை அழிக்கும், பாவத்திலிருந்து விடுவிக்கும், தப்பறைகளை ஒழிக்கும்.

செபமாலை புண்ணியங்களையும் நற்செயல்களையும் நிறைவிக்கும்.
  அது ஆன்மாக்களுக்கு ஏராளமான இறை இரக்கத்தைப் பெற்றுக் கொடுக்கும்.. அது மனித இதயத்தை உலகப்பற்றுக்களிலும் மாயைகளிலி ருந்தும் நீக்கி அவற்றை  நிலையானவற்றின் மேல் பற்றுக் கொள்ளச் செய்யும். அந்த ஆன்மாக்கள் இவ்வழிகளினால் தம்மை துய்மைப்படுத்தும்.


செபமாலை செபிப்பதன் வழியாகத் தம்மை எனக்கு அர்ப்பணிக்கும் ஆன்மாக்கள் அழிந்து போகமாட்டா.

செபமாலையை பக்தியுடன் அதன் மறை உண்மைகளைத் தியானித்தவாறு
செபிக்கிறவர்கள் எவ்வகை ஆபத்துக்களாலும் மேற்கொள்ளப்படமாட்டார்கள்.
  இறைவன் தன் நீதியில் தண்டிக்கமாட்டார். எதிர்பாராத மரணம் வரவிடமாட்டார். அவர் நேர்மையாளரானால் இறையருளில் நிலைத்திருந்து நிலை வாழ்வூக்குத்தகுதியாவார்.


செபமாலையின் மேல் உண்மையான பக்தி கொண்ட எவரும் திருச்சபையின் அருட் சாதனங்களைப் பெறாமல் இறக்கமாட்டார்கள்.

செபமாலை செபிப்பதில் பிரமாணிக்கமான வர்கள் தம் வாழ்நாளிலும் மரணவேளையிலும் இறைஒளியையும் அவரின் நிறைஅருளையும் கொண்டிருப்பார்கள்.  மரணத்தில் விண்ணக புனிதர்களின் மகிமையில் பங்கு பற்றுவார்கள்.

செபமாலை மட்டில் பற்றுக்கொண்டிருப்பவர்களை உத்தரிக்கிற இடத்திலிருந்து மீட்டுக் கொள்ளுவேன்.

செபமாலை மட்டில் பிரமாணிக்கமுள்ள பிள்ளைகள் விண்ணகத்தில் உயர்ந்த மகிமையின் நிலையை அடைவார்கள்.

செபமாலை செபிப்பதன் வழியாக நீங்கள் என்னிடம் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்.

செபமாலை பக்தியைப் பரப்பிகிறவர்கள் தங்கள் தேவைகளில் என் உதவியைப் பெறுவார்கள்.

செபமாலை கைக்கொண்டுள்ள அனைவரும் தம் வாழ்விலும் மரணத்திலும் விண்ணுலகில் வாழ்வோரைத் தமக்குப் பரிந்துரைப்போராக அடைந்து கொள்ளும் படியான வரத்தை என் திருக்குமாரனிடமிருந்து பெற்றுள்ளேன்.

செபமாலை செபிக்கின்ற அனைவரும் எனது பிள்ளைகளும், எனது ஒரே மகன் யேசுக்கிறிஸ்துவின் சகோதரர்களாவார்.

செபமாலையில் பக்தி கொண்டிருப்பது விண்ணக மகிமையின் சிறந்த முன் அடையாளமாகும்
 


அன்புப் பணியைத் தொடரவே அன்னை மரி இங்கெழுந்தாள்