ஒக்டோபர் |
இலையதிர் காலம் என்றால் மரணமல்ல. வசந்த காலத்தின் தொடக்கம். சூரியன் மறைவது மறைவல்ல. சந்திரன், விண்மீன்கள் உதயத்திற்குத் தொடக்கம். மலர் கருகி விடுவது முடிவல்ல. காய், கனிக்கு இடம் தருகிறது. கோதுமை மணி மடிவது இழப்பல்ல. அது மடிந்தால்தான் பயிர் முளைத்துப் பலன் தரும். எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இறந்து கிடந்த சிறுமியைப் பார்த்து, அவள் சாகவில்லை, உறங்குகிறாள் (லூக். 8:529 என்றும், நம் நண்பர் இலாசரும் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் என்றும் (யோவா. 11:11) கூறினார். ஏனெனில் உலகில் நடக்கும் இயற்கையான இறப்பு எதார்த்த மானது. அது பாவத்தின் கூலி (உரோ. 6:23). ஆனால் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, இறை-மனித உறவோடு வாழ்ந்து இறப்பவர் களுக்கு இந்த உலக இறப்பு, இறைவனில் கிடைக்கும் ஓய்வாகிறது (யோவா. 11:25). இதை விளக்கும் வகையில்தான், ஆண்டவருக்குள் இறந்தவர்கள் செய்த நன்மைகள் அவர்களோடு கூட வரும் (திவெ. 14:13). அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்று திருவெளிப்பாடு நமக்குத் தருகிறது. தாயாகிய திருச்சபை, அன்புக்கு அடிமையாகி, அன்பினால் புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட புனிதர்களின் திருவிழாவைக் கொண்டாடுகிறது. புனிதம் என்பது புண்ணிய தீர்த்தத்தில், புனித ஆற்றில் குளிப்பதால் மட்டும் வந்து விடுவதில்லை. முழுக்க முழுக்க வாழ்வைச் சார்ந்தது. மனிதம் என்ற சொல்லுக்கும் புனிதம் என்ற சொல்லுக்கும் உள்ள வேற்றுமை முதலில் உள்ள ஒரு எழுத்து மட்டும்தான். ஆம், மனிதம் என்றாலே புனிதம் பிறக்கிறது. மனிதமும், புனிதமும், நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. நாம் ஒவ்வொருவரும் தூயவராக வாழ்வதற்காக (1 யோவா. 3:3) அழைக்கப்பட்டிருக்கிறோம். ஏழ்மையையும், துன்பத்தையும், நோயையும், பொறுமையோடு ஏற்று வாழ்பவர்களே புனிதர்கள், பேறு பெற்றவர்கள் என்று இயேசு அழைக்கிறார். அன்பார்ந்தவர்களே, புனிதம் என்பது நேற்று பெய்த மழையால் இன்று முளைத்த காளான்கள்போல் அல்ல. மாறாக மனித உள்ளத்தில் புதைந்து கிடக்கும் புனிதத்தை வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மடியும் கோதுமை மணிபோல் (யோவா. 12:24) வளர்த்து எடுக்க வேண்டிய ஒன்று. கடவுள் நம்மோடு இருக்க நமக்குத்தான் வெற்றி என்று அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனுக்கு அவரது காரியதரிசி ஆறுதல் சொன்னபோது, "நண்பா! கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது தெரியும். ஆனால் நாம் கடவுளோடு இருக்கிறோமா?" என்பதுதான் கவலை என்றார் லிங்கன். ஆம், நாம் இறைவனோடு இணையும்போதுதான் (யோவா. 15:5) நாம் புனிதம் அடைவோம். இத்தகைய எண்ணற்ற புனிதர்கள் இந்த உலகில் சாட்சிய வாழ்வு வாழ்ந்து, இறந்தும் வாழ்கிறார்கள் என்பதைத்தான் நாம் நினைவு கூறுகிறோம். ஏனெனில் தூய பவுல் கூறுவதுபோல் சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது (1 கொ. 15:55). நாமும் இவர்களைப் போல, நான் யார்? எதற்காக இங்கே வந்தேன்?, எங்கிருந்து வந்தேன்?, எங்கே போகிறேன்? என்பதை உணர்ந்து வாழ்வோம். இதற்காக புனிதர் களிடம் மன்றாடுவோம். அருள்பணி முனைவர்: அருள் பாளையங்கோட்டை |
||
1 | St. Remigius | Oct 01 | |
2 | St.Therese of Lisieux | Oct 01 | |
3 | St. Leodegar Or Leger | Oct 02 | |
4 | Memorial of the Holy Guardian Angels | Oct 02 | |
5 | Hewald the White and Hewald the Black | Oct 03 | |
6 | St. Francis of Assisi | Oct 04 | |
7 | Gaius | Oct 04 | |
8 | Galla | Oct 05 | |
9 | Blessed Francis Xavier Seelos | Oct 05 | |
10 | Maria Faustina Kowalska | Oct 05 | |
11 | Raymund of Capua | Oct 05 | |
12 | St. Bruno of Cologne | Oct 06 | |
13 | Mary Frances of Naples | Oct 06 | |
14 | Justina | Oct 07 | |
15 | St. Mark | Oct 07 | |
16 | St. Justina of Padua | Oct 07 | |
17 | St. Pelagia | Oct 08 | |
18 | St. Thas | Oct 08 | |
19 | Denis | Oct 09 | |
20 | Dionysius the Areopagite | Oct 09 | |
21 | Blessed John Henry Newman | Oct 09 | |
22 | St. John Leonardi | Oct 09 | |
23 | Vincent Kadlubek Bl. | Oct 09 | |
24 | Daniel Comboni Bl. | Oct 10 | |
25 | St. Francis Borgia | Oct 10 | |
26 | Gereon | Oct 10 | |
27 | St. Maria Soledad Torres y Acosta | Oct 11 | |
28 | St. John XXIII | Oct 11 | |
29 | Blessed Camillus Costanzo | Oct 12 | |
30 | Blessed Francis Xavier Seelos | Oct 12 | |
31 | St. Wilfrid | Oct 12 | |
32 | St. Edward the Confessor | Oct 13 | |
33 | Blessed Marie Rose Durocher | Oct 13 | |
34 | Justus of Lyons | Oct 14 | |
35 | Parasceva | Oct 14 | |
36 | St. Callistus I | Oct 14 | |
37 | St. Theresa of Avila | Oct 15 | |
38 | St. Aurelia of Strasbourg | Oct 15 | |
39 | St. Hedwig of Silesia | Oct 16 | |
40 | Margaret Mary Alacoque | Oct 16 | |
41 | St. John the Dwarf | Oct 17 | |
42 | Ignatius of Antioch | Oct 17 | |
43 | St. Luke the Evangelist | Oct 18 | |
44 | St. Peter of Alcantara | Oct 18 | |
45 | Charles Garnier | Oct 19 | |
46 | Isaac Fogues | Oct 19 | |
47 | Jean De Brebeuf | Oct 19 | |
48 | Jean De Lalande | Oct 19 | |
49 | Paul of the Cross | Oct 19 | |
50 | Philip Howard | Oct 19 | |
51 | St. Isaac Jogues | Oct 19 | |
52 | Acca of Hexham | Oct 20 | |
53 | St. Caprasius of Agen | Oct 20 | |
54 | St. Maria Bertilla Boscardin | Oct 20 | |
55 | St. Hilarion | Oct 21 | |
56 | St. Laura of Saint Catherine of Siena | Oct 21 | |
57 | Ursula | Oct 21 | |
58 | St. John Paul II | Oct 22 | |
59 | Salome | Oct 22 | |
60 | Wendelin of Trier | Oct 22 | |
61 | St. John of Capistrano | Oct 23 | |
62 | St. Anthony Mary Claret | Oct 24 | |
63 | Sts. Crispin and Crispinian | Oct 25 | |
64 | Daria | Oct 25 | |
65 | St. John Houghton | Oct 25 | |
66 | St. Boniface I | Oct 25 | |
67 | St. Alfred the Great | Oct 26 | |
68 | St. Evaristus (5th Pope) | Oct 26 | |
69 | St. Odrn of Iona | Oct 27 | |
70 | Blessed Bartholomew of Vicenza | Oct 27 | |
71 | St. Jude the Apostle | Oct 28 | |
72 | St. Simon the Zealot | Oct 28 | |
73 | St. Narcissus of Jerusalem | Oct 29 | |
74 | St. Angelo of Acri | Oct 30 | |
75 | St. Alphonsus Rodriguez | Oct 30 | |
76 | Blessed Thomas of Florence | Oct 31 | |
77 | St. Wolfgang of Regensburg | Oct 31 | |
78 |