✠ புனிதர் மரிய சொல்டேட் டொர்ரெஸ் ஒய் அகொஸ்டா
✠
(St. Maria Soledad Torres y Acosta) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
11) |
✠ புனிதர் மரிய சொல்டேட் டொர்ரெஸ் ஒய் அகொஸ்டா
✠
(St. Maria Soledad Torres y Acosta)
✠ கன்னியர், சபை நிறுவனர் :
(Virgin and foundress)
✠பிறப்பு : டிசம்பர் 2, 1826
மேட்ரிட், ஸ்பெயின் அரசு
(Madrid, Kingdom of Spain)
✠இறப்பு : அக்டோபர் 11, 1887 (வயது 60)
மேட்ரிட், ஸ்பெயின் அரசு
(Madrid, Kingdom of Spain)
✠முக்திபேறு பட்டம் : ஃபெப்ரவரி 5, 1950
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)
✠புனிதர் பட்டம் : ஜனவரி 25, 1970
திருத்தந்தை ஆறாம் பால்
(Pope Paul VI)
✠நினைவுத் திருநாள் : அக்டோபர் 11
✠பாதுகாவல் :
மரியாளின் பணியாளர்கள் சபை
(Servants of Mary)
புனிதர் மரிய சொல்டேட் டொர்ரெஸ் ஒய் அகொஸ்டா, ஒரு ஸ்பேனிஷ்
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரியும், "மரியாளின்
பணியாளர்கள்" (Servants of Mary) எனும் துறவற சபையின்
நிறுவனருமாவார். இச்சபையானது, நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும்
சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அருட்சகோதரியருக்கான துறவற
சபையாகும். இவர், கத்தோலிக்க திருச்சபையினால் புனிதராக
கௌரவிக்கப்படுகிறார்.
வாழ்க்கை :
"அன்டோனியா பிபியானா மனுவெல்லா டொர்ரெஸ் ஒய் அகொஸ்டா"
(Antonia Bibiana Manuela Torres y Acosta) எனும் இயற்பெயர்
கொண்ட இவரது
தந்தை "ஃபிரான்சிஸ்கோ டொர்ரெஸ்" (Francisco Torres) ஆவார்.
இவரது தாயார், "அன்டோனியோ அகோஸ்டா" (Antonia Acosta) ஆவார்.
அன்டோனியா பிபியானா, தமது பெற்றோருக்கு பிறந்த ஐந்து
குழந்தைகளில் இரண்டாமவர் ஆவார். இவரது பெற்றோர் உள்ளூரிலேயே
ஒரு சிறு வியாபாரம் செய்துவந்தனர். இவர், "வின்செஸ்டியன்"
(Vincentian Sisters) அருட்சகோதரியாரால் கல்வி
கற்பிக்கப்பட்டார். அடிக்கடி அருகாமையிலுள்ள நோயாளிகளுக்கு
சேவை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏழைகளுக்கு
உதவுவதையும், பிறரின் நன்மைகளுக்காக சிறு சிறு
நோன்பிருப்பதையும் கூட வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சுமார் 1850ம் ஆண்டின் வாக்கில், தேவ அழைப்பினை செவி மடுத்த
இவர், தமது அருகாமையிலுள்ள "டோமினிக்கன்" (Dominican convent)
துறவு சபையில் பயிற்சி அருட்சகோதரியாக இணைவதற்கு
விண்ணப்பித்தார். ஆனால், அப்போது அங்கே இடமின்மையால் இவர்
காத்திருக்க வேண்டியிருந்தது. இதற்கிடையே, 1851ம் ஆண்டு,
"ச்சம்பேரி" (Chamber) பங்குத் தந்தை, "மிகுவேல்
மார்ட்டினேஸ்" (Miguel Martnez) என்ற அருட்பணியாளரின் சேவைகள்
பற்றி கேள்விப்பட்டார். அருட்தந்தை மார்ட்டினேஸ், தமது
பங்கிலுள்ள ஏழைகள் மற்றும் நோயுற்றோருக்கு சேவை செய்வதற்காக
ஏழு பெண்களைக் கொண்ட ஒரு குழு ஒன்றினை அமைப்பதாக ஒரு
காட்சியின் தரிசனம் கண்டார். பிபியானா டொர்ரெஸ், இச்சேவையில்
தம்மை அர்ப்பணிக்க முன்வந்தார். மார்ட்டினேஸ் தாம் உருவாக்க
விரும்பிய குழுவின் ஏழாவது மற்றும் கடைசி பெண்ணாக பிபியானா
டொர்ரெசை ஏற்றுக்கொண்டார்.
1851ம் வருடம் ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் நாள், இறைவனின் அதிதூய
அன்னை மரியாளின் விண்ணேற்பு தினத்தன்று, பிபியானாவும் அவரது
ஆறு சகோதர அங்கத்தினர்களும் தமது வாழ்வை ஏழை நோயாளிகளுக்கு
அர்ப்பணித்தனர். "சகோதரி மரிய சொல்டேட்" (Sister Maria
Soledad) என்ற பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார்.
அனைவரும் துறவற சீருடைகளை பெற்றுக்கொண்டனர்.
தமது துறவற சபையின் தலைமைப் பொறுப்பேற்ற நாளிலிருந்து அநேக
சோதனைகளைத் தாங்கிய இவர், அவதூறுகளால் பாதிக்கப்பட்டார்.
பலமுறை துறவு சபையின் தலைமைப் பொறுப்பினின்றும்
விடுவிக்கப்பட்டார்.
வலேன்சியாவில் (Valencia) இருந்த ஒரு சுதந்திர அரசின் கீழ்
இருந்த ஒரு அமைப்பினை (Liberalizing Government)
உருவாக்கினார்.
1876ல், இந்த புதிய சபையானது, திருத்தந்தை "ஒன்பதாம் பயசின்"
(Pope Pius IX) அங்கீகாரம் பெற்றது. சுமார் முப்பத்தைந்து
வருடங்கள் இவ்வமைப்பினை தலைமையேற்று நடத்திய இவர், நிமோனியா
காய்ச்சலின் காரணமாக அக்டோபர் 1887ம் ஆண்டு, அக்டோபர் மாதம்,
11ம் நாள், மரணமடைந்தார். இவரது மரணத்தின்போது, இவரது துறவு
சபையின் 46 கிளைகள் ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க
நாடுகளில் பரவியிருந்தன. |
|
|