Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜான் ஹக்டன் ✠(St. John Houghton)
   
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 25)
✠ புனிதர் ஜான் ஹக்டன் ✠(St. John Houghton)

 வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் 40 மறைசாட்சிகள் :
(Forty Martyrs of England and Wales)

பிறப்பு : கி.பி. 1486
இங்கிலாந்து
(England)

இறப்பு : மே 4, 1535
டிபர்ன், இங்கிலாந்து
(Tyburn, England)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : டிசம்பர் 9, 1886
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

புனிதர் பட்டம் : அக்டோபர் 25, 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
(Pope Paul VI)

நினைவுத் திருநாள் : அக்டோபர் 25

புனிதர் ஜான் ஹக்டன், ஒரு கத்தோலிக்க குருவும், " கர்த்தூசியன் துறவி" (Carthusian hermit) ஆவார். அக்காலத்தில், இங்கிலாந்தின் மன்னன் " எட்டாம் ஹென்றியின்" (King Henry VIII) " மேலாதிக்க சட்டத்தின்" (Act of Supremacy) காரணமாக மரித்த முதல் ஆங்கில கத்தோலிக்க மறைசாட்சியாவார். இவருடன் மரித்த நாற்பது மறைசாட்சியரில் இவர் முதலாவது மறைசாட்சியாக கருதப்படுகிறார்.

கி.பி. சுமார் 1486ம் ஆண்டில் பிறந்த இவர், இவரைப் பின்பற்றிய கர்தூசியன் (Carthusians) சபை சகா ஒருவர் எழுதிய ஆவணங்களின்படி, " கேம்ப்ரிட்ஜ்" (Cambridge) பல்கலையில் கல்வி பயின்றார். தற்போதுள்ள ஆவணங்களில் இவரது குருத்துவ அருட்பொழிவு தேதி பற்றிய ஆவணங்களும் கிடைக்கவில்லை.

கி.பி. 1515ம் ஆண்டு, லண்டனிலுள்ள " சார்ட்டர்ஹௌஸ்" (London Charter house) அமைப்பில் சேர்ந்த இவர், கி.பி. 1523ம் ஆண்டு, 'கிறிஸ்தவ ஆலயங்களில் உள்ள புனிதப் பொருள்களைக் காப்பவராகவும், (Sacristan), கி.பி. 1526ம் ஆண்டு, 'பழங்கால ரோம அதிகாரி'யாகவும் உயர்ந்தார்.

கி.பி. 1534ம் ஆண்டு, புதிய வாரிசுரிமை சட்டங்களின்படி, (Act of Succession) கடைப்பிடிக்க வேண்டிய சத்தியப் பிரமாணங்களிலிருந்து தமக்கும் தமது சமூகத்தினருக்கும் விளக்கு அளிக்க வேண்டினார். இதன் பிரதிபலிப்பாக, இவரையும் இவரது செயலுரிமையாளர் ஒருவரையும் கைது செய்து " லண்டன் கோபுர" (Tower of London) கோட்டைக்கு இட்டுச் சென்றனர். அங்கே அவர்கள், அந்த புதிய சத்தியப் பிரமாணங்கள் கத்தோலிக்க சட்டங்களுக்கு ஒத்துப்போவதாக ஒப்புக்கொண்டனர். பின்னர், சார்ட்டர் ஹௌஸ் அழைத்து வரப்பட்ட இவர்களிருவரும், பெரும் ஆயுதப்படையினரின் முன்னிலையில், தமது மொத்த சமூகத்தினருடன் இணைந்து சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

கி.பி. 1535ம் ஆண்டு, மீண்டும் அழைக்கப்பட்ட இவர்களது சமூகத்தினர், இங்கிலாந்தின் மன்னன் எட்டாம் ஹென்றியை (King Henry VIII) ஆங்கில திருச்சபையின் தலைவராக ஏற்றுக்கொண்ட சட்ட திட்டங்களின் சத்தியப் பிரமாணங்களை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டனர். ஹக்டன் இம்முறை, கர்தூசியன் சபையின் பிற இரண்டு இல்லங்களின் முதல்வர்களான, " ராபர்ட் லாரன்ஸ்" (Robert Lawrence) மற்றும் " அகஸ்டின் வெப்ஸ்டர்" (Augustine Webster) ஆகிய இருவரையும் தம்முடன் அழைத்துச் சென்றார். ஆங்கிலேய சத்திய பிரமாணத்துக்கு விளக்கு அளிக்க வேண்டி கெஞ்சிய இவர்களது சமூகத்தினர் அனைவரும் இம்முறை " தாமஸ் கிராம்வெல்" (Thomas Cromwell) என்பவரால் மொத்தமாக கைது செய்யப்பட்டனர்.

கி.பி. 1535ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஒரு விசாரணை மன்றத்தின் முன்னர் நிறுத்தப்பட்டனர். " சியோன் மடத்தைச்" (Syon Abbey) சேர்ந்த " ரிச்சர்ட் ரேனால்ட்ஸ்" (Richard Reynolds) எனும் துறவி உள்ளிட்ட இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டது.

புனிதர் ஜான் ஹக்டன் மற்றும் இரண்டு கர்த்தூசிய (Carthusians) துறவிகளான அருட்தந்தை " ரெனால்ட்" (Fr. Reynolds) மற்றும் அருட்தந்தை " ஜான் ஹைல்" ', (Fr. John Haile of Isleworth) ஆகியோர் கி.பி. 1535ம் ஆண்டு, மே மாதம், 4ம் தேதியன்று, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா