✠ அருளாளர் கேமில்லஸ் கோஸ்டான்ஸோ ✠
(Blessed Camillus Costanzo) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
12) |
✠ அருளாளர் கேமில்லஸ் கோஸ்டான்ஸோ ✠
(Blessed Camillus Costanzo)
✠ மறைசாட்சி/ இயேசுசபை குரு :
(Martyr/ Jesuit Missionary)
✠பிறப்பு : கி.பி. 1571
பொவாளினோ, ரெக்கியோ, கலாப்ரியா, இத்தாலி
(Bovalino, Reggio Calabria, Italy)
✠இறப்பு : செப்டம்பர் 15, 1622
டபிரா, நாகசாகி, ஜப்பான்
(Tabira, Nagasaki, Japan)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠முக்திபேறு பட்டம் : மே 7, 1867
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)
அருளாளர் கேமில்லஸ் கோஸ்டான்ஸோ, ஒரு இத்தாலிய இராணுவ வீரரும்
(Italian soldier), சட்ட மாணவரும் (Law Student), ஜப்பான்
நாட்டில் மறைப்பணியாற்றிய யேசுசபை குருவும் (Jesuit missionary
in Japan) ஆவார். 1622ம் ஆண்டு, உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட
அவர் ஒரு ரோமன் கத்தோலிக்க மறைசாட்சி ஆவார்.
அருட்தந்தை கேமில்லஸ் கோஸ்டான்ஸோ சார்ந்திருந்த இயேசுசபை, அவரை
மறைப்பணியாற்ற சீனா நாட்டுக்கு அனுப்பியது. ஆனால், அங்கே
ஆட்சியிலிருந்த போர்ச்சுகீசியர்கள், அவரை அந்நாட்டுக்குள்
நுழைய அனுமதி மறுத்தனர். ஆகவே, அதற்கு பதிலாக, அவரது ஆற்றலும்
மற்றும் அழைப்பும் ஜப்பான் நாட்டில் முதலீடு செய்யப்பட்டன.
அவர் ஜப்பானிய மொழியை விரைவில் கற்றுக்கொண்டார். சாகே நகருக்கு
அருகே அப்பகுதியில், அந்நாட்டு குடிமக்களை கிறிஸ்தவத்திற்கு
மனம்மாற்ற அவர்களை வெற்றிகரமாக ஊக்குவித்தார்.
அனைத்து மிஷனரிகளும் ஜப்பானிலிருந்து வெளியேற்றப்பட்டபோது,
அவர் சீனாவிலுள்ள போர்ச்சுகீசிய வியாபார தலமாகிய "மகாவு"
(Macau) சென்றார். ஜப்பான் நாட்டில் கடைசியாக ஆட்சியிலிருந்த
(Tokugawa shogunate) என்றழைக்கப்பட்ட இராணுவத்தின் விதிகளை
புறக்கணித்ததில் ஆபத்துக்கள் இருந்தபோதிலும், அவர், 1621ம்
ஆண்டு, ஜப்பான் திரும்பினார்.
ஒரு சிப்பாயாக மாறுவேடமிட்டு, பிடிபடுவதிளிருந்து தப்பித்து
வந்தார். ஆனால், 1622ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 24ம் தேதியன்று,
"க்யூஷூவின்" மேற்கு கரையோரத்திலிருந்த (Western Coast of
Kyushu) "ஹிரடோ தீவில்" (island of Hirado) கைது
செய்யப்பட்டார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட அருட்தந்தை கேமில்லஸ் கோஸ்டான்ஸோ,
1622ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 15ம் தேதியன்று உயிருடன்
எரித்து படுகொலை செய்யப்பட்டார். |
|
|