✠ புனிதர் காப்ரஸியஸ் ✠(St. Caprasius of
Agen) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
20) |
✠ புனிதர் காப்ரஸியஸ் ✠(St. Caprasius of
Agen)
✠ கிறிஸ்தவ மறைசாட்சி :
(Christian martyr)
✠பிறப்பு : ---
✠இறப்பு : கி.பி. 303
அகென்
(Agen)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠நினைவுத் திருநாள் : அக்டோபர் 20
புனிதர் காப்ரஸியஸ், ஒரு கிறிஸ்தவ மறைசாட்சியாகவும் நான்காம்
நூற்றாண்டின் புனிதராகவும் அருட்பொழிவு செய்யப்பட்டவர் ஆவார்.
அவருடன் தொடர்புடைய மிகுதிகள் ஐந்தாம் நூற்றாண்டில் "அகென்"
(Agen) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
பதினான்காம் நூற்றாண்டின் இலக்கியவியலாளர் "அல்பன் பட்லர்"
(Alban Butler) என்பவர், அவரை "அகென்" (Agen) மறை மாவட்டத்தின்
முதல் ஆயர் என எழுதியிருக்கின்றார். அவருடைய எழுத்துக்களே புனிதர்
காப்ரஸியஸ் பற்றிய ஒரே நிரூபணம் ஆகும்.
புனிதர் காப்ரஸியஸி'ன் வழிபாடு ஒன்பதாம் நூற்றாண்டில் "புனிதர்
ஃபெய்த்" (Saint Faith) எனும் புனிதருடனும், "அகென்" மறை மாவட்டத்துடன்
தொடர்புடைய "அல்பெர்ட்டா" (Alberta of Agen) என்பவருடனும் தொடர்புடையதாக
இருந்தது. "புனிதர் ஃபெய்த்" (Saint Faith), புனிதர் காப்ரஸியஸி'ன்
தாய் மாமனாக அறியப்படுகின்றார். காப்ரஸியஸி'ன் வழிபாடு, அவரது
சகோதரர்கள் எனப்பட்ட "பிரைமஸ்" மற்றும் "ஃபெலிகன்" (Primus and
Felician) ஆகியோருடனும் தொடர்புடையதாக இருந்தது.
"பிரேஃபெக்ட் டாசியன்" (Prefect Dacian) என்பவனால் கிறிஸ்தவர்கள்
துன்புறுத்தப்பட்ட போது, காப்ரஸியஸ் "அகென்" மறை மாவட்டத்தின்
அருகாமையிலுள்ள "மாண்ட்-செயின்ட்-வின்சன்ட்"
(Mont-Saint-Vincent) எனும் இடத்திற்கு தப்பித்து ஓடிப்போனார்.
அங்கே, "புனிதர் ஃபெய்த்" (Saint Faith), "அடால்ப் மலையில்" (Atop
the hill) துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதை கண்டார்.
அல்பெர்ட்டா (Alberta), காப்ரஸியஸ், அவருடைய தாயார் (புனித
காப்ரஸியஸி'ன் சகோதரி), காப்ரஷியஸி'ன் சகோதரர்கள் எனப்படும்
"பிரைமஸ்" மற்றும் "ஃபெலிக்கன்" (Primus and Felician) ஆகிய அனைவருக்கும்
மரண தண்டனை அளிக்கப்பட்டது. அனைவரும் தலை துண்டிக்கப்பட்டு மரித்தனர். |
|
|