✠ அருளாளர் பர்தொலொமியு ✠(Blessed
Bartholomew of Vicenza) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
27) |
✠
அருளாளர் பர்தொலொமியு
✠(Blessed Bartholomew of Vicenza)
✠ ஆயர் :
(Bishop)
✠பிறப்பு : கி.பி. 1200
விசென்ஸா
(Vicenza)
✠இறப்பு : கி.பி. 1271
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠முக்திபேறு பட்டம் : கி.பி. 1793
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)
✠நினைவுத் திருநாள் : அக்டோபர் 27
"பர்தொலோமியு டி பிரகன்ஸா" (Bartholomew di Braganca) என்றும்,
"விசென்ஸா
வின் பர்தொலோமியு" (Bartholomew of Vicenza) என்றும்
அழைக்கப்படும் இவ்வருளாளர், ஒரு "டொமினிக்கன்" துறவியும்
(Dominican Friar) ஆயருமாவார்.
வடகிழக்கு இத்தாலியின் "விசென்ஸா" (Vicenza) எனும் நகரின்
"பிரகான்சா" உயர்குடியில் (Noble family of di Braganca)
பிறந்த இவர், "பதுவை" (Padua) நகரில் கல்வி கற்றார். ஏறத்தாழ
தமது இருபது வயதில், புதிதாய் தொடங்கப்பட்ட துறவற சபையான
"டொமினிக்கன்" (Dominican Order) சபையின் சீருடைகளை புனிதர்
"டொமினிக்கின்" (St. Dominic) கைகளாலேயே பெற்றுக்கொண்டார்.
குருத்துவ அருட்பொழிவு பெற்றதும், விரைவிலேயே தமது சபையின்
பல்வேறு தலைமைப் பதவிகளில் பொறுப்பேற்றுப் பணியாற்றினார்.
தொடக்கத்தில் இவரது வரலாற்றை எழுதிய துறவி "லியாண்டரின்"
(Friar Leander) கூற்றின்படி, கி.பி. 1235ம் ஆண்டு,
திருத்தந்தை "ஒன்பதாம் கிரகோரியின்" (Pope Gregory IX) ஆட்சிக்
காலத்தில், "திருத்தந்தையர் இல்ல அலுவலக இறையியலாளர்"
(Theologian of the Pontifical Household) எனும் நிர்வாக
அலுவலக தலைமைப் பொறுப்பிலிருந்தார். ஆனால், அதற்கான சான்றுகள்
தற்போது கிடையாது.
ஒரு இளம் குருவாக, அவர் இத்தாலியின் அனைத்து நகரங்களிலும்
அமைதியும், சமாதானமும் உருவாகும் நோக்கத்தில், ஒரு இராணுவ
சபையை நிறுவினார்.
1248ம் ஆண்டு, "சைப்ரஸ் குடியரசு" (Republic of Cyprus) எனும்
தீவிலுள்ள "நெமொநிக்கம்" (Nemonicum) எனும் நகரின் ஆயராக
நியமிக்கப்பட்டார். ("நெமொநிக்கம்" எந்த நகர் என்று தற்போது
தெரியவில்லை).
பெரும்பாலானோர்க்கு, அத்தகைய ஒரு ஆயர் நியமனம், அவர்களின்
பரிசுத்தன்மை, மற்றும் அவர்களின் தலைமை திறன்களுக்கான கௌரவம்
அல்லது பாராட்டு, மரியாதை மற்றும் அஞ்சலி ஆகும். ஆனால்
இவரைப்பொருத்தவரை, அது திருத்தந்தையரின் எதிரிகளின்
குழுக்களால் வற்புறுத்தப்பட்ட ஒரு நாடுகடத்தலேயாகும்.
ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் "ஒன்பதாம் லூயிஸ்" (King Louis IX of
France), "புனித பூமியை" (Holy Land) ஆண்டுவந்த இஸ்லாமியர்களை
முற்றுகையிட பயணித்துக்கொண்டிருந்தார்.
(யோர்தான் நதியின் கிழக்கு கரைப்பகுதிகள் (Eastern Bank of the
Jordan River) உள்ளிட்ட, யோர்தான் நதி மற்றும் மத்தியதரைக்
கடலுக்கு (Mediterranean Sea) இடையிலான ஒரு பகுதி ஆகும். இது
யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரால் புனித
பூமியாகக் கருதப்படுகிறது.)
அப்போது, இஸ்ரேல் நாட்டின் பழமையான துறைமுக நகரான "ஜோப்பா"
(Joppa), லெபனானின் பெரிய நகரங்களில் ஒன்றான "சிடோன்" (Sidon)
மற்றும் இஸ்ரேலின் தொழில் துறைமுக நகரான "ஏக்கர்" (Acre) ஆகிய
இடங்களில், பர்தொலோமியு "திருத்தந்தையின் தூதராக" (Apostolic
legate) அரசன் ஒன்பதாம் லூயிசுடனும், அரசியுடனும் சென்று
இணைந்துகொண்டார்.
பல ஆண்டுகளுக்குப்பின் அல்லாது, எப்படியோ, பர்தொலோமியு
மீண்டும் விசென்ஸாவுக்கு மாற்றல் செய்யப்பட்டார்.
திருத்தந்தையரின் எதிரிகளின் குழுக்களின் எதிர்மறையான
உணர்வுகள் இன்னும் வெளிப்படையாக இருந்தபோதிலும், அவர்
விடாமுயற்சியுடன், குறிப்பாக அவருடைய பிரசங்கத்தின் மூலம்,
தனது மறைமாவட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், ரோமிற்கு
மக்கள் விசுவாசத்தை பலப்படுத்தவும் அயராது உழைத்தார்.
இவர் "சைப்ரஸ்" தீவின் ஆயராக பணியாற்றிய காலத்தில், ஃபிரான்ஸ்
நாட்டின் அரசன் "ஒன்பதாம் லூயிஸின்" (King Louis IX of France)
நட்பு கிட்டியது. அரசன், தூய ஆயருக்கு கிறிஸ்துவின்
முள்முடியின் மிச்சமொன்றினை (Relic of Christs Crown of
Thorns) கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது. |
|
|