Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் தாமஸ் ✠(Blessed Thomas of Florence)
   
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct -31)
✠ அருளாளர் தாமஸ் ✠(Blessed Thomas of Florence)

 மறைப்பணியாளர் :
(Religious)

பிறப்பு : கி.பி. 1370
ஃபுளோரன்ஸ், ஃபுளோரன்ஸ் குடியரசு
(Florence, Republic of Florence)

இறப்பு : அக்டோபர் 31, 1447 (வயது 77)
ரியேட்டி, திருத்தந்தையர் மாநிலங்கள்
(Rieti, Papal States)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : கி.பி. 1771
திருத்தந்தை பதினைந்தாம் கிளமென்ட்
(Pope Clement XIV)

நினைவுத் திருநாள் : அக்டோபர் 31

பாதுகாவல் :
மாமிசம் விற்பவர்கள் (Butchers),பாவ மன்னிப்புக் கோருபவர்கள் (Penitents), மறைப்பணியாளர்கள் (Missionaries)

அருளாளர் தாமஸ், இத்தாலி நாட்டின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவரும், புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை (Third Order of Saint Francis) சபையின் ஒப்புக்கொள்ளப்பட்ட உறுப்பினரும் (Professed Member) ஆவார். இவர், " டொம்மேசோ பெல்லாக்கி" (Tommaso Bellacci) எனும் பெயரிலும் அறியப்படுகிறார். ஆரம்பத்தில், மாமிசம் விற்கும் வியாபாரம் செய்துவந்த இவர், தாம் செய்த ஒரு பாவத்திற்காக மனம் வருந்தி, தமது வாழ்க்கையையே திருப்பி மறைப்பணியாளராக ஆனார்.

தாமஸ், தாம் ஒரு குருத்துவம் பெற்ற குருவாக இல்லாவிடினும், மத்திய கிழக்கு மற்றும் இத்தாலிய தீபகற்பம் முழுவதும் பயணம் செய்து, மக்களுக்குப் பயிற்சியளிக்கவும், மறையுரைகளாற்றவும் செய்தார்.

தாமஸ், கி.பி. 1370ம் ஆண்டு, மேற்கு மத்திய இத்தாலியின் (Western Central Italy) " டுஸ்கனி" (Tuscany) மாகாணத்தின் தலைநகரான ஃபுளோரன்ஸ் (Florence) நகரின் மாமிச வியாபாரி ஒருவரின் மகனாகப் பிறந்தார். தமது இளமையில் ஒரு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட அவரிடமிருந்து தமது மகன்களை தூர விலகி இருக்குமாறு அக்கம்பக்கத்திலுள்ள பெற்றோர் எச்சரிக்கை செய்வது வழக்கமாயிருந்தது. அவர், தமது தந்தையைப் போலவே தாமும் ஒரு இறைச்சி வியாபாரி ஆனார். அவர் தனது குழந்தை பருவத்திலேயே பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறைய பிரச்சனைகளைச் சந்தித்தார்.

கி.பி. 1400ம் ஆண்டு, ஒரு தீவிரமான குற்றத்தை செய்ததாக தாமஸ் குற்றம் சாட்டப்பட்டார். உண்மையில் அவர் அக்குற்றத்தைச் செய்திருக்கவில்லை. ஆகவே அவர் ஃபுளோரன்ஸ் நகர தெருக்களில் அலைந்து திரிந்தார். பின்னர், ஒரு கத்தோலிக்க குருவானவர் தாமசை சந்தித்தார். தாமஸ் கூறுவனவற்றை கருணையுடன் செவிமடுத்தார். பின்னர் தாமசின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்க உதவினார். நடந்த அந்த சம்பவம் அவரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. குருவின் பாராட்டுதல்களால் கட்டுண்ட அவர், தமது பாவங்கள் நிறைந்த வாழ்க்கையை கொட்டித் தீர்த்தார். கடவுளுக்க சேவை செய்யக்கூடிய முழு தவ வாழ்க்கை வாழ தீர்மானித்தார். கி.பி. 1405ம் ஆண்டு, ஃபுளோரன்ஸ் பெருநகரிலுள்ள சிறிய நகரான " ஃபியசோல்" (Fiesole) நகரிலுள்ள புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை சபையில், குருத்துவம் பெறாத மறைப்பணியாளராக இணைந்தார். விழித்திருத்தல், தவம் மற்றும் உபவாசம் ஆகியவற்றில் குறிக்கப்படுமளவு முன்னேறினார். குருத்துவ அருட்பொழிவு பெற்ற குருவாக இல்லாதிருந்தும் புகுமுக துறவியரின் (Novice Master) தலைவரானார்.

தாமஸ், ஃபிரான்ஸ் (France) நாட்டின் கோர்சிகா தீவிலுள்ள (Island of Corsica) " கோர்சியா" (Corscia) நகரில் பல்வேறு துறவு மடங்களை நிறுவினார். இவரை அழைத்த திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் (Pope Martin V), ஃபிரான்சிஸ்கன் துறவியர்க்கெதிராக பிரச்சாரம் செய்யும் (Group of Heretical Franciscans) குழுவினருக்கு எதிராய் பிரச்சாரம் செய்ய அறிவுறுத்தினார். திருத்தந்தையின் கட்டளைப்படி அவரை தலைமை குருவாக (Vicar General) நியமித்தார். கி.பி. 1438ம் வருடம், திருத்தந்தை இவரையும், அருளாளர் " ஆல்பெர்ட் பெர்டினி" (Blessed Albert Berdini of Sarteano) ஆகிய இருவரையும் மத்திய கிழக்கு நாடுகளின் (Middle East) " டமாஸ்கஸ்" (Damascus) மற்றும் " கெய்ரோ" (Cairo) ஆகிய நகரங்களுக்கு, கிழக்கு மற்றும் மேற்கத்திய திருச்சபைகளை (Eastern and Western Churches) ஒருங்கிணைப்பதை ஊக்குவிப்பதற்காக அனுப்பினார். அப்போது, தாமசின் வயது எழுபது.

அவர் எத்தியோப்பியாவுக்குச் (Ethiopia) பயணம் செல்ல முயன்றார், ஆனால் துருக்கியர்கள் (Turks) அவரை மூன்று முறையும் பிடித்துச் சென்றனர். ஃ ப்ளோரன்ஸ் வியாபாரிகள் இரண்டு தடவை அவரை விடுவிக்க உதவினார்கள். மூன்றாம் முறை, அவர் துருக்கியர்களால் கொல்லப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டதால், திருத்தந்தை நான்காம் யூஜின் (Pope Eugene IV) தலையிட்டு அவரை விடுவித்தார். கி.பி. 1444ம் ஆண்டு நாடு திரும்பிய தாமஸ், தெற்கு இத்தாலியின் " அப்ருஸ்ஸோ" (Abruzzo) பிராந்தியத்திலுள்ள பள்ளியில் கி.பி. 1446ம் ஆண்டு வரை தங்கினார். தாமஸ் வெறும் தண்ணீரையும் காய்கறிகளையுமே தமது உணவாக எடுத்துக்கொண்டார்.

ரோம் நகருக்கு திருத்தந்தையை காணச் செல்லும் வழியில், மத்திய இத்தாலியின் " லாஸியோ" (Lazio) பிராந்தியத்தின் " ரியேட்டி" (Rieti) எனும் நகரில் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா