Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் லியோடெகர் அல்லது லெகர் ✠(St. Leodegar Or Leger)
  Limage contient peut-tre : 3 personnes, intrieur  
நினைவுத் திருநாள் : (அக்டோபர்/ Oct -02)
✠ புனிதர் லியோடெகர் அல்லது லெகர் ✠(St. Leodegar Or Leger)

 ஆடொன் மறைமாவட்ட ஆயர் & மறைசாட்சி :
(Bishop of Autun & Martyr)

பிறப்பு : கி.பி. 615
ஆடொன், ஸாவொன்-எட்-லொய்ர், பர்கண்டி, ஃபிரான்ஸ்
(Autun, â-et-Loire, Burgundy, France)

இறப்பு : அக்டோபர் 2, 679
சார்சிங், சொம், பிக்கார்டி, ஃபிரான்ஸ்
(Sarcing, Somme, Picardie, France)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள் : அக்டோபர் 2

பாதுகாவல் :
குருட்டுத்தனத்திற்கு எதிராகத் தூண்டுதல்; கண் நோய்; கண் பிரச்சினைகள்;
ரணமான கண்கள்.

புனிதர் லியோடெகர் அல்லது லெகர், ஒரு மறைசாட்சியாக கொல்லப்பட்ட "பர்கண்டியன்" (Burgundian) "ஆடொன்" மறைமாவட்ட ஆயர் (Bishop of Autun) ஆவார்.

இவரது தந்தை "பர்கண்டி'யின்" உயர்குடியைச் சேர்ந்த "போடிலோன்" (Bodilon) ஆவார். இவரது தாயார், பின்னாளில் அருட்சகோதரியான "புனிதர் சிக்ராடா" (Saint Sigrada) ஆவார். புனிதர் "வாரினஸ்" (Saint Warinus) இவரது சகோதரர் ஆவார்.

அந்நாளில், "நியோஸ்ட்ரியா அரண்மனையின் ஃபிரான்கிஷ் மேயரான" (Frankish Mayor of the Palace of Neustria) 'எப்ராய்ன்' (Ebroin) என்பவருக்கு எதிராக லியோடெகர் செயல்பட்டதால் அவரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

தமது சிறுவயதை பாரிஸ் நகரில் செலவிட்ட லியோடெகர், அங்கே அரச அரண்மனையிலுள்ள பள்ளியில் கல்வி கற்றார். தமது பள்ளிக் கல்வியை நிறைவு செய்த லியோடெகர், அங்கிருந்து 'பாய்டியர்ஸ்' (Poitiers) எனும் நகரிலுள்ள பேராலய கல்விச் சாலைக்கு உயர் கல்விக்காக அனுப்பப்பட்டார். அங்கே அவர் 'பாய்டியர்ஸ்' மறைமாவட்ட ஆயரும் தமது ஞானத் தந்தையுமான "டெசிடேரிய'ஸின்" (Desiderius) மேற்பார்வையில் கல்வி கற்றார். பின்னர், அவரது இருபதாவது வயதில் அவரே லியோடெகாரை திருத்தொண்டராக்கினார்.

சுமார் 650ம் ஆண்டில் குருத்துவ அருட்பொழிவு பெற்ற லியோடெகர், தமது ஞானத்தந்தை "டெசிடேரிய'ஸின்" பரிந்துரையின்பேரில் "போய்ட்டோ" (Poitou) என்னும் நகரிலுள்ள "புனித மாக்சென்ஷியஸ்" துறவு மடத்தின்' (Monastery of St. Maxentius) மடாதிபதியாக பதவியேற்றார். அங்கே, அந்த துறவு மடத்தில் அவர் "பெனடிக்ட்டைன் ஆட்சிமுறையை" (Benedictine rule) அமல்படுத்தினார்.

656ம் ஆண்டு, "ஆஸ்ட்ராசியா'வின்" (Austrasia) அரசன் "இரண்டாம் டகோபர்ட்டின்" (Dagobert II) மரணத்தின் பிறகு, அவருக்கு வாரிசுகள் யாருமில்லாததால், அவரது கைம்பெண்ணான "அரசி பட்டில்டா" (Queen Bathilde) தமது ஐக்கிய அரசின் ஆட்சியில் உதவவும், தமது பிள்ளைகளின் கல்விக்காகவும் லியோடெகரை அழைத்தார். அங்கே அரசியின் அரசாட்சியில் பலவிதமாக உதவிய லியோடெகர், மதச்சார்பற்ற மத குருமார்கள் மற்றும் மத சமூகங்கள் மீது பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

இதற்கிடையே, 660ம் ஆண்டு, "ஆஸ்ட்ராசியா" (Austrasia) பெருங்குடியினர், தமக்கு ஒரு அரசன் வேண்டுமென வேண்டுகோள் வைத்ததால், 'நியோஸ்ட்ரியா' மேயர் ''எப்ராய்னின்" பரிந்துரையால் அங்கே இளம் "இரண்டாம் சைல்டேறிக்" அனுப்பப்பட்டார். 673ம் ஆண்டு, "மூன்றாம் க்ளாடேய்ரின்" (Clotaire III) மரணம் காரணமாக அரசு உரிமை கோரி அங்கே ஒரு புரட்சிப் போராட்டம் வெடித்தது. எப்ராய்ன், "தியோடேரிக்" (Theoderic) ஆட்சிக்கு வர ஊக்குவித்தான். ஆனால், லியோடெகர் மற்றும் அங்குள்ள ஆயர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "தியோடேரிக்'கின்" மூத்த சகோதரர் "இரண்டாம் சைல்டேறிக்" அரசாள ஆதரவு தந்தனர். "தியோடேரிக்" அரசு பொறுப்பேற்றார். லியோடெகர் இளம் அரசருக்கு உதவ அங்கேயே தங்கினார்.

சுமார் 675ம் ஆண்டில் சில எதிர் ஆயர்கள் துணையுடன் லியோடெகருக்கு எதிராக கலகம் விளைவித்த எப்ராய்ன், லியோடெகரை கைது செய்வித்தான். எப்ராய்னின் தூண்டுதலின் பேரில், லியோடெகரின் கண்கள் பிடுங்கப்பட்டன. கால்கள் எரிக்கப்பட்டன. நாக்கு வெட்டப்பட்டது. அங்கேயுள்ள காட்டில் அவர் கொல்லப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா