Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் பெலாஜியா ✠(St. Pelagia)
  Aucun texte alternatif disponible.  
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 08)
✠ புனிதர் பெலாஜியா ✠(St. Pelagia)
 பிறப்பு : கி.பி. 290

இறப்பு : கி.பி. 305
அந்தியோக்கியா

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
சிரியாக் மரபுவழி திருச்சபை
(Syriac Orthodox Church)

நினைவுத் திருநாள் : அக்டோபர் 8

புனிதர் பெலாஜியா ஒரு கிறிஸ்தவ துறவியும், அருட்கன்னியும், கிறிஸ்தவ புனிதரும் ஆவார். இவர் மார்கரேட் என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்பட்டார். மிகவும் அழகு வாய்ந்த பெண்ணாக திகழ்ந்த இவர் அந்தியோக்கியாவின் (Antioch) முன்னணி நடிகையாக இருந்தார். அப்போது தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்த பெலாஜியா, நன்கறிந்த விலைமாது என்று கூறப்படுகின்றார். அச்சமயத்தில் ஒருநாள், அந்தியோக்கியாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது ஆயராக இருந்த "நொன்னஸ்" (Bishop Nonnus) அவரைக் கடந்து சென்றார். அவரைப் பார்த்த பெலாஜியாவின் மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டது.

அதற்கடுத்த ஞாயிறன்று, நொன்னஸ் நற்செய்தி போதிக்கும் இடத்தை நோக்கிச்சென்று, அவரின் மறையுரையை கேட்டார். நொன்னஸ், நரகம் பற்றியும், பரலோக வாழ்வின் சுகம் பற்றியும் எடுத்துரைத்தார். அம்மறையுரையானது இவரின் மனதை மிகவும் பாதித்தது.

பெலாஜியா, தமது இரண்டு அடிமைகளை நொன்னஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் மனமுடைந்து, நொன்னஸ் அவர்களிடம் மனம் நொந்து அழுது, தனது வேதனைகளை பகிர்ந்தார். தம்மை பாவி என்றும், தாம் சாத்தானின் சேவகி என்றும் அறிக்கையிட்டார். நல்லவர்களுக்காக அல்ல, பாவிகளுக்காகவே விண்ணிலிருந்து இறங்கி வந்த கிறிஸ்து இயேசுவின் இரக்கத்தை வேண்டி அழுதார். பெலாஜியாவுக்கு பதிலளித்த நொன்னஸ், கடவுள் பெலாஜியாவையும், அவரது கடந்த காலத்தையும் நன்கு அறிவார் என்றும், அவர் பெலாஜியாவின் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார் என்றும், ஆனால் அது பிற ஆயர்களின் முன்னர் நடக்கவேண்டும் என்றும் கூறினார்.

பெலாஜியா, "தூய ஜூலியன்" (Basilica of Saint Julian) பேராலயத்திற்கு அவர்களை காணச் சென்றார். ஆயர் நொன்னஸ் அவரிடம், நீ உன் கடந்த கால வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப மாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்டார். பெலஜியா, உடனே கீழே விழுந்து புரண்டு அழுதார். தம்மை திருச்சபையில் ஏற்றுக்கொள்ளாவிட்டால், தமது எதிர்கால பாவங்கள் அனைத்தும் உங்களையே சாரும் என்று கதறி அழுதார். இதனை அறிந்த பேராயர், பெண் திருத்தொண்டர் "ரொமானா" (Deaconess Romana) என்பவரை அனுப்பி, பெலாஜியாவுக்கு திருமுழுக்கு அங்கி அணிவிக்கச் சொன்னார். பெலாஜியாவுக்கு ஒப்புரவு அருட்சாதனமளித்த ஆயர் நொன்னஸ், அவருக்கு திருமுழுக்கு அளித்து, "மார்கரிட்டா" (Margarita) எனும் திருமுழுக்குப் பெயரைச் சூடினார்.

மார்கரிட்டா, தமது அடிமை காரியஸ்தரை (Slave Steward) அழைத்து, தமது சொத்துக்களின் கணக்குகளை கேட்டார். அவை அனைத்தையும் ஆயர் நொன்னஸிடம் ஒப்புவித்தார். அவர் அவற்றை கைம்பெண்களுக்கும், அனாதைகளுக்கும், நகரின் ஏழைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். பின்னர், மார்கரிட்டா தமது ஆண்-பெண் அடிமைகளை விடுதலை செய்தார். பின்னர் அவர் "ரொமானாவுடன்" (Romana) வசிக்கத் தொடங்கினார்.

பின்னர் எருசலேம் சென்ற பெலாஜியா, "ஒலிவ மலைக் குகையில்" (Mount of Olives) வாழ்ந்த துறவிகளுடன் சேர்ந்து, "பெலாஜியஸ்" (Pelagius) என்ற பெயரில் ஓர் ஆண் துறவியாக, அலியாக துறவு வாழ்க்கை வாழ்ந்தார். மிகக் கடினமான ஏழ்மையை தன் வாழ்வின் மனமாற்றத்திற்குப்பின் வாழ்ந்தார். இவர் அங்கிருந்தவர்களால் "தாடியில்லா துறவி" (Beardless Monk) என்றழைக்கப்பட்டார். மூன்று அல்லது நான்கு வருடங்களே அங்கு வாழ்ந்த பெலாஜியா, அங்கேயே மரித்தும் போனார். அங்கிருந்த பிற துறவியரால் கடைசிவரை அவர் ஒரு பெண் என்பதை அறிய முடியாமலேயே போனது. அந்த அளவுக்கு தீவிர சந்நியாச வாழ்க்கை வாழ்ந்த பெலாஜியா ஒரு பெண் என்பதனை அறிந்த பிற துறவியர், அதிர்ந்து போயினர். அதனை இரகசியமாக பேனா எண்ணினர். ஆனால், அது இயலாமல் போக, பெலாஜியாவின் வாழ்க்கையும் மரணமும் உலகுக்கு தெரிய வந்தது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா