✠ புனிதர் சிலுவையின் பவுல் ✠(St. Paul of
the Cross) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
19) |
✠ புனிதர் சிலுவையின் பவுல் ✠(St. Paul of
the Cross)
✠ நிறுவனர், குரு, ஒப்புரவாளர் :
(Founder, Priest, Confessor)
✠பிறப்பு : ஜனவரி 3, 1694
ஒவாடா, பியட்மொன்ட், சவோய் அரசு, (தற்போதைய இத்தாலி)
(Ovada, Piedmont, Duchy of Savoy (Now modern-day Italy)
✠இறப்பு : அக்டோபர் 18, 1775 (வயது 81)
SS. ஜியோவன்னி இ பவோலோ ஆலயம், ரோம்
(Church of SS. Giovanni e Paolo, Rome)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠முக்திபேறு பட்டம் : மே 1, 1853
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)
✠புனிதர் பட்டம் : ஜூன் 29, 1867
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)
✠முக்கிய திருத்தலங்கள் :
SS. ஜியோவன்னி இ பவோலோ ஆலயம், ரோம்
(Church of SS. Giovanni e Paolo, Rome)
✠நினைவுத் திருவிழா : அக்டோபர் 19
புனிதர் சிலுவையின் பவுல், ஒரு இத்தாலிய கிறிஸ்தவ புனிதரும்,
" இயேசுவின் திருப்பாடுகள் சபையின்" (Congregation of the
Passion of Jesus Christ) நிறுவனரும் ஆவார்.
" பவுலோ பிரான்செஸ்கோ டேனி" (Paolo Francesco Danei) எனும்
இயற்பெயர் கொண்ட இப்புனிதர், 1694ம் ஆண்டு, ஜனவரி மாதம், 3ம்
தேதி, இத்தாலியின் வடமேற்கு பிராந்தியமான " பியட்மொன்ட்"
(Piedmont) எனுமிடத்தில் பிறந்தார். " மார்க்" (Mark) எனும்
பெயர் கொண்ட ஒரு பணக்கார வியாபாரியின் மகனான இவரது தாயாரின்
பெயர், " அன்னா" (Anna Maria Massari Danei) ஆகும். இவர், தமது
பெற்றோரின் பதினாறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை ஆவார்.
இவர்களில் ஆறு பேர் மட்டுமே சிறு வயதிலிருந்து
தப்பிப்பிழைத்தனர். மீதமுள்ள பத்து பெரும் சிறு வயதிலேயே
மரித்துப் போயினர். மரணத்தின் நிஜத்தையும் நிலையற்ற
வாழ்க்கையையும் சிறு வயதிலேயே கற்றுக்கொண்டார். தமது ஆரம்பக்
கல்வியை ஒரு குரு நடத்தி வந்த பள்ளியில் கற்றார். பள்ளிக்
கல்வியில் பெரும் முன்னேற்றம் கண்ட டேனி, சிறு வயதிலேயே
அருகிலுள்ள ஆலயங்களில் மறைக் கல்வி கற்பித்தார்.
தனது 19 வயதில் செப வாழ்வுக்கான மனமாற்றத்தை உணர்ந்த டேனி,
பக்தி நிறைந்த வாழ்க்கை வாழலானார். " ஃபிரான்சிஸ் டி சலேஸ்"
(Saint Francis de Sales) எழுதிய " கடவுளின் அன்பைப் பற்றிய
ஆய்வுக் கட்டுரை" (Treatise on the Love of God) புத்தகம்
ஏற்படுத்திய தாக்கத்தாலும், " கப்புச்சின் சபை" க் (Capuchin
Order) குருக்களின் அன்பு குறித்தான போதனைகளும்
வழிகாட்டல்களும் இவரிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இவர்
தனது வாழ்நாளெல்லாம் கடவுளை " இயேசுவின் பாடுகளின்" (Passion of
Christ) மூலம் எளிதில் காணலாம் என்று நம்பினார்.
தனது 26 வயதில் தொடர்ச்சியான செப அனுபவங்களின் மூலம் ஒரு புதிய
துறவற சபையினைத் துவங்க இறை அழைத்தலை உணர்ந்தார். இவ்வாறு இவர்
ஆரம்பித்ததே " திருப்பாடுகள் சபை" யாகும். (Congregation of the
Passion of Jesus Christ, or the Passionists) இச்சபையினரின்
அங்கியின் மேல் இயேசுவின் இருதயமும், "இயேசு கிறிஸ்துவின்
பாடுகள்" என்னும் வசனமும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த
சபைக்கு இவர் அளித்த பெயர், இயேசுவின் வறியோர், ஆனாலும்
திருப்பாடுகளுக்கு இச்சபை அளித்த முக்கியத்துவத்தினால் இவர்கள்
பின் நாட்களில் " திருப்பாடுகளின் சபையோர்" என அறியப்பட்டனர்.
இவரது ஆயரின் தூண்டுதலால், இவர் மட்டுமே இச்சபையில்
இருக்கும்போதே இவர் இச்சபையின் சட்ட நூலினை நாற்பது நாள்
தியானத்துக்குப் பின் 1720ம் ஆண்டின் இறுதியில் இயற்றினார்.
இச்சபையில் இவரின் சொந்த சகோதரரான " ஜான் பேப்டிஸ்ட்" (John
Baptist) இவருக்குப் பின் சேர்ந்த முதல் உறுப்பினர் ஆவார்.
இதற்குப் பின் இச்சபை மெதுவாக வளரத் துவங்கியது. ஒரு குறுகிய
இறையியல் கல்வியின் பின்னர், சகோதரர்கள் இருவரும் கி.பி.
1727ம் ஆண்டு, ஜூன் மாதம், 7ம் தேதி, திருத்தந்தை
" பதின்மூன்றாம் பெனடிக்ட்" (Pope Benedict XIII) அவர்களால்
ரோம் நகரிலுள்ள " தூய பேதுரு பேராலயத்தில்" (St. Peter's
Basilica) வைத்து, குருத்துவ அருட்பொழிவு
செய்விக்கப்பட்டார்கள்.
குருத்துவம் பெற்ற பின்னர், இவர்களிருவரும் போதிய குருக்கள்
இல்லாத தொலைதூர கிராமங்களில் மறை போதனை செய்வதற்காக தம்மை
அர்ப்பணித்தனர். பவுல் தமது காலத்தில், தமது வார்த்தைகள்
மற்றும் தாராளமான இரக்கமுல்லா செயல்களுக்காகவும் மிகவும்
பிரபலமான பிரசங்கிகளில் ஒருவராக அறியப்பட்டார்.
இவர் தனது வாழ்நாளில் பிறரின் ஆன்ம வழிகாட்டலுக்கு எழுதிய
இரண்டாயிரத்துக்கும் மேலான கடிதங்கள் இப்போதும்
பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவர் கி.பி. 1775ம் ஆண்டு,
அக்டோபர் மாதம், 18ம் தேதி, மரித்தார். அச்சமயத்தில் இவரின்
சபையின் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட இல்லங்களில் 180 குருக்கள்
மற்றும் அருட்சகோதரர்கள் இருந்தனர்.
இவருக்கு கி.பி. 1852ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 1ம் தேதி,
முக்திபேறு பட்டமும், கி.பி. 1867ம் ஆண்டு, ஜூன் மாதம், 29ம்
தேதி, புனிதர் பட்டமும் திருத்தந்தை " ஒன்பதாம் பயஸ்" (Pope
Pius IX) அவர்களால் அளிக்கப்பட்டது. இவர் மறைந்த நாளான
அக்டோபர் 18ம் தேதி, நற்செய்தியாளர் புனிதர் லூக்காவின்
நினைவுத் திருவிழாவாக இருப்பதால் இவரது விழாநாள் அக்டோபர்
மாதம் 19ம் நாள் ஆகும். |
|
|