✠ புனிதர் இருபத்திமூன்றாம் யோவான் ✠ (St.
John XXIII) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
11) |
✠ புனிதர் இருபத்திமூன்றாம் யோவான் ✠ (St.
John XXIII)
✠261ம் திருத்தந்தை :
(261st Pope)
✠பிறப்பு : நவம்பர் 25, 1881
சோட்டோ இல் மோன்ட்டே, பெர்கமோ, இத்தாலி அரசு
(Sotto il Monte, Bergamo, Kingdom of Italy)
✠இறப்பு : ஜூன் 3, 1963 (வயது 81)
அப்போஸ்தல மாளிகை, வத்திக்கான் நகரம்
(Apostolic Palace, Vatican City)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
அமெரிக்காவில் இவாஞ்சலிக்கல் லூதரன் திருச்சபை
(Evangelical Lutheran Church in America)
கனடாவின் ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church of Canada)
அமெரிக்காவின் எபிஸ்கோபல் திருச்சபை
(Episcopal Church of the United States)
✠முக்திபேறு பட்டம் : செப்டம்பர் 3, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
✠புனிதர் பட்டம் : ஏப்ரல் 27, 2014
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)
திருத்தந்தை புனிதர் இருபத்திமூன்றாம் யோவான் அல்லது
இருபத்திமூன்றாம் அருளப்பர், கத்தோலிக்க திருச்சபையின் 261ம்
திருத்தந்தையாக 1958-1963 காலகட்டத்தில் ஆட்சிசெய்தவர் ஆவார்.
"ஆஞ்செலோ ஜியுசெப் ரொன்கல்லி" (Angelo Giuseppe Roncalli)
எனும் இயற்பெயர் கொண்ட இவர், 1881ம் ஆண்டு, நவம்பர் மாதம்,
25ம் நாள் பிறந்தார். 1958ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 28ம் நாள்
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகள்
மட்டுமே ஆட்சி செய்தார். அக்குறுகிய ஆட்சிக்காலத்தில் இவர்
20ம் நூற்றாண்டுத் திருச்சபையில் நடந்த மிக முக்கிய
நிகழ்வாகிய, 1962-1965 காலகட்டத்தில் நடந்த "இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கத்தை" (Second Vatican Council)
கூட்டினார். ஆனால், வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த
திருத்தந்தை, அச்சங்கம் நிறைவுறுவதற்கு முன்னரே, 1963ம் ஆண்டு,
ஜூன் மாதம், 3ம் நாள் மரித்தார்.
இளமைப் பருவம் :
"ஆஞ்செலோ ஜியுசெப் ரொன்கல்லி" (Angelo Giuseppe Roncalli),
இத்தாலி நாட்டின் வடமேற்கு பிராந்தியமான "லொம்பார்டியின்"
(Lombardy) "பெர்கமோ" (Bergamo) என்னும் பகுதியைச் சார்ந்த
"சோட்டோ இல் மோன்ட்டே" (Sotto il Monte) என்னும் சிற்றூரில்
பிறந்தார்.
அவருடைய தந்தை, "ஜியோவன்னி பட்டிஸ்டா ரொன்கல்லி" (Giovanni
Battista Roncalli) ஆவார். தாயார் "மரியன்னா ஜியூலியா
மஸ்சொல்லா" (Marianna Giulia Mazzolla) ஆவார். அவர்களுக்குப்
பிறந்த பதின்மூன்று குழந்தைகளுள் ஆஞ்செலோ ஜியுசெப் ரொன்கல்லி
நான்காமவர் ஆவார். 1889ம் ஆண்டு, தமது எட்டு வயதில்
"புதுநன்மை" மற்றும் "உறுதிப்பூசுதல்" ஆகிய இரண்டு
அருட்சாதனங்களை பெற்றார்.
சிறுவயதிலேயே குருவாகப் பணிபுரிய ஆர்வம் கொண்ட ஆஞ்செலோ
ஜியுசெப் ரொன்கல்லி, தம் உறவினர் ஒருவர் அளித்த நிதி உதவியோடு
பெர்கமோ சிறு குருமடத்தில் கல்வி பயின்றார். கல்வி உதவித்தொகை
பெற்று, ரோமில் புனித அப்போல்லினார் குருமடத்தில் (இன்றைய
"ரோம் திருத்தந்தை பெரிய குருமடம்") கல்வி கற்றார். 1896ம்
ஆண்டு, மார்ச் மாதம், 1ம் தேதி, "ஃபிரான்சிஸ்கன் சபையில்"
(Secular Franciscan Order) இணைந்தார். 1904ம் ஆண்டு
இறையியலில் டாக்டரேட் பட்டம் பெற்ற இவர், ஆகஸ்ட் மாதம், 10ம்
நாள் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
ரொன்கல்லி, சிறுவயதிலிருந்தே அன்னை மரியாள் மீது மிகுந்த பக்தி
கொண்டிருந்தார். மிலன் மறை மாவட்டத்தைச் சேர்ந்த இம்பெர்சாகோ
என்னும் ஊரில் அமைந்திருந்த அன்னை மரியாள் திருத்தலத்துக்கு
அவர் பல முறை திருப்பயணமாகச் சென்றுவந்தார்.
திருச்சபையில் பணிபுரிதல் :
பெர்கமோ மறைமாவட்டத்தின் புதிய ஆயர் "ஜியாகோமோ" (Giacomo
Radini-Tedeschi) தமது செயலராக ரொன்கல்லியை 1905ம் ஆண்டு
நியமித்தார். அப்பணியை மிக்க விசுவாசத்தோடும் திறமையோடும்
ஆற்றினார். 1914, ஆகஸ்ட் 22ம் நாள் ஆயரின் மரண நாள்வரை தமது
ஆயரின் செயலராகப் பணிபுரிந்தார். அதே சமயம் பெர்கமோ
குருமடத்தில் திருச்சபை வரலாறு கற்பித்தார்.
முதலாம் உலகப்போரின்போது (World War I), இத்தாலியின் அரச
இராணுவத்தில் (Royal Italian Army) இவர் கட்டாய இராணுவ சேவை
புரிந்தார். இராணுவத்தின் மருத்துவ பிரிவில், நோயாளிகளைத்
தூக்கிச் செல்லும் "ஸ்ட்ரெச்சர்" தூக்குபவராகவும்
(Stretcher-Bearer) சிட்றாலய குருவாகவும் (Chaplain)
பணியாற்றிய இவர், 1919ம் ஆண்டின் தொடக்கத்தில்
இராணுவத்திலிருந்து வெளியே வந்தார்.
1921ம் ஆண்டு, நவம்பர் மாதம், 6ம் தேதி ரோம் பயணித்த
ரொன்கல்லி, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்டை (Pope
Benedict XV) சந்தித்தார். அவர் ரொன்கல்லியை இத்தாலியின்
நற்செய்தி அறிவிப்புப் பணி தேசிய அமைப்பின் (Society for the
Propagation of the Faith) தலைவராக நியமித்தார். ரொன்கல்லி,
தாம் சந்தித்த திருத்தந்தையருள் திருத்தந்தை பதினைந்தாம்
பெனடிக்ட் மிகவும் அனுதாபம் மிக்கவர் என்று நினைவுகூறுவார்.
ரொன்கல்லி, திருச்சபையின் பல்வேறு பொறுப்புமிக்க பதவிகளை
வகித்தார்.
திருத்தந்தை இருபத்துமூன்றாம் யோவான் தமது பதவி காலத்தில், பல
உணர்ச்சிபூர்வமான பிரசங்கங்கள் நிகழ்த்தினார். அவை மிகவும்
பிரசித்தி பெற்றவையாகும். எடுத்துக்காட்டாக, இரண்டாம்
வாட்டிகன் பொது சங்கத்தின் (Second Vatican Council) தொடக்க
நாளின் நடுநிசியில், தூய பேதுரு சதுக்கத்தில் (St. Peter's
Square) கூடியிருந்த கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை கூறிய
சில வார்த்தைகள்:
"என் அன்பார்ந்த குழந்தைகளே! நீங்கள் வீடு திரும்புகையில்,
உங்கள் குழந்தைகளை சந்திப்பீர்கள். அவர்களை அணைத்தவாறு, இது
திருத்தந்தையின் சார்பில் என்று கூறுங்கள்" (Dear children,
returning home, you will find children; give your children a
hug and say: This is a hug from the Pope!) |
|
|