Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா ✠(St. Thérèse of Lisieux)
   
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 02)
✠ லிசியு நகரின் புனிதர் தெரேசா ✠(St. Thérèse of Lisieux)

 
 
கன்னியர் /மறைவல்லுநர் :
(Virgin/ Doctor of the Church)

பிறப்பு : ஜனவரி 2, 1873
அலேன்கான், ஒர்ன், ஃபிரான்ஸ்
(Alençon, Orne, France)

இறப்பு : செப்டம்பர் 30, 1897 (வயது 24)
லிசியே, கல்வடாஸ், ஃபிரான்ஸ்
(Lisieux, Calvados, France)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 29, 1923
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம் : மே 17, 1925
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

முக்கிய திருத்தலங்கள் :
தூய தெரேசா பேராலயம், லிசியே நகர், ஃபிரான்ஸ்
(Basilica of St. Thérèse in Lisieux, France)

நினைவுத் திருவிழா : அக்டோபர் 1

சித்தரிக்கப்படும் வகை : கர்மலைட் துறவியர் சீருடைகள் (Carmelite habit), சிலுவையில் அறையப்பட்ட இயேசு (Crucifix), ரோஜாக்கள் (Roses)

பாதுகாவல் :
வாட்டிகன் நகர தோட்டங்கள், மறைப்பணியாளர்கள்; ஃபிரான்ஸ்; ரஷியா; எய்ட்ஸ் நோயாளிகள்; தோட்டக்கலைஞர்; பெற்றோரை இழந்தோர்; காச நோயாளிகள்

குறிப்பிடத்தகுந்த படைப்புகள் :
ஓர் ஆன்மாவின் வரலாறு (The Story of a Soul) (சுயசரித நூல்)

லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா, ஒரு ஃபிரெஞ்ச் கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார்.

"மரி-ஃப்ரான்காய்ஸ்-தெரேஸ் மார்ட்டின்" (Marie-Françoise-Thérèse Martin) என்னும் இயற்பெயர் கொண்ட இவர், துறவற சபையில் "குழந்தை இயேசு", மற்றும் "இயேசுவின் திருமுகத்தின் தெரேசா" (Thérèse of the Child Jesus and the Holy Face) என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார். "குழந்தை இயேசுவின் தெரேசா" (Thérèse of the Child Jesus) என்னும் பெயரும், "இயேசுவின் சிறு மலர்" (The Little Flower of Jesus) என்னும் பெயரும் இவருக்குச் சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.

15 வயதே நிரம்பிய தெரேசா தம் இளம் பருவத்திலேயே இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, கி.பி. 1888ம் ஆண்டு, பல்வேறு தடைகளையும் தாண்டி, கார்மேல் சபையில் சேர்ந்தார். அவர் புகுந்த அடைப்புநிலை (Cloistered) கார்மேல் சபை மடம் ஃபிரான்ஸ் நாட்டில் "நோர்மாண்டி" (Normandy) மாநிலத்தில் லிசியேக்ஸ் (Lisieux) நகரில் அமைந்திருந்தது. அத்துறவற இல்லத்தில் தெரேசா ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு திருப்பணிக் காப்பகப் பொறுப்பாளர், (Sacristan), பயிற்சி நிலைத் துறவியரின் துணைப் பயிற்சியாளர் போன்ற பல பணிகளை ஆற்றினார். அவர், தம் வாழ்க்கையின் இறுதி பதினெட்டு மாதங்களில் "இறைநம்பிக்கையின் இருண்ட கால" வேதனையை அனுபவித்தார். அவர் காச நோயால் பீடிக்கப்பட்டு, தமது 24ம் வயதில் இறையடி எய்தினார்.

இவரின் ஓர் ஆன்மாவின் வரலாறு என்னும் சுயசரித நூலை (The Story of a Soul) இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிட்டனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதருள் ஒருவராகப் பிறர் கண்டுணர வழிவகுத்தது. இவருக்கு முக்திபேறு பெற்ற பட்டம் 1923ம் ஆண்டிலும், புனிதர் பட்டம் 1925ம் ஆண்டிலும் வழங்கப்பட்டது. திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரைத் தம் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.

குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்கு இன்று உலகம் முழுவதிலும் வணக்கம் செலுத்தப்படுகிறது.

தெரேசா ஒரு மறைவான வாழ்க்கை வாழ்ந்து, அறியப்படாமல் இருக்க வேண்டும், என்றே விரும்பினார். ஆனால் இவரின் இறப்புக்கு பின் இவரின் சுயசரித நூல் (The Story of a Soul) இவரை வெளி உலகிற்கு காட்டியது. இவரின் கடிதங்கள், கவிதைகள், சமய நாடகங்களில், இறை வேண்டல்கள், மற்றும் இவரது கடைசி உரையாடல்கள், இவரது சகோதரிகள் பதிவு செய்த இவரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் - (பெரும்பாலும் சகோதரி செலின்'னால் செய்யப்பட்டவை) இவரைப் பலரும் கண்டுணர வழிவகுத்தது.

இவரது ஆன்மீக வாழ்வின் ஆழம், பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இவர் அதனைப்பற்றி கூறும் போது, "என் வழி முழுவதும் நம்பிக்கை கொள்வதும் அன்பு செய்வதும் தான்" என்றார். தனது தாழ்ச்சியிலும் எளிமையிலும், இவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார்.

புதியதொரு "சிறு வழியில்" ("Little way") சென்று தெரேசா விண்ணகம் அடைய விரும்பினார். "இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (Elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்" என்று தெரேசா குறிப்பிடுகின்றார்.

லிசியே நகரில் உள்ள, புனித தெரேசா பேராலயம், ஃபிரான்ஸ் நாட்டிலேயே, லூர்து நகருக்கு அடுத்து மிக அதிக திருப்பயணியர் வரும் இடமாக உள்ளது.

பிறப்பு :
தெரசா ஃபிரான்ஸ் நாட்டில் அலேசான் என்னும் இடத்தில் கி.பி. 1873ம் ஆண்டு ஜனவரி மாதம், 2ம் நாள் புனிதர் லூயிஸ் (Saint Louis Martin) - புனிதர் செலின் (Saint Marie-Azélie Guérin) தம்பதியரின் 9வது குழந்தையாக பிறந்தார். சிறுவயதிலேயே தமது தாயை இழந்தார். 15 வயதே நிரம்பிய தெரேசா தம் இறை ஆர்வத்தால் திருத்தந்தையின் சிறப்பு அனுமதி பெற்று, 1888ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 9ம் நாள், கார்மேல் சபையில் சேர்ந்தார்.

சிறு வழியைக் கண்டுபிடித்தல் :
Limage contient peut-être : 1 personne, debout
தெரேசா கார்மேல் மடம் புகுந்த வேளையில் ஒரு புனிதையாக மாறவேண்டும் என்னும் தீர்க்கமான முடிவோடுதான் சென்றார். ஆனால், ஆறு ஆண்டுகள் துறவியாக வாழ்ந்தபின்னும், 1894ல் தான் எத்துணை சிறியவள், வலுவற்றவள் என்பதை உணர்ந்தார். எவ்வளவுதான் முயன்றாலும் தன்னிடம் குறைபாடுகள் பல இருந்ததை அவர் கண்டார். அளவற்ற அன்பு காட்ட அவருக்கு விருப்பமாயிருந்தாலும் அவரது சிறுமை அவரை மேற்கொண்டது.

படிப்படியாகத் தன் சிறுமையே தன் வளர்ச்சிக்கு வழியாகும் என்றும், தன் சிறுமையில் கடவுளின் உதவியை நாடிச் செல்வதென்றும் முடிவுசெய்தார். தெரேசாவின் சகோதரி செலின் கொண்டுவந்திருந்த பழைய ஏற்பாட்டை தெரேசா புரட்டினார். அங்கே, நீதிமொழிகள் என்னும் நூலின் ஒரு பகுதி (9:4) அவரைக் கவர்ந்தது:
"அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது."
என்று கடவுளின் "ஞானம்" பற்றி அந்நூலில் வரும் பகுதி தெரேசாவின் கண்களைத் திறந்தது.

அதுபோலவே, எசாயா இறைவாக்கினர் நூலில் வரும் 66:12-13 பகுதி தெரேசாவுக்குப் புதியதொரு பொருளை விளக்குவதாக அமைந்தது:

இதோ அப்பகுதி :
"ஆண்டவர் கூறுவது இதுவே; ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்."

கடவுளின் வார்த்தையை விவிலியத்தில் கண்ட தெரேசா தனக்குக் கடவுள் தரும் செய்தி என்னவென்று உணர்ந்தார். தன் சிறுமையும் வலுவின்மையும் ஒரு குறையல்ல, மாறாக, அவற்றின் வழியாகவே இயேசு தன்னைப் புனித நிலையின் உச்சிக்கு இட்டுச் செல்வார் என்று அறிந்தார். எனவே, உள்ளம் தளர்வதற்கு மாறாக மகிழ்ச்சியடைய வேண்டும். இது தெரேசாவுக்கு ஓர் அற்புதமான கண்டுபிடிப்பாக அமைந்தது.

இதையே அவர் "சிறு வழி" என்று அழைத்தார். 1895 ஃபெப்ரவரி மாதத்திலிருந்து தான் எழுதிய மடல்களில் எல்லாம் தெரேசா தன் பெயருக்கு முன்னால் "மிகச் சிறிய" என்னும் அடைமொழியை இடத் தொடங்கினார்.

தன் குறைகளை வெல்வதற்குத் தன் சொந்த சக்தி போதும் என்று தெரேசா எண்ணவில்லை. மாறாக, கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து, தன் கடமைகளைப் பொறுப்போடு ஆற்றி, நற்செயல்கள் புரிந்து வாழ்ந்தால் அதுவே கடவுளின் விருப்பம் என்னும் உறுதிப்பாடு அவரிடம் இருந்தது.

"ஆண்டவர் ஒரு தாயை விடவும் பாசம் கொண்டவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன் குழந்தை அறியாத்தன்மையால் தவறு செய்யும்போது அதைத் தாய் மன்னித்து விடுவார். குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனம் செய்வார்கள், கீழே விழுவதும், அழுக்கில் புரள்வதும், பொருள்களை உடைப்பதும் அவர்கள் வேலை. ஆனால் இதெல்லாம் நிகழ்ந்த பிறகும் பெற்றோர் தம் குழந்தைகளை அன்பு செய்வதில் குறைபடுவதில்லை."

சுயசரித நூல் (The Story of a Soul) - ஓர் ஆன்மாவின் வரலாறு:
தெரேசாவை வெளி உலகிற்கு தெரிவித்தது, அவரின் சுயசரித நூல் ஓர் ஆன்மாவின் வரலாறு (The Story of a Soul) ஆகும். அதை அவர் தன் சபைத் தலைவியின் கட்டளைக்குப் பணிந்து எழுதினார். இதை 1985ல் தன் இளம் பருவ நினைவுகளிலிருந்து எழுதலானார். மற்றும் 1986ல் தன் சகோதரியும், அம்மடத்திலேயே கன்னியராகவும் இருந்த சகோ. திரு இருதயத்தின் மரியாளுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பும் சேர்த்து ஓர் ஆன்மாவின் வரலாறு என வெளியிடப்பட்டது.

இந்நூல் மறைத்திரு. பி.பி. சேவியரால் தமிழாக்கம் செய்யப்பட்டு, புதுவையில் உள்ள மிஷன் அச்சகத்தில் 1998ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இறப்பு :
தெரசா இறக்கும் தருவாயில் இருந்தபோதும் அவர் முகத்தில் புன்னகை குறையவே இல்லை. அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு, 1897ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30ம் நாள் தமது 24 வயதில் இறையடி எய்தினார்.

இவருக்கு, திருத்தந்தை "பதினொன்றாம் பயஸால்" (Pope Pius XI) 1923ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 29ம் நாள் முக்திபேறு பட்டமும், 1925ம் ஆண்டு, மே மாதம், 17ம் நாள் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.

இவர், 1927ம் ஆண்டு, மறை பரப்பு நாடுகளின் துணை பாதுகாவலியாக ஃபிரான்சிஸ் சவேரியாருடன் அறிவிக்கப்பட்டார். 1944ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டின் பாதுகாவலியாக "ஜோன் ஆஃப் ஆர்க்" (Joan of Arc) உடன் அறிவிக்கப்பட்டார். 1997ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19ம் தேதி, திருத்தந்தை புனிதர் "இரண்டாம் ஜான் பவுல்" (Pope Saint John Paul II) இவரை கத்தோலிக்க திருச்சபையின் 33ம் மறைவல்லுநராக அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இவரே வயதால் மிக இளையவரும், நான்கு பெண் புனிதர்களுள் ஒருவருமாவார்.

2011-இல் இவர்களின் கடிதங்கள் A Call to a Deeper Love: The Family Correspondence of the Parents of Saint Thérèse of the Child Jesus, 1863-1885 என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.

=================================================================================

லிசியே நகரின் தெரேசா என்பவர் ஒரு பிரஞ்சு கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார். மரி ப்ரான்சுவா தெரேஸ் மார்த்தின் (Marie-Françoise-Thérèse Martin) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் துறவற சபையில குழந்தை இயேசு மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார். குழந்தை இயேசுவின் தெரேசா என்னும் பெயரும், இயேசுவின் சிறு மலர் என்னும் பெயரும் இவருக்குச் சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.

இவள் 1873-ல் பிறந்து, 15 வயதே நிரம்பிய தெரேசா தம் இளம் பருவத்திலேயே இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, 1888 இல், பல்வேறு தடைகளையு ம் தாண்டி, கார்மேல் சபையில் சேர்ந்தார். அவர் புகுந்த அடைப்புநிலை (cloistered) கார்மேல் சபை மடம் பிரான்சு நாட்டில் நோர்மாண்டி மாநிலத்தில் லிசியே (Lisieux) நகரில் அமைந்திருந்தது. அத்துறவற இல்லத்தில் தெரேசா ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். 1895-ல் நவ கன்னியரை கண்காணிக்கத் தொடங்கினாள். அங்கு திருப்பணிக் காப்பகப் பொறுப்பாளர் (sacristan), பயிற்சி நிலைத் துறவியரின் துணைப் பயிற்சியாளர் போன்ற பல பணிகளை ஆற்றினார்.

பெரியோருக்கு கீழ்ப்படிந்து தன் சுயசரிதையை எழுதி வைத்திருக்கிறாள். அன்புக்கும் சிறந்த பதில் அன்பே என்பது இவளது விருது வாக்கியம். இச்சொற்கள் இவள் கண் முன் என்றும் நின்றன. துன்பங்களைச் சகிக்க இவை இவளுக்குப் பலம் பெற்றுத் தந்தது. கடவுளைத் தந்தையாக மதித்து அன்பு செய்தாள். சிறு பிள்ளையின் கையில் பந்து போல இவள் தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்தாள். சிறுவன் பந்தை சுவரில் அடிக்கலாம். தரையில் போட்டு விளையாடலாம். அதேபோல் கடவுள் தம் பிரியம் போல் தன்னை நடத்த இவள் விட்டுவிட்டாள்.

சிறு வயதில் இவள் ஒருமுறை கோவிலுக்குச் சென்று செபிக்கையில் செப புத்தகத்திலிருந்து ஒரு படம் கீழே விழுந்தது. சிலுவையில் தொங்கிய இயேசு அதில் சித்தரிக்கப்பட்டிருந்தார். இயேசுவின் இரத்தம் பலருக்கு வீணாய்ப்போகிறதே என்று அன்றிலிருந்து ஏங்கி வாடினாள். மனந்திரும்ப மறுத்த ஒரு கொலைகாரனை மனந்திரும்பும்படி தனது உணவு, உறக்கம், வேலை விளையாட்டுகள் அனைத்தையும் செபமாக மாற்றினாள்.

'பனிக்கட்டி போல் ஆத்துமங்கள் நரகத்தில் விழுந்து சேதமாகிக் கொண்டிருக்கின்றன. நம் இயேசு கண்ணீர் வடிக்கிறார். அவருடைய பத்தினிகளாகிய நாம் அவரது கண்ணீரைத் துடைப்பதற்குப் பதிலாக அற்பக் காரியங்களுக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்' என்பாள்.

இவளுக்குக் காச நோய் வந்தது. 'நான் இறந்து போவேன். கணக்கு கொடுக்க இயேசுவின் முன் செல்வேன். பெரியவர்களிடம் போகும்போது வெறுங்கையோடு போகக் கூடாது. ஏதாவது காணிக்கை கொண்டு போக வேண்டும். நான் செபித்து ஒறுத்தல் செய்து மனந்திரும்பிய ஒரு பாவியின் ஆன்மாவை என் கையில் எடுத்து செல்வேன். என் முயற்சியால் நரகத்தில் ஓர் ஆள் குறைந்தது, மோட்சத்தில் ஓர் ஆள் அதிகரித்தது எனக் காணும் இயேசு உடனே என்னை மோட்சத்திற்கு எடுத்துக் கொள்வார்' என்று தெரேசாள் தன் அக்காளுக்கு எழுதினாள்.

'மோட்சத்திற்கு போன பின் அங்கு நான் சும்மா இருக்க மாட்டேன். பூமி மீது ரோஜா மலர் மாரி பொழிவேன். அதாவது ஏராளமான புதுமைகள் செய்வேன்' என்று சொன்னபடி புதுமைகள் செய்து வருகிறாள்.

அவர் தம் வாழ்க்கையின் இறுதி பதினெட்டு மாதங்களில் அவர் "இறைநம்பிக்கையின் இருண்ட கால" வேதனையை அனுபவித்தார். அவர் காச நோயால் பீடிக்கப்பட்டு, தம் 24ஆம் அகவையில் 30.09.1897-ல் இறையடி எய்தினார்.

இவரின் ஓர் ஆன்மாவின் வரலாறு என்னும் தன்வரலாற்று நூலை இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிட்டனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதருள் ஒருவராகப் பிறர் கண்டுணர வழிவகுத்தது. இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் 1923இலும், புனிதர் பட்டம் 1925இலும் வழங்கப்பட்டது. பதினொன்றாம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரைத் தம் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.

குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்கு இன்று உலகம் முழுவதிலும் வணக்கம் செலுத்தப்படுகிறது.

தெரேசா ஒரு மறைந்த வாழ்க்கை வாழ்ந்து, அறியப்படாமல் இருக்க வேண்டும் என்றே விரும்பினார். ஆனால் இவரின் இறப்புக்கு பின் இவரின் தன்வரலாற்று நூல் இவரை வெளி உலகிற்கு காட்டியது. இவரின் கடிதங்கள், கவிதைகள், சமய நாடகங்களில், இறை வேண்டல்கள், மற்றும் இவரது கடைசி உரையாடல்கள், இவரது சகோதரிகள் பதிவு செய்த இவரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் - (பெரும்பாலும் சகோதரி செலின்னால் செய்யப்பட்டவை) இவரைப் பலரும் கண்டுணர வழிவகுத்தது.

இவரது ஆன்மீக வாழ்வின் ஆழம், பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இவர் அதனைப்பற்றி கூறும்போது, "என் வழி முழுவதும் நம்பிக்கை கொள்வதும் அன்பு செய்வதும் தான்" என்றார். தனது தாழ்ச்சியிலும் எளிமையிலும், இவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார்.

புதியதொரு "சிறு வழியில்" ("little way") சென்று தெரேசா விண்ணகம் அடைய விரும்பினார். "இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்" என்று தெரேசா குறிப்பிடுகின்றார்.

லிசியே நகரில் உள்ள, புனித தெரேசா பேராலயம், பிரான்சு நாட்டிலேயே, லூர்து நகருக்கு அடுத்து மிக அதிக திருப்பயணியர் வரும் இடமாக உள்ளது.

பொருளடக்கம்


1 பிறப்பு
2 சிறு வழியைக் கண்டுபிடித்தல்
3 தன்வரலாற்று நூல் - ஓர் ஆன்மாவின் வரலாறு
4 இறப்பு
5 புனித தெரேசாவின் பெற்றௌருக்கு முத்திபேறுபட்டம்


பிறப்பு

தெரசா பிரான்ஸ் நாட்டில் அலேசான் என்னும் இடத்தில் கி.பி. 1873-ம் ஆண்டு சனவரி திங்கள் 2-ம் நாள் லூயிஸ்-செலின் தம்பதியரின் 9-வது குழந்தையாக பிறந்தார். தனது சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார்.15 வயதே நிரம்பிய தெரேசா தம் இறை ஆர்வத்தால் திருதந்தையின் சிறப்பு அனுமதி பெற்று, 1888-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9-ம் நாள், கார்மேல் சபையில் சேர்ந்தார்.

சிறு வழியைக் கண்டுபிடித்தல்

தெரேசா கார்மேல் மடம் புகுந்த வேளையில் ஒரு புனிதையாக மாறவேண்டும் என்னும் தீர்க்கமான முடிவோடுதான் சென்றார். ஆனால், ஆறு ஆண்டுகள் துறவியாக வாழ்ந்த பின்னும், 1894இல் தான் எத்துணை சிறியவள், வலுவற்றவள் என்பதை உணர்ந்தார். எவ்வளவுதான் முயன்றாலும் தன்னிடம் குறைபாடுகள் பல இருந்ததை அவர் கண்டார். அளவற்ற அன்பு காட்ட அவருக்கு விருப்பமாயிருந்தாலும் அவரது சிறுமை அவரை மேற்கொண்டது.

படிப்படியாகத் தன் சிறுமையே தன் வளர்ச்சிக்கு வழியாகும் என்றும், தன் சிறுமையில் கடவுளின் உதவியை நாடிச் செல்வதென்றும் முடிவுசெய்தார். தெரேசாவின் சகோதரி செலின் கொண்டு வந்திருந்த பழைய ஏற்பாட்டை தெரேசா புரட்டினார். அங்கே, நீதிமொழிகள் என்னும் நூலின் ஒரு பகுதி (9:4) அவரைக் கவர்ந்தது.

"அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் என்று அறிவிக்கச் செய்தது மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது" என்று கடவுளின் "ஞானம்" பற்றி அந்நூலில் வரும் பகுதி தெரேசாவின் கண்களைத் திறந்தது.

அதுபோலவே, எசாயா இறைவாக்கினர் நூலில் வரும் 66:12-13 பகுதி தெரேசாவுக்குப் புதியதொரு பொருளை விளக்குவதாக அமைந்தது. இதோ அப்பகுதி:

"ஆண்டவர் கூறுவது இதுவே ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன. நீங்கள் பால் பருகுவீர்கள்;. மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்;. மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்;. எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்"

கடவுளின் வார்த்தையை விவிலியத்தில் கண்ட தெரேசா தனக்குக் கடவுள் தரும் செய்தி என்னவென்று உணர்ந்தார். தன் சிறுமையும் வலுவின்மையும் ஒரு குறையல்ல, மாறாக, அவற்றின் வழியாகவே இயேசு தன்னைப் புனித நிலையின் உச்சிக்கு இட்டுச் செல்வார் என்று அறிந்தார். எனவே, உள்ளம் தளர்வதற்கு மாறாக மகிழ்ச்சியடைய வேண்டும். இது தெரேசாவுக்கு ஓர் அற்புதமான கண்டுபிடிப்பாக அமைந்தது.

இதையே அவர் "சிறு வழி" ("little way") பிரஞ்சு மூலத்தில் (petite voie) என்று அழைத்தார். 1895 பெப்ருவரி மாதத்திலிருந்து தான் எழுதிய மடல்களில் எல்லாம் தெரேசா தன் பெயருக்கு முன்னால் "மிகச் சிறிய" (toute petite) என்னும் அடைமொழியை இடத் தொடங்கினார்.

தன் குறைகளை வெல்வதற்குத் தன் சொந்த சக்தி போதும் என்று தெரேசா எண்ணவில்லை. மாறாக, கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து, தன் கடமைகளைப் பொறுப்போடு ஆற்றி, நற்செயல்கள் புரிந்து வாழ்ந்தால் அதுவே கடவுளின் விருப்பம் என்னும் உறுதிப்பாடு அவரிடம் இருந்தது.

"ஆண்டவர் ஒரு தாயை விடவும் பாசம் கொண்டவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன் குழந்தை அறியாத்தன்மையால் தவறு செய்யும்போது அதைத் தாய் மன்னித்துவிடுவார். குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனம் செய்வார்கள, கீழே விழுவதும், அழுக்கில் புரள்வதும், பொருள்களை உடைப்பதும் அவர்கள் வேலை. ஆனால் இதெல்லாம் நிகழ்ந்தபிறகும் பெற்றௌர் தம் குழந்தைகளை அன்புசெய்வதில் குறைபடுவதில்லை"

தன்வரலாற்று நூல் - ஓர் ஆன்மாவின் வரலாறு

லிசியே நகரில் உள்ள புனித தெரேசா பேராலயத்தின் உட்புறம்
                  

தெரேசாவை வெளி உலகிற்கு தெரிவித்தது, அவரின் தன்வரலாற்று நூல் - ஓர் ஆன்மாவின் வரலாறு (L'histoire d'une ême) ஆகும். அதை அவர் தன் சபைத் தலைவியின் கட்டளைக்குப் பணிந்து எழுதினார். இதை 1985-இல் தன் இளம் பருவ நினைவுகளிலிருந்து எழுதலானார். மற்றும் 1986-இல் தன் சகோதரியும, அம்மடத்திலேயே கன்னியராகவும் இருந்த சகோ. திரு இருதயத்தின் மரியாளுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பும் சேர்த்து ஓர் ஆன்மாவின் வரலாறு என வெளியிடப்பட்டது.

இந்நூல் மறைத்திரு. பி.பி. சேவியரால் தமிழாக்கம் செய்யப்பட்டு, புதுவையில் உள்ள மிஷன் அச்சகத்தில் 1998-இல் வெளியிடப்பட்டது.

இறப்பு

தெரசா இறக்கும் தருவாயில் இருந்த போதும் அவர் முகத்தில் புன்னகை குறையவே இல்லை. அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு,
- 1897-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30-ம் நாள் தம் 24ஆம் அகவையில் இறையடி எய்தினார்.
- இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் 1923-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29-ம் நாள்
வழங்கப்பட்டது.
- புனிதர் பட்டம் 1925-ம் ஆண்டு மே திங்கள் 17-ம் நாள் திருதந்தை பதினொன்றாம் பயஸால்
வழங்கப்பட்டது.
- 1927-இல் குழந்தை இயேசுவின் புனித தெரேசா மறை பரப்பு நாடுகளின் துணை
பாதுகாவலியாக பிரான்சிஸ் சவேரியாருடன் அறிவிக்கப்பட்டார்.
- 1944-இல் பிரான்சு நாட்டின் பாதுகாவலியாக ஜோன் ஆஃப் ஆர்கோடு அறிவிக்கப்பட்டார்.
- 19 அக்டோபர் 1997-இல் இரண்டாம் யோவான் பவுல் இவரை கத்தோலிக்க திருச்சபையின் 33-ஆம் மறைவல்லுநராக அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இவரே வயதால் மிக இளையவரும், மூன்றாவது பெண்ணும் ஆவார்.


புனித தெரேசாவின் பெற்றௌருக்கு முத்திபேறுபட்டம்

புனித தெரேசாவின் தாய் - புனித தெரேசாவின் தந்தை
                                                

தெரேசாவின் பெற்றௌருக்கு புனிதர்பட்ட செயல்கள் துவங்கி உள்ளன. இவர்கள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால், 1994-இல் வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்பட்டனர். 2004-இல் மிலான் நகர பேராயர், நுரையீரலில் நோய் உள்ள ஒரு குழந்தைக்கு ஏற்பட்ட குணத்தை ஏற்றுக்கொண்டு, 12 ஜூலை 2008 அன்று, கார்தினால் சரைவா மார்டின்ஸ் முயற்சியால் இவர்களின் 150-ஆவது திருமண நாளன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால் முத்திபேறுபட்டம் அளிக்கப்பட்டது. இவர்களுக்கு புனிதர் பட்டம், 18 அக்டோபர் 2015 அன்று, திருத்தந்தை பிரான்சிஸால் அளிக்கப்பட்டது. 2011-இல் இவர்களின் கடிதங்கள் A Call to a Deeper Love: The Family Correspondence of the Parents of Saint Thérèse of the Child Jesus. 1863-1885 என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.

செபம் : இயேசுவே, உம்மை நேசிக்கவும் பாவிகளைக் காப்பாற்றவும் நான் உயிர் வாழ்வேனாக

=================
குழந்தை தெரசா (அக்டோபர் 01)

நிகழ்வு 

தெரசா சிறுமியாக இருந்தபோது பிரான்சினி என்ற கொலை குற்றவாளி ஒருவன் இருந்தான். அவன் ஒரு குடும்பத்தில் இருந்த மூன்று பேரை கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டு, மரணதண்டனைக்காகக் காத்திருந்தான். அவனைக் குறித்து கேள்விப்பட்ட தெரசா அவன் மனம்மாறவேண்டும் என்று தொடர்ந்து ஜெபித்து வந்தார். தெரசாவின் இடைவிடாத ஜெபத்திற்கு பலன் கிடைத்தது. ஆம், பிரான்சினி என்ற அந்த கொலை குற்றவாளி தான் இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாக தன்னுடைய பாவத்தை உணர்ந்தான். அது மட்டுமல்லாமல் சிலுவையை தன்னுடைய கையில் ஏந்தி சிறைச்சாலைக்கு வந்த ஒரு பிராசிஸ்கன் துறவியிடம் தன்னுடைய பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு, அவர் கொண்டுவந்த சிலுவையை முத்திசெய்தி, முற்றிலுமாக மனம்மாறினான்.

பிரான்சினி தன்னுடைய பாவங்களை உணர்ந்து மனம்மாறிய செய்தி அடுத்தநாள் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வந்தது. இச்செய்தி மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளித்ததோ இல்லையோ, தெரசாவிற்கு அதிகமான மகிழ்ச்சியைத் தந்தது. அன்றிலிருந்தே அவர் பாவிகளின் மனமாற்றத்திற்காக, ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக தொடர்ந்து ஜெபித்து வந்தார்.

வாழ்க்கை வரலாறு

தெரசா 1873 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள், பிரான்சு நாட்டில் உள்ள ஆலேன்கோன் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை லூயிஸ் மார்டின், தாய் செலி என்பவர் ஆவார். தெரசாவின் குடும்பத்தில் அவர்தான் கடைக்குட்டி, அவரோடு பிறந்தவர்கள் எட்டு சகோதரிகள், ஆனால் அதில் நான்கு சகோதரிகள் மட்டுமே உயிரோடு இருந்தார்கள். தெரசாவின் பெற்றோர் இருவருமே தங்களுடைய இளமைக் காலத்தில் துறவியாக போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள். ஆனால் அது முடியாமல் போகவே, தங்களுடைய பிள்ளைகளை கடவுளுக்கு உகந்தவர்களாய் வளர்த்து அதன்மூலமாக அவர்களைத் துறவிகளாக மாற்றினார்கள்.

தெரசாவிற்கு நான்கு வயது நடந்துகொண்டிருந்தபோது அவருடைய தாய் அவரை விட்டுப் பிரிந்துபோனார். அவருடைய அன்னையின் இழப்பு அவரை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இந்த நேரத்தில் தெரசாவின் மூத்த சகோதரி பவுலின்தான் அவருக்கு ஒரு தாயைப் போன்று இருந்து, அவருக்கு உதவிகளையும் செய்து, அவரைச் சிறப்பாக வளர்த்தெடுத்தார். இந்த நேரத்தில் தெரசா அடிக்கடி நோய் வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். ஒரு சமயம் அவர் இப்படி நோய் வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தபோது அவருடைய குடும்பத்தில் இருந்த எல்லாரும் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் ஜெபித்து வந்தார்கள். அப்போது அன்னை மரியா தெரசாவிற்குக் காட்சிகொடுத்து, அவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சென்றார். அடுத்த நாளிலே தெரசாவிடமிருந்த நோய் முற்றிலுமாக மறைந்தது. அதன்பிறகு அவர் நல்ல சுகத்தோடு வாழ்ந்து வந்தார்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது தெரசாவின் மூத்த சகோதரி பவுலின் கார்மேல் கன்னியர் மடத்தில் துறவியாகச் சேர்ந்தார். இது தெரசாவிற்கு பேரிடியாக அமைந்தது. அவருடைய சகோதரியைப் போன்று, அவரும் கார்மேல் சபையில் துறவியாகச் சேர விரும்பினார். அப்போது அவருக்கு 9 வயது நடந்துகொண்டிருந்தது. அவருடைய வயதைக் காரணம் காட்டி, அவரை சபையில் சேர்க்க மறுத்தனர். இருந்தாலும் தெரசாவிற்கு துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மாறவில்லை. தெரசாவிற்கு 15 வயது நடந்துகொண்டிருந்தபோது, அவருடைய தந்தையோடு சேர்ந்து அவர் உரோமை நகருக்குச் சென்றார். அப்போது திருந்தந்தையாக இருந்தவர் பதிமூன்றாம் சிங்கராயர். அவரிடத்தில் சென்ற தெரசா கார்மேல் மடத்தில் துறவியாகச் சேரவேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தார். அதைக் கேட்ட திருந்தந்தை, "உமக்குத் துறவற மடத்தில் சேருவதற்கான வயது இல்லை. இருந்தாலும் இறைவனுக்கு விருப்பமானால் நீ சேர்ந்துகொள்" என்று சொல்லி, தெரசாவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் தெரசா தன்னுடைய பதினைந்தாம் வயதில் அதாவது 1888 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் கார்மேல் சபையில் துறவியாகச்  சேர்ந்தார்.

கார்மேல் சபையில் துறவியாகச் சேர்ந்த பிறகு தெரசா தூய வாழ்க்கை வாழத்தொடங்கினார்; அதிகமான நேரத்தை ஜெபத்திலும் தவத்திலும் கழித்தார். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதனை ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக செய்து வந்தார். "சிறிய வழி "The Little Way என்பதன் வழியாக சிறு சிறு காரியத்தைச் செய்வதன் வழியாகவும் ஆன்மாக்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார். மறை பரப்பு பணிகளைச் செய்யும் குருக்களுக்காக எப்போதும் ஜெபிக்கவேண்டும் என்று சொல்லி வந்தார். அவர்களுக்காக ஜெபித்து வந்தார். தெரசாவின் வாழ்வைப் பார்த்த தலைவி, அவரை அவருடைய 22 ஆம் வயதில் நவ கன்னியர்களுக்கு பொறுப்பாளராக ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல் அவருடைய வாழ்வையே ஒரு புத்தகமாக எழுதச் சொன்னார். அதன்பேரில் தெரசா தன்னுடைய வாழ்வையே "ஓர் ஆன்மாவின் கதை என்ற பெயரில் புத்தகமாக வடித்தார்.

தெரசா ஆன்மீகத்தில் அதிகமாக வளர்ந்தாலும் அவருடைய உடல் நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. எலும்புருக்கி நோயினால் அவர் அதிகமாகப் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் 1896 ஆம் ஆண்டு, செப்டம்பர் 30 ஆம் நாள், தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். அவர் இறக்கும்போது  அவருடைய சபை அருட்சகோதரிகள் யாவரும் அவரைச் சூழ்ந்து நின்று ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர் "இயேசுவே உம்மை நான் அன்பு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு தன்னுடைய உயிரைத் துறந்தார். தூய வாழ்க்கை வாழ்ந்த தெரசாவிற்கு 1925 ஆம் ஆண்டு பதினோறாம் பத்திநாதரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் "மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலி என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

சிறுமலர் என அன்போடு அழைக்கப்படும் தூய குழந்தை தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

துன்பத்தை பொறுமையோடு ஏற்றுக்கொள்ளல்

குழந்தை தெரசா தனக்கு வந்த துன்பங்கள் யாவற்றையும் சாபமாகப் பார்க்காமல் வரமாகப் பார்த்தார். அவர் தனக்கு வந்த எலுப்புருக்கி நோயினைக்கூட, கடவுள் தன்மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடாகவே பார்த்தார்.

தன்னோடு இருந்த அருட்சகோதரிகளின் விமர்சனத்தையும் தெரசா  பொறுமையாகத்தான் ஏற்றுக்கொண்டார். தெரசாவோடு இருந்த அருட்சகோதரி ஒருவர் அவரை எப்போது பார்த்தாலும் சினத்தோடுதான் பார்த்தார். தெரசா பதிலுக்கு அவரை சினத்தோடு பார்க்கவில்லை. மாறாக, அவரைப் பார்த்து புன்னைகைத்தார். இதனால் அந்த சகோதரி விரைவிலேயே தன்னுடைய குற்றத்தை உணர்ந்துகொண்டார். தெரசாவோடு நல்லுறவோடு வாழத் தொடங்கினார். இன்னொரு சமயம் வேறொரு சகோதரி தெரசாவின் மீது தெரிந்தே அழுக்குத் தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து தெரசா சினம்கொள்ளவில்லை. மாறாக இயேசு தனக்கு வந்த சிலுவையை எப்படி பொறுமையோடு ஏற்றுக்கொண்டாரோ அதைப் போன்று அந்த சகோதரி செய்யும் தவற்றைப் பொறுத்துக்கொண்டார். இதனால் அவரும் தன்னுடைய தவற்றை உணர்ந்து தெரசாவிடம் மன்னிப்புக் கேட்டார். இபப்டியாக தெரசா தனக்கு வந்த துன்பம், சவால் அனைத்தையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு அதன்வழியாக ஆன்மாக்களை மீட்டெடுக்கும் பணியைச் செய்து வந்தார்.

அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். துன்பமின்றி இன்பமில்லை. சோதனைகள் இன்றி சாதனைகள் இல்லை என்பது அறிஞர் பெருமக்கள் கூறும் செய்தி. நாம் நமக்கு வரும் துன்பங்களை தூய குழந்தைத் தெரசாவை போன்று மிகப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும்போது இறையாசிர் பெறுவோம் என்பது உறுதி.

குழந்தை உள்ளம்

குழந்தைத் தெரசாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் அவரிடத்தில் இருந்த குழந்தை உள்ளம்தான். அவர் குழந்தைகளிடம் இருந்த தூய உள்ளத்தை, கள்ளம் கபறற்ற மனதை, அதிலிருந்து வெளிப்படுகின்ற தியாக உள்ளத்தை தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடத்தில் விளங்கிய கள்ளம் கபறற்ற தன்மையைக் கொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "நீங்கள் மனந்திரும்பிச் சிறுபிள்ளைகள் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்" என்று (மத் 18:3). ஆம் நாம் குழந்தைகளின் உள்ளத்தைக் கொண்டிராவிட்டால் இறைவன் அரசைப் பெறுவது என்பது இயலாத காரியம் ஆகும்.

ஓர் ஊரில் ஜெனி என்ற சிறுமி இருந்தாள். அவள் எல்லாரிடத்திலும் அன்பும் அக்கறையோடும் இருந்தாள். ஒருநாள் அவள் சாலையோராமாக போய்க்கொண்டிருந்தபோது பிச்சைக்காரன் ஒருவனைக் கண்டாள். அவள் அந்தப் பிச்சைக்காரனின் அருகே சென்று பார்த்தபோது, அவன் சாப்பிட்டு நிறைய நாட்கள் ஆனது போன்று தெரிந்தது. உடனே அவள் அந்தப் பிச்சைகாரனை  தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து உணவு கொடுத்தாள். அதுமட்டுமல்லாமல் அவளுடைய தந்தையிடம் பிச்சைக்காரனை அழைத்துச் சென்று, "நம் வீட்டில் இவரைத் தங்க வைத்து ஏதாவது வேலை கொடுத்துகொடுக்கலாமே" என்று கெஞ்சிக் கேட்டாள். அவளுடைய தந்தையும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் அம்மனிதர் ஜெனியின் இல்லத்தில் தங்கியிருந்த தோட்ட வேலைகளைச் செய்து வந்தார்.

பின்னொரு நாள் அவள் தன் குடும்பத்துடன் ஓர் உயர்தர உணவகத்திற்கு சென்றாள். அப்படிப் போகும்போது அவள் வேலைக்காரராக மாறிய பிச்சைக்காரரையும் அழைத்துச் சென்றாள். அங்கு அவருக்கு நல்ல உணவு பரிமாறப்பட்டது. அவர் அதைச் சாப்பிடும் போது, கண்ணீர்விட்டு அழுதார். இதைப் பார்த்த ஜெனியின் தந்தை அவரிடம், "எதற்காக இப்படி அழுகிறாய்?" என்று கேட்க, அதற்கு அவர்  குழந்தை  ஜெனியைச் சுட்டிக்காட்டி, "ஜெனியைப் பார்க்கும்போது என்னுடைய அம்மாவைப் பார்ப்பது போன்று இருக்கிறது" என்று ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். அவருடைய வார்த்தைகளை கேட்ட ஜெனியின் தந்தை, தன் மகளை நினைத்து பெருமிதம் கொண்டாள்.

குழந்தைகள் எப்போதும் கனிவோடும் இரக்கத்தோடும் இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, தூய குழந்தை தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நாமும் அவரைப் போன்று துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொள்வோம், குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.



சிறுமலரே சின்ன ராணியே சிறுவழி தந்தவளே (என்)-2
உன் நறுமணம் கமழ்ந்திடும் நானிலமெங்குமே
நல்வழி தந்தவளே குழந்தை தெரசாளே

1. பணிபெற விரும்பவில்லை நீர் பயன்பெற நினைத்ததில்லை -2
உம் பாசத்திற்களவில்லை
உம் பெருந்தன்மைக்கெல்லையில்லை - 2
பாடும் மனமே தேடும் தினமே
பிறர்நலம் பேணும் பேரன்பினையே

2. சிறுசிறு செயல்களையே நீர் செம்மையாய்ச் செய்தாயே - 2
உம் குழந்தை உள்ளமே பல குறைகளைப் போக்கிடுதே - 2
தூய நெறியை துன்பங்கள் வழியில்
துணிவுடன் துலங்கிட செய்த நீ வாழி
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா