✠ புனிதர் ரெமிஜியஸ் ✠(St. Remigius) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
01) |
✠ புனிதர் ரெமிஜியஸ் ✠(St. Remigius)
✠ஆயர் மற்றும் ஒப்புரவாளர் :
(Bishop and Confessor)
✠பிறப்பு : கி.பி. 437
செர்னி-என்-லான்னோய்ஸ், பிக்கார்டி, ஃபிரான்ஸ்
(Cerny-en-Laonnois, Picardy, France)
✠இறப்பு : ஜனவரி 13, 533
ரீம்ஸ், சாம்பெய்ன், ஃபிரான்ஸ்
(Rheims, Champagne, France)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிகன் சமூகம்
(Anglican Communion)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodoxy)
✠நினைவுத் திருநாள் : அக்டோபர்
01
✠பாதுகாவல் : ஃபிரான்ஸ் (France)
புனிதர் ரெமிஜியஸ், ஃபிரான்ஸ் (France) நாட்டிலுள்ள "ரீம்ஸ்" (Rheims)
ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரும், "ஃபிராங்க்ஸ்" (Apostle of
the Franks) இன மக்களின் அப்போஸ்தலருமாவார். இவர், கி.பி.
496ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 25ம் தேதியன்று, "ஃபிராங்க்ஸ்"
இன அரசரான (King of the Franks) "முதலாம் குளோவிஸுக்கு"
(Clovis I) திருமுழுக்கு அளித்தார். இந்த திருமுழுக்கானது,
முழு ஃபிராங்க் இன மக்களையும் கிறிஸ்தவ மதத்திற்கு மனம்மாற்ற
வழிவகுத்தது. இது, திருச்சபைக்கு ஒரு பாரிய வெற்றியாகவும், ஐரோப்பிய
வரலாற்றில் ஒரு விசேட நிகழ்வாகவும் அமைந்தது.
ரெமிஜியஸ், பாரம்பரியமாக, "கல்லோ-ரோமன்" (Gallo-Roman society)
சமுதாயத்தின் மிக உயர்ந்த மட்டத்தில், லாவோன் (Laon),
பிகார்ட்டிக்கு (Picardy) அருகிலுள்ள செர்னி-என்-லான்னோய்ஸ் (Cerny-en-Laonnois)
என்ற இடத்தில் பிறந்தார். இவர், லாவோன் பிரதேச பிரபுவான (Count
of Laon) "எமிலியஸ்" (Emilius) என்பவருக்கும், "சோய்சன்" ஆயரின்
(Bishop of Soissons) மகளான "செலினாவுக்கும்" (Celina) மகனாகப்
பிறந்தவர் என்பர். பின்னாளில், கி.பி. 486ம் ஆண்டு, "முதலாம்
குலோவிஸுக்கு" (Clovis I) "சோய்சன்" நகரை வெற்றிகொண்டதாக வரலாறு
உண்டு.
ரீம்ஸ் (Reims) நகரில் கல்வி கற்ற இவர், விரைவில் தமது கற்றல்
மற்றும் புனிதத்தன்மைக்கு புகழ்பெற்றார். மேலும் அவரது உயர்
நிலை காரணமாக, ஒரு பொதுநிலையினராக இருப்பினும், தமது 22 வயதில்,
ரீம்ஸ் ஆயராக (Bishop of Reims) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்,
ஃபிரான்ஸ் நாட்டின் பெரும் வேந்தராகவும் (Lord Chancellor of
France), "மெரோவிங்கியன் வம்ச" (Merovingian dynasty) தலைமை அதிகாரியாகவுமிருந்தார்.
"சோய்சன்" நகர தேவாலயத்தில் இருந்து திருடப்பட்ட புனித
பாத்திரங்களை திரும்பப் பெறும் கதையானது, அவருக்கும்
குளோவிஸுக்கும் இடையில் உள்ள நட்பான உறவுகளுக்குச் சான்று
பகர்வதாகவும், ஃபிராங்க்ஸ் மன்னராக இருந்த குளோவிசை, அவர்
புனிதர் வேதாஸ்ட் (Saint Vedast) மற்றும் குளோவிஸுக்கு
மனைவியாக இருந்த பர்கண்டி இளவரசி புனிதர் க்ளோடில்ட் (Saint
Clotilde) ஆகியோரின் உதவியுடன் கிறிஸ்தவத்திற்கு மனம்
மாற்றினார். தாம் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும் முன்பே
குளோவிஸ், ரெமிஜியஸ் மற்றும் ரீம்ஸ் நகர கிறிஸ்தவ மக்களுக்கு
எண்ணற்ற நன்மைகளை வழங்கினார். டால்பாயாக் போரில் (Battle of
Tolbiac) அலமன்னி (Alamanni) மீது வெற்றிகொண்ட பிறகு, ரீம்ஸ்
நகரில் பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த ஃபிராங்க்ஸ் மற்றும்
ஆலமன்னி இன மக்களின் முன்னிலையில் தமக்கு திருமுழுக்கு
அருட்சாதனம் வழங்குமாறு ரெமிஜியசை வேண்டினார். புனிதர்
கிரகோரியின் கூற்றின்படி (Saint Gregory of Tours), சுமார்
3,000க்கும் மேற்பட்ட ஃபிராங்க்ஸ் இன மக்களுடன் க்ளோவிஸ்
ஞானஸ்நானம் பெற்றார்.
அரசன் குலோவிஸ், ரெமிஜியசுக்கு எண்ணற்ற சமஸ்தானங்களை பரிசாக
வழங்கினார். அதில், ரெமிஜியஸ் பல தேவாலயங்களை கட்டினார்.
பல்வேறு மறைமாவட்டங்களை நிறுவி, ஆயர்களை நியமித்தார். "டௌர்னை"
(Tournai), "கேம்ப்ரை" (Cambrai) மற்றும் "தெரௌன்"
(Throuanne) ஆகிய மறைமாவட்டங்களை நிறுவிய அவர், கி.பி. 499ம்
ஆண்டு, முதல் ஆயர்களை நியமித்தார்.
ரெமிஜியஸ், திருச்சபை கவுன்சில்களில் கலந்து கொள்ளவில்லை
என்றாலும், கி.பி. 517ம் ஆண்டு, ரீம்ஸ் நகரில் ஒரு சபைக்
கூட்டத்தை நடத்தினார். ஒரு சூடான விவாதத்திற்குப் பிறகு அவர்
ஒரு ஆரிய இன ஆயரை கிறிஸ்தவராக மனம் மாற்றினார்.
|
|
|