✠ அருளாளர் ஃபிரான்சிஸ் சேவியர் சீலோஸ் ✠
(Blessed Francis Xavier Seelos) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
12) |
✠ அருளாளர் ஃபிரான்சிஸ் சேவியர் சீலோஸ் ✠
(Blessed Francis Xavier Seelos)
✠மறைப்பணியாளர்/ குரு :
(Religious and Priest)
✠பிறப்பு: ஜனவரி 11, 1819
ஃபியூசென், பவேரியா அரசு, ஜெர்மன் கூட்டமைப்பு
(Fssen, Kingdom of Bavaria, German Confederation)
✠இறப்பு: அக்டோபர் 4, 1867
நியூ ஓர்லியன்ஸ், லூசியானா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
(New Orleans, Louisiana, United States)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 9, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)
✠முக்கிய திருத்தலங்கள் :
ஆசிர்வதிக்கப்பட்ட ஃபிரான்சிஸ் சேவியர் சீலோஸ் தேசிய
திருத்தலம், C.Ss.R., தூய மரியாள் விண்ணேற்பு ஆலயம், நியூ
ஓர்லியன்ஸ், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா
(National Shrine of Blessed Francis Xavier Seelos, C.Ss.R.,
St. Mary's Assumption Church, New Orleans, Louisiana, United
States)
✠நினைவுத் திருநாள் : அக்டோபர் 12
அருளாளர் ஃபிரான்சிஸ் சேவியர் சீலோஸ், ஐக்கிய அமெரிக்க
நாடுகளின் எல்லைகளில் மறைப் பணியாற்றிய ஜெர்மன் நாட்டைச்
சேர்ந்த "மகா பரிசுத்த மீட்பரின் சபையின்" (Congregation of
the Most Holy Redeemer) துறவியும் குருவுமாவார்.
சீலோசின் தந்தையார் "மேங்க் சீலோஸ்" (Mang Seelos), ஜெர்மன்
கூட்டமைப்பிலுள்ள "பவேரியா" (Bavaria) இராச்சியத்தின்
"ஃபியூசென்" (Fssen) எனுமிடத்தைச் சேர்ந்தவர் ஆவார். சீலோசின்
தாயாரின் பெயர், "ஃபிரான்சிஸ்கா" (Franziska Schwarzenbach)
ஆகும். சீலோஸ், பிறந்த அன்றே தமது பங்கு தேவாலயமான "தூய
மேக்னஸ்" (Church of Magnus of Fssen) ஆலயத்தில் திருமுழுக்கு
பெற்றார்.
தமது பள்ளிக்கல்வியை "ஆக்ஸ்பர்க்" (Augsburg) எனுமிடத்திலுள்ள
"தூய ஸ்டீபன்" கல்வி நிறுவனத்தில் பெற்ற சீலோஸ், 1839ம் ஆண்டு,
தத்துவ கல்விக்கான தமது டிப்ளமோ பட்டத்தை "மியூனிச்"
(University in Munich) பல்கலையில் பெற்றார். குருத்துவம்
பெறுவதற்கான தமது ஆர்வத்தை சிறு வயதிலிருந்தே வெளிப்படுத்தி
வந்த சீலோஸ், 1842ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 19ம் நாள்,
மறைமாவட்ட குருத்துவ கல்லூரியில் இணைந்தார்.
ஆயிரக்கணக்கான ஜெர்மன் மொழி பேசும் புலம்பெயர்ந்து வந்த
மக்களுக்கு சரியான ஆன்மீக வழிகாட்டுதல் இல்லாமை பற்றிய
விவரங்களை "சியோன்" (Sion) என்னும் கத்தோலிக்க செய்தித்தாளில்
"மகா பரிசுத்த மீட்பரின் சபையின்" (Congregation of the Most
Holy Redeemer) துறவியர் எழுதிவந்த கடிதங்களை வாசித்து
அதன்பால் ஈர்க்கப்பட்டிருந்தார். "பவேரியாவின்" (Bavaria)
நகரான "அல்டோட்டிங்" (Alttting) என்னுமிடத்திலுள்ள "மீட்பர்"
(Redemptorists) சபைக்கு வருகை தந்த இவர், அச்சபையில் இணைவதாக
முடிவு செய்தார். 1842ம் ஆண்டு, நவம்பர் மாதம், 22ம் தேதி
"மீட்பர்" (Redemptorists) சபையில் இணைந்த சீலோஸ், ஐக்கிய
அமெரிக்க நாடுகளில் மறைப்பணியாற்றும் அனுமதி வேண்டினார்.
1843ம் ஆண்டு, மார்ச் மாதம், 17ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டின்
வடக்குப் பிராந்தியத்திலுள்ள "லீ ஹாவ்ர்" (Le Havre) எனும்
துறைமுகத்திலிருந்து தமது கடல்வழி பயணத்தை தொடங்கிய சீலோஸ்,
ஏப்ரல் மாதம் 20ம் தேதி, "நியு யார்க்" (New York) நகர் சென்று
சேர்ந்தார். ஒரு வருட காலத்தின் பின்னர், 1844ம் ஆண்டு,
டிசம்பர் மாதம், 22ம் நாள், தமது புதுமுக பயிற்சியையும்
(Novitiate) இறையியல் கல்வியையும் பூர்த்தி செய்த சீலோஸ்,
ஐக்கிய அமெரிக்காவின் "மேரிலேன்ட்" (Maryland) மாநிலத்திலுள்ள
"பல்ட்டிமோர்" (Baltimore) நகரிலுள்ள "தூய யாக்கோபு மீட்பர்
ஆலயத்தில்" (Redemptorist Church of St. James) குருத்துவ
அருட்பொழிவு பெற்றார்.
குருத்துவ அருட்பொழிவு பெற்ற சீலோஸ், அமெரிக்காவின்
"பென்சில்வேனியா" (Pennsylvania) மாநிலத்தின் தென்மேற்கு
பிராந்திய நகரான "பிட்ஸ்பர்க்" (Pittsburgh) நகரின் தூய
ஃபிலோமினா தேவாலய (St. Philomena's Church) பங்கில் ஒன்பது
வருடங்கள் பணியாற்றினார். ஆரம்பத்தில், மீட்பர் சபையின்
தலைவரான "தூய ஜான் நியூமனுடைய" (St. John Neumann) உதவி
பங்குத் தந்தையாகவும், பின்னர் தாமே மீட்பர் சபையின்
தலைவராகவும் (Superior of the Redemptorist community)
பணியாற்றினார்.
மீட்பர் சபை பயிற்சி மாணவர்களின் தலைவராகவும் (Master of
novices) பணியாற்றிய இவர், மறை போதனை பணிகளிலும் தம்மை
அர்ப்பணித்துக்கொண்டார். தூய ஜான் நியூமன் தம்மை ஆன்மீக
வழிகாட்டியாகவும், ஒப்புரவாளராகவும் வழிநடத்தியதாக சீலோஸ்
கூறுகிறார்.
சீலோசின் அன்பும், உள்ளார்ந்த இரக்கமும், பொறுமையும்,
தேவையிலுள்ளோர்க்கு பதிலளிக்கும் விதமும் இவருக்கு
பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பை அளித்தன. ஆங்கிலம்,
ஃபிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளில் பாவமன்னிப்பு அருளும்
ஒப்புரவும் இவரது மேன்மைக்கு காரணமாயின. கறுப்பர் வெள்ளையர்
என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஒப்புரவு அருட்சாதனம்
வழங்கினார்.
1860ம் ஆண்டில் ஒருமுறை, பிட்ஸ்பர்க் ஆயர் வேட்பாளராக சீலோஸ்
முன்மொழியப்பட்டார். திருத்தந்தை ஒன்பதாம் பயசால் (Pope Pius
IX) அதிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர், 1866ம் வருடம்வரை
ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் ஊரூராய்ச் சென்று மறைபோதனை
செய்யும், நாடோடி மறைப்பணியாளராக "கனெக்டிகட்" (Connecticut),
"இல்லினாய்ஸ்" (Illinois), "மிச்சிகன்" (Michigan), "மிசூரி"
(Missouri), "நியூஜெர்சி" (New Jersey), "நியூயார்க்" (New
York), "ஓஹியோ" (Ohio), "பென்சில்வேனியா" (Pennsylvania),
"ரோட் தீவு" (Rhode Island) மற்றும் "விஸ்கான்சின்"
(Wisconsin) ஆகிய மாநிலங்களில் பணியாற்றினார்.
1866ம் ஆண்டு, "நியூ ஓர்லியான்ஸ்" (New Orleans) மாநிலத்தின்
"லூய்சியானா" (Louisiana) நகரிலுள்ள "தூய மரியாளின்
விண்ணேற்பு" (St. Mary's Assumption Church) ஆலயத்தில்
பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். நியூ ஓர்லியான்சில் அவரது
ஊழியங்கள் சுருக்கமானதாகவே இருந்தன. அதே வருடம் செப்டம்பர்
மாதம் ஏற்பட்ட "மஞ்சள் ஜூரம்" (Yellow Fever) எனும் கொள்ளை
நோயால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றதாலும் அவர்களுக்கு
சேவைகள் செய்யச் சென்றதாலும் தந்தை சீலோசும் அந்த நோயால்
பாதிக்கப்பட்டார். ஜூரத்தின் தாக்கம் குறையாத நிலையில், பல
வாரகாலம் படுக்கையிலிருந்த தந்தை சீலோஸ், 1867ம் ஆண்டு,
அக்டோபர் மாதம் 4ம் தேதி மரித்தார். அவர் மரிக்கையில் அவருக்கு
வயது 48. |
|
|