Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜஸ்டினா ✠(St. Justina of Padua)
  Limage contient peut-tre : 1 personne  
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 07)
✠ புனிதர் ஜஸ்டினா ✠(St. Justina of Padua)

 மறை சாட்சி :(Martyr)

பிறப்பு : ---

இறப்பு : கி.பி. 304

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்கிய திருத்தலம் :
புனிதர் அந்தோனியார் ஆலயம், லிஸ்பன் நகர்
(Church of Saint Anthony of Lisbon)

பாதுகாவல் :
பதுவை, பல்மநோவா
(Padua; Palmanova)

புனிதர் ஜஸ்டினா, பதுவை நகரின் பாதுகாவலரும், கத்தோலிக்க புனிதரும் ஆவார். இவர், பதுவை நகரின் அரச பரம்பரையில் பிறந்தவரும் கன்னியரும் ஆவார். அவர் இளவரசியாக முடி சூடப்பட்டவர் என்றும், மார்பிலே கூரிய வாள் ஒன்றினை அணிந்திருந்தவர் என்றும் கிறிஸ்தவ கலைகள் கூறுகின்றன.

ஆறாம் நூற்றாண்டில், பதுவை நகரின் பொதுநிலையினர், புனித ஜஸ்டினாவுக்காக ஒரு பேராலயத்தினை அர்ப்பணித்தனர். 'எப்ரேஷியன் பேராலயத்தின்' (Euphrasian Basilica) 'பிரிஸ்பிட்டரி வளைவின்' (Presbytery arch) இடது பக்கத்திலுள்ள மறைசாட்சிகளாய் மறைந்த அருட்கன்னியரின் சித்திரங்களில் இவரது சித்திரமும் உள்ளது. 'சாண்ட அப்போலினரிஸ் (Sant'Apollinare Nuovo) பேராலயத்தில் நடைபெறும் அருட்கன்னியரின் ஊர்வலத்தில் இவரும் இடம்பெற்றுள்ளார்.

ஜஸ்டினா, அப்போஸ்தலர் புனித பேதுருவின் சீடர் என்று இடைக்கால சரித்திர வரலாறுகள் கூறுகின்றன. பதுவை மறை மாவட்டத்தின் முதலாம் ஆயரான 'புனித ப்ராஸ்டாசிமஸ்' (Saint Prosdocimus) ஜஸ்டினாவின் ஞானத்தந்தை என்றும் கூறுகின்றன. 'புனித ப்ராஸ்டாசிமஸின்' வரலாறு, அவர் அப்போஸ்தலர் புனித பேதுருவால் அந்தியோக்கியாவிலிருந்து அனுப்பப்பட்டவர் என கூறுகிறது.

எப்படியாகினும், மேற்கூறப்பட்ட கூற்றுக்கள் நடைமுறையில் சாத்தியமற்றவை. காரணம், கி.பி. 304ம் ஆண்டு வாழ்ந்த இளம்பெண்ணான ஜஸ்டினாவுக்கு கி.பி. 100ம் ஆண்டு மரித்த புனிதர் ப்ராஸ்டாசிமசை சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை.

பதுவையின் பாதுகாவலரான ஜஸ்டினா, புனித மாற்குவின் பிறகு, வெனிஸ் நகரினதும் இரண்டாம் பாதுகாவலராவார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா