✠ புனிதர் எட்வர்ட் ✠(St. Edward the
Confessor) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(அக்டோபர்
/
Oct -
13) |
✠ புனிதர் எட்வர்ட்
✠(St. Edward the Confessor)
✠ இங்கிலாந்து அரசர்/ ஒப்புரவாளர்
:
(King of England, Confessor)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலேய திருச்சபை
(Church of England)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
✠பிறப்பு : கி.பி. 1003
இஸ்லிப், ஆக்ஸ்ஃபோர்ட்ஷைர், இங்கிலாந்து
(Islip, Oxfordshire, England)
✠இறப்பு : ஜனவரி 5, 1066 (வயது
63)
லண்டன், இங்கிலாந்து
(London, England)
✠புனிதர் பட்டம் : ஃபெப்ரவரி 7,
1161
திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்
(Pope Alexander III)
✠பாதுகாவல் :
கடினமான திருமணங்கள், இங்கிலாந்து, இங்கிலாந்து அரச குடும்பம்,
அரசர்கள்
✠நினைவுத் திருநாள் : அக்டோபர்
13
புனிதர் எட்வர்ட், கி.பி. 1042ம் ஆண்டு முதல், 1066ம் ஆண்டுகளுக்கிடையே
இங்கிலாந்து நாட்டை ஆண்ட "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxon kings
of England) அரச வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசராவார்.
இவர், "ஈதல்ரெட" மற்றும் "எம்மா" (Ethelred the Unready and
Emma of Normandy) ஆகியோரின் புதல்வராவார். ஈதல்ரெட்'டின் ஏழாவது
புதல்வரான இவர், ஈதல்ரெட்'டின் இரண்டாவது மனைவியான எம்மா'வின்
தலைமகனாவார்.
இங்கிலாந்து நாட்டில் அரசராக முடிசூட்டப்பட்ட இவரது ஆட்சியில்
மக்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார்கள். இவர் இளமையில்
மிகவும் துன்பப்பட்டவர். இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டு
ஃபிரான்ஸ் நாட்டிற்கு போய் நார்மண்டி மாகாணத்தில் சுமார் இருபத்தைந்து
ஆண்டு காலம் வாழ்ந்தார்.
அரசரான போது இவருக்கு வயது 40. செபித்து பிற சிநேகச் செயல்கள்
செய்வார். மக்களை சாந்தத்துடனும் நீதியுடனும் விவேகத்துடனும்
ஆண்டு வந்தார். கைவிடப்பட்டு சந்நியாச மடங்கள் திரும்பவும் தொடங்கப்பட்டன.
மக்களுக்கு நல்ல கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டது. நியாயமான ஒரு
அரசரை எதிரிகள் தாக்கியபோது முதன்முறை இவர் உதவிக்குச்
சென்றார் 23 ஆண்டுகளாக நாட்டை ஆண்டார். நாடு செழித்தோங்கியது.
அநியாயமாக யாரும் தண்டிக்கப் பட்டதில்லை. தேவையற்ற வரிகளைத் தள்ளிவிட்டார்.
மக்கள் இவரை தெய்வமாக போற்றினார்கள். தம் நாட்டுக்கு வர இருந்த
தீமைகளை இவர் முன்னறிவித்தார். "நாட்டில் தீமை அதிகரித்து நிரம்பி
வழியும் போது கடவுள் கோபத்துடன் தீய சக்திகளை நம் நாட்டு மக்களிடையே
அனுப்புவார். அவை மக்களை கடுமையாக தண்டித்து உபாதிக்கும். பச்சைக்கிளை
தாய் மரத்திலிருந்து பிரிந்து மூன்று பர்லாங்கு தூரம் கொண்டு
செல்லும், என்றாலும் இறுதியில் இறக்கம் நிறைந்த கடவுள் மரத்துடன்
அதை இணைத்து விடுவார். பின் அது செழித்து ஓங்கி கனி தரும்" என்று
அவர் முன்னறிவித்தது பின்னர் நிறைவேறலாயிற்று.
இவரது ஆட்சிக்காலத்தில், இங்கிலாந்தின் "ரோமநீஸ்க் திருச்சபையின்"
(Romanesque church in England) "வெஸ்ட்மின்ஸ்டர் மடாலய"த்தின்
(Westminster Abbey) கட்டுமானப் பணிகளின் மீது அதீத அக்கறை இருந்தது
வெளிப்படையாக தெரிந்தது. கி.பி. 1042ம் ஆண்டு முதல், 1052ம் ஆண்டுகளுக்கிடையே,
"அரச அடக்க தேவாலயமாக" தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள்,
இவரது மரணத்தின் பின்பே, கி.பி. சுமார் 1090ம் ஆண்டு, நிறைவடைந்தன.
எட்வர்ட், இங்கிலாந்து நாட்டை ஆண்ட "ஆங்கிலோ-சாக்ஸன்"
(Anglo-Saxon) வம்சத்தின் ஒரே புனிதர் ஆவார். |
|
|