Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் வில்ஃபிரிட் ✠(St. Wilfrid)
  Limage contient peut-tre : 1 personne  
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 12)
✠ புனிதர் வில்ஃபிரிட் ✠(St. Wilfrid)

 யார்க் மறைமாவட்ட ஆயர் :
(Bishop of York)

பிறப்பு : கி.பி. 633
நார்தும்ப்ரியா
(Northumbrian)

இறப்பு : கி.பி. 709
ஔன்டில், நார்த்தம்ப்டோன்ஷைர்
(Oundle, Northamptonshire)

புனிதர் வில்ஃபிரிட், ஆங்கிலேய பேராயரும் கத்தோலிக்க புனிதரும் ஆவார்.

இங்கிலாந்தில், "நார்தும்ப்ரியா" என்னும் இடத்தில் உயர்குடியில் பிறந்த வில்ஃபிரிட், தமது இளம் வயதிலேயே ஆன்மீக வாழ்வில் இணைந்தார். "லிண்டிஸ்ஃபார்ன்" (Lindisfarne), "காண்டர்பரி" (Canterbury), "கௌல்" (Gaul) மற்றும் "ரோம்" (Rome) ஆகிய இடங்களில் கல்வி கற்றார்.

கி.பி. 660ம் ஆனது, "நார்தும்ப்ரியா" திரும்பிய இவர், 'ரிப்பன்' (Ripon) என்னும் இடத்தில் புதிதாக நிறுவப்பட்ட மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றார்.

கி.பி. 664ம் ஆண்டு, வில்ஃபிரிட் ரோமன் நிலைகளுக்கான ஆலோசனை சபையின் பேச்சாளராக பணி புரிந்தார். பேச்சு வன்மையில் திறமை கொண்டவராக மாறிய இவர், உயிர்த்தெழுதல் பெருநாளுக்கான தேதியை கணிப்பதில் ரோமன் முறையை பின்பற்றுவதே சிறந்த முறை என்று வாதிடுவதில் வல்லவராக இருந்தார்.

நாவன்மையில் இவரது வெற்றிகள், அப்போதைய அரசரின் மகனான "அல்ஃபிரித்" (Alhfrith) என்பவரை ஈர்த்தது. இவரை நார்துப்ரியாவின் ஆயராக நியமிக்க முடிவெடுத்தார். ஆனால் வில்ஃபிரிட், "கௌல்" எனும் இடத்தில் அருட்பொழிவு பெற தீர்மானித்தார். வில்ஃபிரிட்;டின் ஆயர் நியமனம் சம்பந்தமாக அரசர் 'ஒஸ்வியு' (Oswiu) சில கேள்விகள் கேட்டதால், வில்ஃபிரிட் ஊரிலில்லாத நேரத்தில், 'அல்ஃபிரித்' தமது தந்தைக்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை தாங்க தீர்மானித்திருந்தார். ஆனால் அரசரோ, வில்ஃபிரிட் ஊர் திரும்புவதற்கு முன்னரே (Ceadda) என்பவரை வில்ஃபிரிட்'டின் இடத்திற்கு நியமித்தார்.

கி.பி. 668ம் ஆண்டு, காண்டர்பரியின் பேராயராக நியமனம் பெற்ற "தியோடர்" (Theodore of Tarsus) சியேட்டாவை (Ceadda) பதவியிலிருந்து நீக்கி, நிலைமையை சீர் செய்தார். பின்னர், வில்ஃபிரிட்'டை நார்த்உம்ப்ரியாவின் ஆயராக நியமித்தார். அதன் பின், வில்ஃபிரிட் ஒன்பது வருடங்கள் நார்த்உம்ப்ரியாவின் ஆயராக திறம்பட பணியாற்றினார். துறவு மடங்களை நிறுவினார். ஆலயங்களைக் கட்டினார். கிறிஸ்தவ ஆலயங்களின் பொது வழிபாட்டு முறைகளை மேம்படுத்தினார்.

காண்டர்பரி உயர்மறைமாவட்டம் மிகப் பெரிதாகையால், பேராயர் 'தியோடர்', தமது உயர்மறைமாவட்டத்தினை சிறு மறைமாவட்டங்களாக பிரித்து ஆங்கில திருச்சபையை புனரமைக்க முடிவெடுத்திருந்தார். இதற்கிடையே வில்ஃபிரிட், நார்த்உம்ப்ரியன் அரசனான "எக்ஃபிரித்" (Ecgfrith) என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்ட பேராயர் "தியோடர்", வில்ஃபிரிட்'டின் விருப்பத்திற்கு மாறாக தமது பேராயத்தை புனரமைக்க முயன்றார். அரசன் வில்ஃபிரிட்'டை "யார்க்" (York) வெளியேற்றியதன் பின்னர், வில்ஃபிரிட் ரோம் நகருக்கு பயணமானார். அங்கே அவர், திருத்தந்தையிடம் முறையிட்டார். திருத்தந்தை "அகத்தோ" (Pope Agatho) வில்ஃபிரிட்'டுக்கு சாதகமாக உத்தரவுகளை பிறப்பித்தார். ஆனால், அரசன் திருத்தந்தையின் உத்தரவுகளுக்கு தலைவணங்க மறுத்தார். மாறாக, வில்ஃபிரிட் ஊர் திரும்பியதும் அவரைப் பிடித்து சிறையிலடைத்தார்.

பின்னர், 'செல்சீ' (Selsey) எனும் இடத்திற்கு நாடு கடத்தப்பட்ட வில்ஃபிரிட், அங்கே சில வருடங்களை கடத்தினார். அங்கே, பல துறவு மடங்களை கட்டினார். தமது மன வேறுபாடுகளைக் களைந்த வில்ஃபிரிட்'டும் தியோடரும் சமாதானமாயினர். தியோடர் அவரை மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்குமாறு அரசனிடம் வேண்டினார். அரசனும் அதற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால் கி.பி. 691ம் ஆண்டு, மீண்டும் வில்ஃபிரிட்'டை மெர்சியா'வுக்கு (Mercia) நாடு கடத்தினார். இங்ஙனம் பலகாலம் பலமுறை அலைக்கழிக்கப்பட்ட வில்ஃபிரிட் கி.பி. 709ம் ஆண்டு மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா