Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருளாளர் ஜான் ஹென்றி நியூமன் ✠(Blessed John Henry Newman)
  Limage contient peut-tre : 1 personne, assis  
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct - 09)
✠ அருளாளர் ஜான் ஹென்றி நியூமன் ✠(Blessed John Henry Newman)

கவிஞர்/ இறையியலாளர்/ கர்தினால் :
(Poet Theologian and Cardinal Deacon)

பிறப்பு : ஃபெப்ரவரி 21, 1801
லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய அரசுகள்
(London, England, United Kingdom)

இறப்பு : ஆகஸ்ட் 11, 1890 (வயது 89)
எட்க்பாஸ்டன், பிர்மிங்கம், இங்கிலாந்து, ஐக்கிய அரசுகள்
(Edgbaston, Birmingham, England, United Kingdom)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
இங்கிலாந்து திருச்சபை
(Church of England)

முக்திபேறு பட்டம் : செப்டம்பர் 19, 2010
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)

முக்கிய திருத்தலம் :
பிர்மிங்கம் ஆலயம், எட்க்பாஸ்டன், இங்கிலாந்து
(Birmingham Oratory, Edgbaston, England)

பாதுகாவல் :
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (England and Wales) ஆகிய இடங்களிலுள்ள "வால்சிங்கம்" அன்னை துறவியர் குழுக்கள்
(Personal Ordinariate of Our Lady of Walsingham)

நினைவுத் திருநாள் : அக்டோபர் 9

அருளாளர் ஜான் ஹென்றி நியூமன், ஆரம்ப காலத்தில் ஆங்கிலிக்கன் (Anglican) திருச்சபையின் ஒரு குரு ஆவார். சிறந்ததோர் கவிஞரும் இறையியலாளருமான இவர், பின்னாளில் கத்தோலிக்க திருச்சபையில் "கர்தினாலாக" (Cardinal) ஆனார். மிகவும் முக்கியமான, மற்றும் சர்ச்சைக்குள்ளான இவர் கி.பி. 183ம் ஆண்டுகளில் இங்கிலாந்து முழுவதும் புகழ் பெறத்துவங்கினார். இவரின் படைப்புகள் சுயவிளக்கம் அளிக்க முயலும் கத்தோலிக்க மறையின் வாத வல்லுர்களுக்கு பெரிதும் உதவுகின்றது.

இவர் லண்டனில், ஆங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த பெற்றோருக்கு 6 குழந்தைகளுள் மூத்தவராகப் பிறந்தார். ஆக்ஸ்போர்டில் இருந்த ட்ரினிட்டி கல்லூரியில் தன் 19வது வயதில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற இவர் கி.பி. 1825ம் ஆண்டு, ஆங்கிலிக்கன் சபையின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆங்கிலிக்கன் சபைக்குருவாகவும் மெர்டன் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இவர் கிறிஸ்தவ வரலாற்றினாலும், குறிப்பாக ஹிப்போவின் அகஸ்டீனின் சுயவரலாற்று நூலினாலும் தூண்டப்பட்ட இவர், ஆங்கிலிக்கன் திருச்சபை திருத்தூதர் வழிமரபு கோருவதன் செல்லத்தகு தன்மையினைக் குறித்து சந்தேகம் எழுப்பினார். ஆங்லிக்கன் திருச்சபையும், லூத்தரன் திருச்சபையும் செய்துகொண்ட உடன்படிக்கை இவரின் சந்தேகங்களுக்கு வலுசேர்த்தது.

காலப்போக்கில் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளாலும், நடவடிக்கைகளாலும் கவரப்பட்டு, கி.பி. 1845ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம் நாள், கத்தோலிக்க மறையில் இணைந்தார். கி.பி. 1847ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருச்சபையின் குருவாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். கி.பி. 1851ம் ஆண்டு, அயர்லாந்து கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் (Catholic University of Ireland) முதல் அதிபராக திருச்சபையால் நியமிக்கப்பட்டார். கி.பி. 1879ம் ஆண்டு, மே மாதம், 15ம் தேதி, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவினால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 11 ஆண்டுகள் கர்தினாலாக பணியாற்றிய நியூமன், கி.பி. 1890ம் ஆண்டு, தமது 89 வயதில் காலமானார்.

1991ம் ஆண்டு, வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்பட்ட இவருக்கு, 2010ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 19ம் நாளன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முக்திபேறு பட்டம் அளித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா