Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர்கள் கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பினியன் ✠
(Sts. Crispin and Crispinian)
   
நினைவுத் திருநாள் : (அக்டோபர் / Oct- 25)
✠ புனிதர்கள் கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பினியன் ✠(Sts. Crispin and Crispinian)

மறைசாட்சியர்:
(Martyrs)

பிறப்பு: கி.பி. 3ம் நூற்றாண்டு

இறப்பு: கி.பி. 286

ரோம் (Rome)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபைகள்
(Eastern Orthodox Churches)
இங்கிலாந்து திருச்சபை
(Church of England)

முக்கிய திருத்தலங்கள்:
சோய்சன்ஸ் (Soissons)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 25

பாதுகாவல்:
காலணி தயாரிப்பாளர்கள்; தோல் பதனிடுபவர்கள்; கையுறை தயாரிப்பாளர்கள்; சரிகை தயாரிப்பாளர்கள்; சரிகைத் தொழிலாளர்கள்; தோல் தொழிலாளர்கள்; சேணம் தயாரிப்பாளர்கள்; நெசவாளர்கள்.

சான் கிறிஸ்பின் (San Crispin), சான் பப்லோ நகரம் (San Pablo City), பிலிப்பைன்ஸ் (Philippines)

புனிதர்கள் கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பினியன் ஆகியோர், காலணி தயாரிப்பாளர்கள், தோல் பதனிடுபவர்கள், கையுறை தயாரிப்பாளர்கள், சரிகை தயாரிப்பாளர்கள், சரிகைத் தொழிலாளர்கள்; தோல் தொழிலாளர்கள், மற்றும், சேணம் தயாரிப்பாளர்கள், நெசவாளர்கள், ஆகியோரது கிறிஸ்தவ பாதுகாவல் புனிதர்கள் ஆவர்.

ரோமப் பேரரசர் டயக்லேஷியன் ஆட்சிக்காலத்தில், கி.பி. சுமார் 285 அல்லது 286ம் ஆண்டு, இவர்களிருவரும், மறைசாட்சியராய் சித்திரவதை செய்யப்பட்டு, கொடுமையான வகையில் கொல்லப்பட்டனர்.

வரலாறு:
கி.பி. 3ம் நூற்றாண்டில், ஒரு உன்னதமான ரோமானிய குடும்பத்தில் பிறந்த கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பினியன் ஆகியோர், தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக துன்புறுத்தலிலிருந்து தப்பி ஓடியபடியிருந்தனர். அவர்களது ஓட்டம், சோய்சன்ஸ் (Soissons) நகரில் முடிவடைந்தது. அங்கு அவர்கள் கிறிஸ்தவ மதத்தை "கௌல்ஸ்" (Gauls) இன மக்களுக்கு பிரசங்கித்தனர். அதே நேரத்தில் இரவு நேரங்களில் காலணிகள் தயாரித்தனர். அவர்கள் இரட்டை சகோதரர்கள் என்று கூறப்பட்டாலும், அது நேர்மறையாக நிரூபிக்கப்படவில்லை.

அவர்கள் தங்களுடைய தேவைகளுக்கும், ஏழைகளுக்கு உதவுவதற்குமான போதுமான வருமானத்தை, தங்கள் வர்த்தகம் மூலம் போதுமான அளவு சம்பாதித்தனர். அவர்களின் இந்த வெற்றி, "பெல்ஜிக் கோல்" () ஆளுநரான "ரிக்டஸ் வரஸ்" () என்பவரது கோபத்தை ஈர்த்தது. அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கழுத்தில் மைல் கற்கள் கட்டப்பட்டு, ஆற்றில் வீசப்பட்டனர். இருப்பினும், அதிலிருந்தும் தப்பிப்பிழைத்த அவர்கள், சக்கரவர்த்தியின் உத்தரவின்படி, தலை துண்டிக்கப்பட்டு, கி.பி. 285286ல் கொல்லப்பட்டனர்.

கி.பி. 16ம் நூற்றாண்டின் புராணக்கதை ஓன்று, அவர்களை "ஃபேவர்ஷாம்" (Faversham) நகரத்துடன் இணைக்கிறது.

புனிதர்கள் கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பினியன் ஆகியோரின் நினைவுத் திருநாள், அக்டோபர் 25 ஆகும். இரண்டாம் வத்திக்கான் (Second Vatican Council) சபையைத் தொடர்ந்து, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய வழிபாட்டு நாட்காட்டியிலிருந்து (Catholic Church's Universal Liturgical Calendar) இந்த நினைவுத் திருநாள் அகற்றப்பட்டாலும், இவ்விரு புனிதர்களும் அந்த நாளில் இன்றும் ரோமன் திருச்சபையின் மறைசாட்சிய (Roman Church's Martyrology) பதிப்பில் நினைவுகூரப்படுகிறார்கள்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இந்த புனிதர்களின் கல்லறைகளுக்கு மேல் சோய்சன்ஸ் நகரில், ஒரு அழகிய பேராலயம் அமைக்கப்பட்டது. மேலும், புகழ்பெற்ற பொற்கொல்லர் புனித எலிஜியஸ் (St. Eligius) புனித கிறிஸ்பினியனின் தலைக்கு ஒரு விலையுயர்ந்த திருத்தலத்தை உருவாக்கினார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா