1. திருவெளிப்பாடு என்னும்
நூலை
எழுதியவர் யார்?
யோவான் (1:1)
2. திருவெளிப்பாடு
நூலின் உட்பிரிவுகள் யாவை?
1. முன்னுரை (நூன்முகம்) 1:1-3
2. ஆசியாவிலுள்ள திருச்சபைகளுக்குக் கடிதம் 1:4 -
3:22
3. ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு 4:1 - 8:1
4. ஏழு எக்காளங்கள் 8:2 - 11:19
5. அரக்கப் பாம்பும் இரு விலங்குகளும்12:1 - 13:18
6. காட்சிகள் 14:1 - 15:8
7. ஏழு கிண்ணங்கள் 16:1-21
8. பாபிலோனின் அழிவும் எதிரிகளின் தோல்வியும் 17:1
- 20:15
9. புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் 21:1 -
22:15
10. முடிவுரை 22:16-21
3. இந்நூல் எப்பொழுது எழுதப்பட்டது?
தொனிசியன் காலத்தில்
கிபி. 89-96.
4. யோவான் இத்திருமுகத்தை எழுதும்
பொழுது
அவர் இருந்த இடம் எது?
பத்மு தீவில்
இருந்தார். (1:9)
5.
இந்நூலை யோவானின் நோக்கம் என்ன?
துன்புறும் காலங்களில் கிறிஸ்தவர்கள் மனஉறுதியோடு
இருக்கவேண்டும்
என்பதை வலியுறுத்துவதும் தான் இவரது
நோக்கமாகும்.
6. இந்நூலில் 7 என்னும் எண் எத்தனை முறை இடம்
பொற்றுள்ளது?
52 முறை
7. 7 என்னும் எண் எதைக் குறிக்கிறது?
இது முழுமையைக் குறிக்கும் எண்.
8. ஏழு விண்மீன்கள் என யோவான் குறிப்பிடுவது ஏன்?
இவர் ஏழு திருச்சபைமேலும் அதிகாரம்
கொண்டவர் என்பதைக்
குறிப்பிடுகின்றார்.
9. ஏழு விண்மீன்கள் யாவை?
ஏழு திருச்சபைகளின் வானதூதுவர்கள். (1:20)
10. இவ் ஏழு திருச்சபைகளுள் முதன்முதலாக எந்தத்
திருச்சபைக்கு
எழுதினார்?
எபேசு திருச்சபைக்கு. (2:1)
11. ஆட்டுக்குட்டி என யோவான் யாரைக்
குறிப்பிடுகின்றார்?
இயேசுவை.
12. இந்நூலில் இயேசு வேறு எவ்வாறெல்லாம்
குறிப்பிடப்படுகின்றார்?
குரு (1:12)
சிங்கம் (5:5)
ஆட்டுக்குட்டி (5:6)
குழந்தை (12:5)
மணமகன் (22:12)
விண்மீன் (21:13)
13.
கிறிஸ்தவர்கள் தங்களுக்கு எதிராகச் செயல்பட்ட
உரோமைஆட்சியாளர்களின்
கைகளில் அனுபவிக்கின்ற துன்பத்திற்குச்
சின்னமாய் இருப்பவை யாவை?
ஏழு முத்திரைகள் (திவெ அதி 7,8)
ஏழு எக்காளங்கள் (திவெ அதி 8, 9)
ஏழு கிண்ணங்கள் (திவெ அதி 16).
14.
துன்புறுத்துவோருக்குச் சின்னங்களாய் இருப்பவை யாவை?
விலங்கு (திவெ: அதி 13)
விலைமகள் (திவெ: அதி 17)
பாபிலோன் (திவெ: அதி 18).
15. கதிரவனை ஆடையாக உடுத்திய பெண் யாரைக்
குறிப்படுகிறது?
கதிரவனை ஆடையாக உடுத்திய பெண் (திவெ
12:1-16) புதிய இஸ்ரயேலாகிய
திருச்சபையைக் குறித்து நிற்கிறார்.
16.ஆட்டுக்குட்டிக்கு ஏழு கொம்புகளும், ஏழு கண்களும்
இருந்தன என
ஆசிரியர்
சுட்டிக்காட்டுவது என்ன?
ஏழு கண்கள்
- இயேசுவின் ஞானம்
ஏழு கொம்புகள் - இயேசுவின் அதிகாரம்
17. இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள சில எண்ணிக்கைகளின்
அர்த்தம் என்ன?
எண் 3 - கடவுளைக் குறிக்கின்றது
எண் 4 - உலகைக் குறிக்கிறது.
எண் 6 - குறைவைக் குறிக்கிறது.
எண் 7 - முழுமையை குறிக்கிறது.
எண் 12
- அப்போஸ்தலர்களைக் குறிக்கிறது.
எண்
10, 1000 - எண்ணற்றவையைக் குறிக்கிறது.
18. அல்பா-ஒமேகா என்பதன்
பொருள் என்ன?
கிரேக்க மொழியின் முதல் எழுத்து, கடைசி எழுத்து ஒமேகா,
இவை முதலும்
முடிவடையும் குறிக்கின்றது. இவை கடவுளையும்
குறிக்கின்றது.
19. கிறிஸ்துவின் வருகையைப் பற்றி
அவர் கூறுவது என்ன?
அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும்
முடிவும் நானே (22:13)
|
|