Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(7) கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்

1) கொரிந்தியருக்கு எழுதிய மொத்தத் திருமுகங்கள் எத்தனை?
      2
திருமுகங்கள்

2) இத் திருமுகங்களை எப்பொழுது எழுதினார் ?
      கி.பி. 57ல்

3) இத் திருமுகங்களை பவு ல் எங்கிருந்து எழுதினார் ?
     எபேசு நகரத்தில் இருந்து எழுதினார் .

4) பவுல் கொரிந்து மக்களுக்கு விடுத்த முதல் வேண்டுகோள் என்ன?
    "நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம்.  
     ஒரேமனமும்  ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். (1:10)

5) பவுல் கொரிந்து நகரில் யாருக்கு திருமுழுக்கு வழங்கினார் ?
    கிறிஸ்பு, காயூ மற்றும் தேவானா வீட்டாருக்கும். (1:14)

6) பவுல் தான் அனுப்பப்பட்டதன் நோக்கம் என்ன என்று கூறுகிறார் ?
     நற்செய்தி அறிவிக்கவே அனுப்பப்பட்டேன் என்கிறார் . (1:17)

7) பவுல் பரத்தைமையை கண்டிப்பது ஏன்?
    இதில் ஈடுபடுபவர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர் . உடல் தூய ஆவி   
     குடிகொள்ளும்கோவில். (6:18-19)

8) திருமணத்தைப்பற்றி பவுல் கற்பித்தது என்ன?
    ஆண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த மனைவியோடேயே வாழவேண்டும்: பெண்கள்
    ஒவ்வொருவரும் தம் சொந்தக் கணவரோடேயே வாழவேண்டும். (7:2)

9) திருமணமானவர்களைப் பற்றி கடவுள் பவுலுக்கு கொடுத்த கட்டளை என்ன?
   "மனைவி கணவரிடமிருந்து பிரிந்து வாழக் கூடாது" (7:10)

10) பவுல் இயேசுவைப் பார் த்திருக்கிறாரா?
      ஆம், அவரே இயேசுவைக் கண்டதாகக் கூறினார் . (9:1)

11) விடுதலைப் பயணத்தின்போது மக்கள் அழிந்ததுபோல, கடவு ள் ஒரேநாளில் 23,800பேரை  
      அழிக்கக்  காரணம் என்ன?

       அவர்கள் பரத்தைமையில் ஈடுபட்டதால். (10:8)

12) ஆண்டவரின் திருவிருந்தில் பங்கெடுப்பதைப் பற்றி, பவுல் கூறுவது என்ன?
      "எவராவது தகுதி யற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால், அல்லது ஆண்டவரின்
       கிண்ணத்தில்  பருகினால், அவர்  ஆண்டவரின் உடலுக்கும், இரத்திற்கும் எதிராகக் குற்றம் 
        புரிகிறார் . (11:27)

13) நாம் வெவ்வேறு கொடைகளை பெற்றுள்ளவராயினும், ஒற்றுமையோடு உழைக்கவேண்டும்  
      என்பதை, பவு ல் எவ்வு தாரணத்தைக் கொண்டு தெளிவுபடுத்துகிறார் ?

      உடல் ஒன்றே: உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாக இருப்பது  
      போல, கிறிஸ்துவும் இருக்கிறார் " என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்  (12:12)

14)"கொடைகளில் எல்லாம் தலை சிறந்த கொடை" என பவுல் எதைக் குறிப்பிடுகிறார் ?
         அன்பு (13:13)

15) இயேசு உயிர்த்த பிறகு அவர்  முதன்முதலில் யாருக்கு தோன்றினார் ?
       கேபாவுக்கு தோன்றினார் . (15:5)

16)"தாம் திருத்தூதர்  என அழைக்கப்பெறத் தகுதியற்றவன்" என்று பவுல் கூறக் காரணம் என்ன?
        ஏனெனில் அவர்  கடவுளின் திருச்சபையை துன்புறுத்தினார் .(15:9)

17) ஆண்டவரிடம் அன்பு செலுத்தாததைப் பற்றி பவுல் கூறுவது என்ன?
      "அவர்  சபிக்கப்படுக" என்கிறார் . (16:22)

18)"மாறனாத்தா" என்பதன் பொருள் என்ன?
      "ஆண்டவரே வருக" என்று பொருள். (16:22)
 

 நீதியும் நேர்மையும் நிறைந்தவளே இறையருள் எமக்காய் வேண்டுமம்மா