1. யாக்கோபு
என்பவர் யார்?
மரபுக் கருத்துப்படி, யாக்கோபு ஆண்டவரின்
சகோதரர்:
அப்போஸ்தலர்களிள்
ஒருவர்.
2. யாக்கோபு திருமுகத்தை எப்பொழுது
எழுதினார்?
கி.பி. 50
3. தூய்மையானதும் மாசற்றதுமான
சமயவாழ்வு எது என யாக்கோபு
கூறுகிறார்?
துன்புறும் அனாதைகளையும், கைம்பெண்களையும் கவனித்தலும்,உலகத்தால்
கறைபடாதபடி தம்மை காத்துக்கொள்வதும் ஆகும்.(1:27)
4. அடுத்திருப்பவர்மேல் அன்பு கூர்வதைப்பற்றிய சட்டம் என்ன?
உன்மீது நீ அன்பு கூர்வதுபோல், உனக்கு
அடுத்திருப்பவர்
மீதும் அன்பு
கூர்வாயாக (2:8)
5. ஒருவர் சட்டம் ஒன்றில் மட்டும் தவறினால்
அவர் குற்றமானவரா?
ஆம் , அவர் அனைத்தையும் மீறிய
குற்றத்திற்குள்ளாவார். (2:10)
6. செயலில்லாத நம்பிக்கையினால் என்ன பலன்?
ஒரு பலனும் இல்லை.
உயிர் இல்லாத உடல்போல, செயல்களில்லாத
நம்பிக்கையும் கெட்டதே. (2:26)
7. செயல்களில்லாத நம்பிக்கை கெட்டது என்பதை நிரூபிக்க
யாக்கோபு தரும்
உதாரணம் என்ன?
ராக்காபு என்ற விலை மகள்
தூதர்களை வரவேற்று வேறுவழியாக
அனுப்பிய
போது செயல்களால் அல்லவா கடவுளுக்கு
ஏற்புடையவர் ஆனார். (2:25)
8. பலர் போதகர்களாக மாறவேண்டாம் என யாக்கோபு கூறக் காரணம்
என்ன?
ஏனெனில் போதகர்கள் மிகக் கண்டிப்பாக தீர்ப்புக்கு ஆளாவார்கள்.
(3:1)
9. தந்தையாகிய ஆண்டவரைப் போற்றுவதும்
தூற்றுவதும் எது?
நாவு. (3:9
10. விண்ணில் இருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு என்ன?
தூய்மை. (3:17)
11. யாக்கோபு நோயுற்றோர்களைப் பற்றிக் கூறுவது என்ன?
உங்களுள் யாரேனும் நோயுற்று இருந்தால் திருச்சபையின்
மூப்பர்களை
அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது
பெயரால்
அவர்
மீது
எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். (5:14)
|
|