1) திருத்தூதர் பணிகள் என்னும்
நூலை எழுதியவர் ?
லூக்கா
2) இயேசு எம்மைலையில் இருந்து விண்ணேற்றம்
அடைந்தார்?
ஓலிவமலையில் இருந்து.( 1:12)
3)
யூதாசுக்குப் பதிலாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டது
யார்?
மத்தியா. (1:26)
4) மத்தியாவைத் தேர்ந்தெடுப்பதற்கு எத்தனை
பேர் கூடியிருந்தனர்?
120பேர். (1:15)
5) பெந்தக்கோஸ்து நாளில்
தூய ஆவி அப்போஸ்தலர்கள்மீது எவ்வடிவில் இறங்கி
வந்தது?
நெருப்பு வடிவில். (2:3)
6) பெந்தக்கோஸ்து நாளன்று திருமுழுக்குப்
பெற்றவர் எத்தனை பேர் ?
ஏறக்குறைய மூவாயிரம்
பேர். (2:41)
7) பெந்தக்கோஸ்து என்னும் சொல்லுக்கு பொருள் என்ன?
50வது நாள் என்பது பொருள். (2:1)
8) பெந்தக்கோஸ்து திருவிழா என்றால் என்ன?
இது அறுவடைக்காக நன்றி செலுத்தும்
யூதத் திருவிழா. பாஸ்காத்
திருவிழாவுக்குப் பின், 50வது நாள் இது கொண்டாடப்படுகிறது. (2:1)
9) கால் ஊனமுற்ற ஒருவர், பேதுறுவால் குணமடையும் பொழுது,
அவர் எங்கே
இருந்தார்?
கோவிலில் "அழகுவாயில்" என்னும் இடத்தில்
இருந்தார். (3:2)
10) கால் ஊனமுற்றவருக்கு அப்பொழுது வயது என்ன?
40 வயதுக்கு
மேற்பட்டவர். (4:22)
11) சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்பவருக்கு, திருத்தூதர்கள்
வழங்கிய
பெயர் என்ன?
பர்ணபா (4:36)
12) பர்ணபா என்னும் பெயருக்கு பொருள் என்ன?
ஊக்குவிக்கும் பண்பு
கொண்டவர் (4:36)
13) பேதுறுவிடம் பொய் சொல்லி மரிந்த இருவரின்
பெயர் என்ன?
அனனியாவும், சப்பிரா. (5:1)
14) திருத்தூதர்களுக்கு எதிராகப் பேசிய பரிசேயரின்
பெயர் என்ன?
சமாலியேல். (5:34)
15) திருத்தூதர்களுக்கு உதவியாக நியமிக்கப்பட்ட ஏழு
பேர் யாவர்.
தேவான்
பிலிப்பு
பிரக்கோர்
நிக்கானோர்
சீமோன்
பர்மனா
அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா (6:5)
16) தேவான் மீது கல் எறிந்தவர்களின் மேல் உடைகள் பாதுகாப்பாக யாரிடம்
ஒப்படைக்கப்பட்டது?
பவுல் என்னும் இளைஞரிடம். (7:58)
17) தேவான் மீது கல் எறிந்தபோது
அவர் செய்த செபம் என்ன?
"ஆண்டவராகிய இயேசுவே! எனது ஆவியை ஏற்றுக் கொள்ளும். (7:59)
"ஆண்டவரே! இந்தப்பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும். (7:60)
18) சீமோன் என்னும் மந்திரவாதியை பேதுறு சபிக்கக் காரணம் என்ன?
அவன் கடவுளது கொடையை பணம் கொடுத்து வாங்க எண்ணியதால்தான்
(8:20)
19) பிலிப்பு பாலை நிலப் பாதையில் யாருக்கு திருமுழுக்கு
வழங்கினார்?
எத்தியோப்பிய அரசியாக கந்தகியின் நிதி
அமைச்சர். அவர் ஓர் அலி (8:27)
20) சவுல் தமஸ்கு
நகர் அருகில் தரையில் விழும் பொழுதுஇ
அவர் கேட்ட குரல்
ஒலி என்ன?
"சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய். (9:4)
21) சவுல் மீண்டும் பார்வை பெற்றது எப்பொழுது?
அனனியா சவுல்மீது கைகளை வைத்தபொழுது. (9:17)
22) சவுலை திருத்தூதர்களிடம் அறிமுகம் செய்தது
யார்?
பர்ணபா. (9:27)
23) லித்தாவில் பேதுறு செய்தது என்ன?
முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயாவைக்
குணப்படுத்தினார்.
(9:34)
24) பேதுறு யோப்பா நகரில் உயிர்ப்பித்த பெண்ணின்
பெயர் என்ன?
தபித்தா (9:36)
25) தபித்தா என்னும் பெண்ணுக்கு வேறு
பெயர் என்ன?
தொர்க்கா (9:36)
26) "தொர்க்கா"என்பதன் பொருள் என்ன?
பெண்மான் என்பது பொருள். (9:36)
27) பேதுறு போப்பாவில் பலநாள் யாருடைய இல்லத்தில்
தங்கியிருந்தார்?
தோல் பதனிடும் சீமோன் எனபவரது வீட்டில்
தங்கியிருந்தார். (9:43)
28) செசாரியா நகரில் தங்கியிருந்த
நூற்றுவர் தலைவரின்
பெயர் என்ன?
கொர்னேலியு. (10:1)
29) கொர்னேலியுவின் இல்லத்தில் நடந்தது என்ன?
பேதுறு இயேசுவைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அவருடைய
சொற்களைக் கேட்ட அனைவர் மீதும்
தூய ஆவி இறங்கி வந்தது. (10:44)
30) இயேசுவின் சீடர்கள் கிறீஸ்தவர்கள் என்று முதல் முறையாக எங்கு
அறிவிக்கப்பட்டது?
அந்தியோக்கியாவில். (11:26)
31) உலகமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்படப் போகிறது என்று முன்னுரைத்தது
யார்?
அகபு (11:28)
32) யாக்கோபை வாளால் கொன்றது
யார்?
ஏரோது. (12:1)
33) பேதுறுவை கைது செய்யக் கட்டளை இட்டது
யார்?
ஏரோது (12:3)
34) ஏரோது பேதுறுவை கைது செய்யக் கட்டளை இட்டது ஏன்?
பாஸ்காவிழாவிற்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரித்துக்
கொலை செய்வதற்காக. (12:4)
35) பேதுறுவை சிறையில் இருந்து விடுவித்தது
யார்?
ஆண்டவரின்
தூதர். (12:7)
36) பேதுறு சிறையில் இருந்து எங்கே
சென்றார்?
மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் வீட்டுக்குப்
போனார்.
(12:12)
37) பேதுறுவிற்கு வாயில் கதவைத் திறந்து விட்டது
யார்?
ரோதி என்னும் பணிப்பெண். (12:13)
38) ஏரோது அரசன் இறந்தது எப்படி?
அவர் புளுத்துச்
செத்தார். (12:23)
39) சவுலும் பர்ணபாவும் எருசலேமில் இருந்து அந்தியோக்கியாவுக்கு
திரும்பிச்
செல்லும் பொழுது, அவர்கள் யாரை தங்களுடன் கூட்டிச்
சென்றனர்?
மாற்கு எனப்படும் யோவானை. (12:25)
40) சைப்பிரசுக்கு பயணம்
செய்தவர் யாவர்?
சவுல், பர்ணபா, மாற்கு (13:1)
41) சவுல், பர்ணபா, மாற்கு மூவரும் பாப்போவா என்னும் இடத்தில் யாரைக்
கண்டனர்?
யூதமந்திரவாதி ஒருவனை
கண்டனர். (13:6)
42) பவுல் லிஸ்திராவில் கால் ஊனமுற்றவரைக் குணப்படுத்துவதைக் கண்டு
மக்கள் சொன்னது என்ன?
"தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன"
என்றார்.
(14:11)
43) பர்ணபாவையும் பவுலையும் எவ்வாறு அழைத்தார்கள்?
பர்ணபாவை சேயுசு என்றும், பவுலை எர்மசு என்றும் அழைத்தார்கள். (14:12)
44) பர்ணபாவும் பவுலும் ஒருவரை விட்டு
ஒருவர் பிரிந்தது ஏன்?
மாற்கு எனப்படும் யோவானை தங்களோடு கூட்டிச்செல்ல அனுமதிக்காததால்
(15:37-38)
45) பவுல் தனது 2ம்
தூதுரைப் பயணத்தில், தன்னோடு யாரைக் கூட்டிச்
சென்றார்?
சீலாவைக் கூட்டிச்
சென்றார். (15:40)
46) பிலிப்பில் பவுல் யாருக்கு திருமுழுக்கு
வழங்கினார்?
லீதியா என்பவருக்கு (16:14)
47) வேற்றுத் தெய்வங்களுக்கு பீடம் அமைத்திருப்பதை பவுல் எங்கே
கண்டார்?
ஏதென்சில் (17:16)
48) பவுல் ஏதென்சில் இருந்து எங்கே புறப்பட்டுச்
சென்றார்?
கொரிந்து நகருக்கு. (18:1)
49) பவுல் கொரிந்து நகரில் யாரைச்
சந்தித்தார்?
அக்கிலாவையும் பிரிஸ்கில்லாவையும் (18:2)
50) பவுல் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொள்ளக் காரணம் என்ன?
தம்முடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக. (18:18)
51) கொரிந்து நகரில் திருமுழுக்குப் பெற்ற தொழுகைக் கூடத்
தலைவர் யார்?
கிறிஸ்பு (18:8)
52) பவுல் கொரிந்து நகரில்
எவ்வளவு காலம் தங்கியிருந்தார்?
பலநாட்கள் அங்கு
தங்கியிருந்தார். ஏறக்குறைய ஒன்றரை வருட காலம்.(18:18)
53) எபேசில் பவுல் கிறிஸ்தவர்களுக்கு செய்தது என்ன?
அவர் அவர்கள் மீது கைகளை வைத்து
தூயஆவியை அவர்கள் மேல் இறங்கச்
செய்தார்.
(19:6)
54) பவுல் எபேசில்
எவ்வளவு காலம் தங்கியிருந்தார்?
2 ஆண்டுகள். (19:10)
55) பவுலுக்கு எதிராக எபேசு மக்களைத்
தூண்டிவிட்ட, தட்டான் ஒருவரின்
பெயர்
என்ன?
தெமேத்திரியு (19:24)
56) பவுல் லூக்காவை எங்கே
சந்தித்தார்?
துரோவாவில். (20:6)
57) துரோவாவாவில் பவுல் உயிர்ப்பித்த இளைஞனின்
பெயர் என்ன?
யூத்தீவு
(20:9)
58)
யூத்தீவு எப்படி
இறந்தார்?
அவர் தூக்கத்தில் மூன்றாம் மாடில் இருந்து கீழே விழுந்து
இறந்தார்.
(20:9)
59) பவுல் மிலேத்துவில் யாரைச்
சந்தித்தார்?
எபேசு நகர மூப்பர்களைச்
சந்தித்தார். (20:17)
60) பவுல் எருசலேமில் கைது செய்யப்படுவாரென முன்னறிவித்தது
யார்?
அகபு (21:10)
61) பவுல் செசாரியாவில் தங்கியிருந்த இடம் எது?
பிலிப்பின் வீட்டில். (21:8)
62) பவுல்
ஜெருசலேமில் எங்கே
தங்கியிருந்தார்?
மினாசோவின் வீட்டில். (21:16)
63) பவுல் பிறந்த இடம் எது?
தர்சு நகரம். (22:3)
64) பவுல் திருச்சட்டங்களை யாரிடம் பயிற்சி
பெற்றார்?
கமாலியேல் என்பவரிடம். (22:3)
65) பெலிக்சு
என்பவர் யார்?
யுதர்களின்
ஆளுநர் (23:24)
66) பவுலுக்கு எதிராக வழக்குரைக்க செசாரியாவிலிருந்து வந்த தலைமைக்குரு
யார்?
தலைமைக்குரு அனனியா. (24:1)
67) பெலிக்சின் மனைவி
பெயர் என்ன?
துருசில்லா. (24:24)
68) பேலிக்சுக்குப் பிறகு
யூத ஆளுனராகப் பதவியேற்றது
யார்?
பொர்க்கியு பெஸ்து. (24:27)
69) பவுல் ரோமை நகருக்கு அனுப்பப்பட்டது ஏன்?
தம்மை உரோமுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டதால். (24:27)
70) பவுலோடு உரோமை நகருக்குச் சென்ற
நூற்றுவர் படைத்தலைவன்
யார்?
யூலியு. (27:1)
71) மால்தா தீவில் நடந்தது என்ன?
பவுல் சென்ற கப்பல் உடைந்து நாசமானது. (28:1)
72) மால்தா தீவின்
தலைவர் யார்?
புப்பிலியு.
73) பவுல் மால்தா தீவில்
எவ்வளவு காலம் தங்கியிருந்தார்?
மூன்று மாதங்கள். (28:11)
74) பவுல் உரோமை நகரில் எத்தனை ஆண்டுகள்
தங்கியிருந்தார்?
2 ஆண்டுகள். (28:30) |
|