Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(15)   திமோத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் 

   

1. திமோத்தேயுவுக்கு எழுதிய இத் திருமுகம் எக்கால கட்டத்தில் எழுதப்பட்டது?
    கி.பி. 65மு. ஆண்டில்

2. இத்திருமுகம் எவ்விடத்திலிருந்து எழுதப்பட்டது?
     மாசிடோனியாவில்

3. இத்திருமுகம் எழுதப்படும்போது திமோதேயு இருந்த இடம் எது?
     எபேசு நகர்

4. திருச்சட்டத்தின் நோக்கம் என்ன?
    ஒழுக்கம் கெட்டு நடப்போர்களைத் தண்டிப்பதற்காகவே.(1:9)

5. இயேசுக்கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கம் என்ன?
      பாவிகளை மீட்க. (1:15)

6. பவுல் சாத்தானிடம் ஒப்புவித்த இருவரது பெயர் என்ன?
     இமேமேயும், அலக்ஸ்சாந்தியும் (1:20)

7. கடவுள் மனிதருக்கிடையே இணைப்பளராக இருப்பவர் யார்?
    இயேசுக்கிறிஸ்து. (2:5)

8. பெண்கள் தங்களை எவ்வாறு நடத்திக் கொள்ள வேண்டும்?
      தன்னடக்கத்தோடு ஏற்புடைய ஆடைகளை அணியவேண்டும். (2:9)

9. திருப்பணிக்கென ஒருவரை திருநிலைப்படுத்துவதைப் பற்றி பவுல் கூறும்
    அறிவுரை என்ன?

    அவசரப்பட்டு யார்மேலும் கைகளை வைத்து திருப்பணியில் அமர்த்த வேண்டாம்
       என்கிறார். (5:22)

10. எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேரென பவுல் குறிப்பிவது எது?
      பொருளாசை. (6:10)

11. செல்வந்தர்களுக்கு பவுல் கூறும் அறிவுரை என்ன?
      நல்லதைச் செய்து, நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்த்து,
      தங்களுக்குள்ளதை தாராள மனத்தோடு பகிர்ந்தளிக்க வேண்டும். (6:18)

12. சில கிறிஸ்தவர்கள் விசுவாசத்தை விட்டு விலகிவிடுவது ஏன்?
      உலகப்போக்கிலான வீண்பேச்சுக்களும், முரண்பாடான கருத்துக்களும்தான்
       காரணம். (6:20)

 
 

மாமரியே! உன் துணைதேடி வந்தோரிலே யாரும் ஏமாறிப் போனகதை இங்கில்லையே