Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(22) பேதுறு எதுதிய இரண்டாம் திருமுகம்

   

1. இத்திருமுகத்தை எழுதிய முக்கிய நோக்கம் என்ன?
    அக்காலத்தில் பல போலிப்போதகர்கள் தோன்றி உண்மையைப் திரித்து,  
    மக்களை தவறான வழியில் வாழத் தூண்டினர். இப்படிப்பட்ட போலிப் 
    போதகர்க
ளிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே, இத்திருமுகம் எழுதப்பட்டது. 
     (2:2)

2. அப்போஸ்தலர்கள் எதனை ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்துவின்  
     வல்லமையைப் பற்றிப் பேசினார்கள்?

     இயேசுக்கிறிஸ்துவின் மாட்சிமையை நேரில் கண்டதை ஆதாரமாகக்
     கொண்டுதான். (1:16)

3. மலைமீது பேதுறு கேட்ட ஆண்டவரின் குரலொலி என்ன?
  என் அன்பார்ந்த மைந்தன் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறோன். (1:17)

4. பாவம் செய்த வானதூதர்களை கடவுள் தண்டித்தாரா?
    ஆம். அவர்
களை காரிருள் நரகில் தள்ளினார். (2:4)

5. இவ்வுலகம் எவ்வாறு முடிவடையும் என பேதுறு கூறுகிறார்?
    நெருப்பினால் இவ்வுலகம் தீக்கிரையாக்கப்படும். (3:10)

6. ஆண்டவர் தம் இரண்டாம் வருகையை காலம் தாழ்த்துவதைப்பற்றி பேதுறு
     தரும் விளக்கம் என்ன?

    ஆண்டவர் நமக்காக பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல் 
     எல்லோரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். (3:9)

7. பவுலின் திருமுகங்களைப் பற்றி பேதுறு கூறுவது என்ன?
    பவுலின் திருமுகங்களில் புரிந்து கொள்வதற்கு கடினமானவை சில
 உண்டு. 
    கல்வி அறிவில்லாதவர்கள் இவற்றின் பொருளை திரித்துக்கூறுகின்றனர். (3:16)
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்