Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com
விவிலியத்தை அறிவோம்
(23) யோவான் எழுதிய முதல் திருமுகம்
1. யோவான் எழுதிய மொத்தத் திருமுகங்கள் எத்தனை?
3 திருமுகங்கள்
2. இத்திருமுகத்தின் முக்கிய நோக்கம் என்ன?
அக்காலத்தில் எழுந்த சில தவறான கருத்துக்களை, குறிப்பாக
இயேசுவைப்
பற்றிய தவறான கருத்துக்களை களைவது
இத்திருமுகத்தின் முக்கிய
நோக்கமாகும்.
3. தொடக்கமுதல் இருந்து வந்த வாக்கு என்பது யாரைக்
குறிக்கிறது?
கடவுளின் மகன்.
4. பாவிகள் இறைவனில் ஒன்றித்திருக்க முடியாது என யோவான்
கூறுவது ஏன் ?
கடவுள் ஒளியாய்
இருக்கிறார். இருள் பாவத்தைச் சேர்ந்தது.
எனவே பாவிகள்
இறைவனில் ஒன்றித்திருக்க முடியாது. (1:5)
5. இறைவனில் ஒன்றித்திருக்க தேவையான கோட்பாடுகள் யாவை?
பாவத்தை விட்டுவிடுதல்
கட்டளையைக் கடைப்பிடித்தல்
உலகப்பற்றை விடுதல்
எதிர்க்கிறிஸ்தவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருத்தல். (2)
6. எதிர்க்கிறிஸ்தவன்
யார் யோவான்
கூறுகிறார்?
இயேசு (மெசியா) என
மறுப்பவர். (2:22)
7. கடவுளின் பிள்ளை
யார்?
தம் சகோதரரை அன்பு
செய்பவர். (3:12)
8. கடவுள் நம்மை எவ்வாறு அன்பு
செய்தார்?
கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பியதன் மூலமாக, நம்மை
அன்பு
செய்தார். (4:9)
9. கடவுளை அன்பு செய்வதாக சொல்லிக் கொண்டுஇ தம் சகோதர
சகோதரிகளை வெறுப்பவர் யார்?
அவர்கள் பொய்யர்கள். (4:20)
10. எல்லாப்பாவமுமே சாவுக்குரியவையா?
இல்லை. (5:17)
|
|
அன்பு வடிவமான இறை மைந்தன் தாயவள்! மைந்தன் மீட்ட மாந்தர்க்கும்
மாதாவாகினாள்