Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(9)  கலாத்தியருக்கு எமுதிய திருமுகம்


1) பவுல் கலாத்தியருக்கு இத்திருமுகத்தை எழுதக் காரணம் என்ன ?
     திருச்சட்டத்தினால் தான் மீட்புப் பெற இயலும் என வாதித்த சில  
     கிறீஸ்தவர்களையும் பிறஇனக்கிறீஸ்வர்கள் மோசேயின் சட்டமாகிய  
     விருத்தசேதனம் கடைப்பிடித்தாகவேண்டும் என்று வாதித்தவர்களையும்  
     எதிர்த்து, அவ்வெண்ணத்தை நீக்கவே பவுல் இத்திருமுகத்தை எழுதினார்.

2) மாறுபட்ட நற்செய்தி அறிப்போரைப் பற்றி பவுல் கூறுவது என்ன?
    அவர்கள் சபிக்கப்படுக என்றார். (1:9)

3) பவுல் நற்செய்தியை யாரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்?
    கிறிஸ்து அளித்த வெளிப்பாட்டின் வாயிலாக அவர் பெற்றுக் கொண்டார். (1:12)

4) பவுல் இயேசுவால் அழைக்கப்பட்டது ஏன்?
    பிறஇனத்தவருக்கு நற்செய்தி அறிவிக்க. (1:16)

5) கிறிஸ்து அருளிய திருவெளிப்பாட்டினைப் பெற்றுக் கொண்ட பிறகு பவுல் 
    எங்கே சென்றார்?

    அரேபியாவுக்கு சென்றார். (1:17)

6) பவுல் எருசலேமில் கேபாவோடு எத்தனை நாள் தங்கியிருந்தார்?
    15 நாள். (1:18)

7) பவுல் மீண்டும் ஜெருசலேமுக்கு எப்பொழுது சென்றார்?
    14 ஆண்டுகளுக்குப் பின். (2:1)

8) பவுல் இரண்டாம் முறையாக எருசலேமுக்குப் போகும் பொழுது, அவரோடு   
    சென்றவர்கள் யாவர்?

    தீத்துவையும், பர்ணபாவையும் கூட்டிச் சென்றார். (2:1)

9) திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறும் ஒரே கட்டளை எது?
    உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு  
    கூர்வாயாக. (5:14)

10) ஊனியல்பின் செயல்கள் யாவை?
      பரத்தைமை
      கெட்ட நடத்தை
      காமவெறி
      சிலை வழிபாடு
      பில்லி சூனியம்
      பகைமை
      சண்டை சச்சரவு
      பொறாமை
      சீற்றம்
      கட்சி மனப்பான்மை
      பிரிவினை
      பிளவு
      அழுக்காறு
      குடிவெறி
      களியாட்டம் (5:19-21)

11) தூய ஆவியின் கனிகள் யாவை?
       அன்பு
       மகிழ்ச்சி
       அமைதி
       பொறுமை
       அறிவு
       நன்னயம்
       நம்பிக்கை
       கனிவு
       தன்னடக்கம் (5:22)

12) இறைவார்த்தையைக் கற்றுக் கொள்வோர் எவ்வாறு நடந்து கொள்ள  
       வேண்டும்?

       இறைவார்த்தையைக் கற்றுக் கொடுப்போருக்கு தமக்குள்ள நலன்கள்  
       அனைத்திலும் பங்கு அளிக்கவேண்டும். (6:6)

13) பவுல் யாரில் பெருமை பாராட்டுகிறார்?
      இயேசுக்கிறிஸ்வின் சிலுவையில் பெருமை பாராட்டுகிறார் (6:14)
 
 

பாவிகளின் ஆதரவே பாருலகோர் ஒளியே! அன்பின் தாய் நீயே! எம் குரல் கேளம்மா